Published:Updated:

புதிய புராணம்! - இதுதான் மாயை!

புதிய புராணம்! - இதுதான் மாயை!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - இதுதான் மாயை!

ஷங்கர்பாபு - ஓவியம்: ரவிபெளட்

புதிய புராணம்! - இதுதான் மாயை!

ஷங்கர்பாபு - ஓவியம்: ரவிபெளட்

Published:Updated:
புதிய புராணம்! - இதுதான் மாயை!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - இதுதான் மாயை!

தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது முடிந்து டி.வி பெட்டியை அணைத்துவிட்டபிறகும் கொஞ்ச நேரத்துக்கு சம்பந்தப்பட்ட சீரியல் காட்சிகளின் பாதிப்பு இருக்கவே செய்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, சினிமாக் காட்சிகளும் நம்முள் பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்தக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டவை; நிஜமல்ல. ஆனால் அதில் நடிக்கும் மனிதர்கள் நிஜம், அவற்றை உருவாக்கியவர்கள் நிஜம், அவர்களது உழைப்பும் நிஜம். இதையே `மாயை’ என்கிறோம்.  உங்களுக்கு உலகம் மாயை. உங்களின் இருப்பு உலகுக்கு மாயை!

முகம் பார்க்கும் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்கிறீர்கள். பத்து வருடத்துக்கு முன் அதில் பிரதிபலித்த உங்களின் முகம் இன்றைக்கும் அப்படியே இருப்பதில்லை. அதேபோல், இப்போது காணும் முகமும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. ஆக, கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டிருக்கும் நாம் எப்படி என்றும் மாறாத நிஜமாக இருக்க முடியும்?

புதிய புராணம்! - இதுதான் மாயை!

தூக்கத்தில் கனவு காண்போம். சிறியதொரு பொழுதுக்குள் நீண்டநெடிய வாழ்க்கையின் ஆனந்தத்தையும் பயத்தையும் சோகத்தையும் அனுபவிக்கும் நமக்கு, உறக்கத்திலிருந்து விடுபடும் தருணத்தில், கண்டது கனவு என்ற உண்மை புலப்படும்!  உலக மாயையும் இப்படித்தான்!

‘மாயை என்றால் என்ன?’ என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார் நாரதர். அவரிடம், ‘‘குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள். அதைப் பருகிவிட்டு பதில் சொல்கிறேன்’’ என்றார் கிருஷ்ணர்.

நாரதர் தண்ணீர் சேகரிக்கச் செல்லும் இடத்தில் அழகிய பெண்ணைப் பார்க்கிறார்; திருமணம் செய்துகொள்கிறார்; குழந்தைகள் பிறக்கின்றன; வாழ்க்கை நீள்கிறது. ஒருமுறை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட, நாரதரின் குடும்பம் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படுகிறது.

கதறி அழுகிறார் நாரதர். அப்போது அங்கு தோன்றும் கிருஷ்ணர் நாரதரிடம் கேட்கிறார்... ‘‘தண்ணீர் என்னாயிற்று?’’ என்று!

நாரதருக்கு அப்போதுதான் உறைக்கிறது... `ஆற்றங்கரைக்கு ஏன் வந்தோம், இப்போது எதற்காகக் கதறிக்கொண்டிருக்கிறோம்' என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்குப் புன்னகையுடன் பதில் சொன்னார் கிருஷ்ண பரமாத்மா: “தேவ ரிஷியே இப்போது புரிகிறதா... இதுதான் மாயை.’’

காட்சிகள் ஒரு கணத்தில் தோன்றி மறைந்தா லென்ன... ஒரு யுகம் கழித்து மறைந்தால் என்ன...

மறையும் எனில், நிலையற்றவை எனில் அவை மாயைதானே.

இந்த இடத்தில் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். ‘இப்படியே எல்லாமும் மாயை, நிலையற்றவை என்று சொல்லிக்கொண்டிருந் தால், அது பிடிப்பற்ற வாழ்க்கைக்கு அல்லவா வழி வகுக்கும்’ என்று உங்களுக்குத் தோன்றலாம்.

சரி! இதற்குத் தீர்வுதான் என்ன?

மூன்று வழிகள் உண்டு.

1. பற்றற்று இருப்பது.


இது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

2. எல்லாமே மாயை என உலகை வெறுப்பது.

இப்படியான மனநிலை உலக வாழ்வை இன்னும் சிக்கலாக்கிவிடும்.

3. அன்பு செலுத்துவது.

இதுவே சாத்தியமான அற்புத வழி. நாரதரின் கதையும் இதையே உணர்த்துகிறது. மாயைக்குள் புகுந்த நாரதர், தன் குடும்பத்தை நேசித்தது போன்று, இருக்கும் வரையிலும் அனைவரையும் நேசிப்போம்.

கண நேரத்துக் காட்சிகளின் தொகுப்புதான் இந்த உலகம் என்று தெரிந்த பின்னர் உங்கள் முன் இருக்கும் ஒரே வழி, மாயையை எண்ணி துக்கிப்பதோ, விரக்தியுறுவதோ, வெறுப்பதோ அல்ல. சகலரிடமும் சகலத்திடமும் அன்பு செலுத்துவதேயாகும். நம்மைச் சுற்றியுள்ள செடிகொடிகள், ஆடுமாடுகள், மலைகள், மனிதர்கள் எல்லோரையும் நேசியுங்கள். அப்போதுதான், நல்ல கனவு கண்டு அதே ஆனந்தத்துடன் விழித்தெழுவது போல், மாயையை நல்லபடியாக வென்று வெளியேற முடியும்.

‘அன்பே சிவம்’ என்பது ஆன்றோர் வாக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism