Published:Updated:

அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!

அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!
பிரீமியம் ஸ்டோரி
அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!

அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!

அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!

அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!

Published:Updated:
அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!
பிரீமியம் ஸ்டோரி
அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!

திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில், திருநெல்வேலிக்குத் தெற்கே சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரு சீவரமங்கை திருத்தலம். வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் ஆகிய திருப்பெயர்கள் உண்டு இந்தத் தலத்துக்கு.

புராணங்கள் இத்தலத்தின் வேறுபல பெயர்களையும் அதற்கான காரணங்களையும் விவரிக்கின்றன. உரோமச முனிவர் தவம் செய்து திருமாலை தரிசித்ததால், உரோமச க்ஷேத்திரம்; ஸ்ரீவரமங்கையாகத் திருமகள் இங்கு வளர்ந்து பெருமாளை மணந்ததால் ஸ்ரீவரமங்கை க்ஷேத்திரம்; ஆதிசேடன் இங்கு தவம் செய்து திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகனைசேரி எனவும் அழைக்கப்படுகிறது.

ரங்களும் மலைகளும் சூழ்ந்த இடமாதலால் வானமாமலை; இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் (நான்கு + ஏரி) நான்குநேரி. அதேபோல், நான்கு ஏரிகளின் கூர்முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் இவ்வூர் அமைந்திருப்பதால் நான் + கூர் + நேரி என்ற பெயர் ஏற்பட்டு, காலமாற்றத்தால் நாங்குநேரி என்றானது எனவும் சொல்வர். வைணவப் பெரியார்கள் இத்தலத்தை `தோத்தாத்ரி' என்றே அழைக்கின்றனர்.

அருமருந்தாகும் அபிஷேக எண்ணெய்!

சிந்து நாட்டரசன் வேட்டைக்குச் சென்றபோது, அவனை எட்டுக் கால் யானை விரட்டியது. பயந்து ஓடிய மன்னன், குசானன் என்ற முனிவரது குடிலில் நுழைந்துகொண்டான். ஓடி வந்த களைப்பும் பசியும் சேர்ந்துகொள்ளவே, முனிவரின் குடிலில் விஷ்ணுவின் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த உணவைச் சாப்பிட்டான். இதையறிந்து கோபம் கொண்ட முனிவர், அவனை நாயாக மாறும்படி சபித்தார். அப்படி நாயாக மாறி, பல இடங்களில் சுற்றித் திரிந்த அரசன், நிறைவாக இந்தத் தலத்துக்கு வந்து சேற்றுத் தாமரைக் குளத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

து, கைடபன் என்ற அசுரர்கள் வதம் செய்யப்பட்டபோது, பூமியெங்கும் துர்நாற்றம் வீசியதாம். பூமித் தாய் திருமாலைத் தஞ்சம் புகுந்தாள். ‘மாசு கழுவப்பெற்றாய்’ என்று அவளுக்கு அருள்புரிந்ததுடன், வைகுண்டத்தில் இருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாய் பூமாதேவிக்குக் காட்சி தந்தாராம் திருமால்.

ர்வசி, திலோத்தமை ஆகிய இருவருக்கும் திருமால் காட்சி தந்து, தமது பக்கத்திலேயே இருக்கும் பாக்கியம் தந்தார். அத்துடன், இந்தத் தலத்தில் தமக்குச் சாமரம் வீசும் பாக்கியத்தையும் அவர்களுக்குத் தந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மாமேருபோல் எழுந்தருளியுள்ளார் என்கின்றன ஞானநூல்கள்.

திசேஷனைப் போன்று தானும் சதாசர்வ காலமும் மகா விஷ்ணுவுக்குப் பணிவிடை செய்தபடி அவருக்கு அருகிலேயே இருக்க விரும்பினார் கருடன். இதையொட்டி முனிவர்கள் தந்த அறிவுரையை ஏற்று, தோத்தாத்திரி எனும் இந்தத் தலத்துக்கு வந்து தவமியற்றினார். அதன் பலனாக திருமாலின் தரிசனம் கிடைத்ததோடு, வைகுண்ட வாசலில் பகவானுக்கு முன்பாக எப்போதும் புறப்படத் தயாராக இருக்கும் நிலையில் நிற்கும் பேற்றினைப் பெற்றார்.

1500 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில், ஐந்து நிலை ராஜ கோபுரம், இரண்டு பிராகாரங் களைக் கொண்டது. பாண்டிய மன்னர்கள் இத்தலத் துக்கு நிறைய நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.  விஜய நகர ஆட்சியாளர்களின் கவனிப்பில் இருந்த இவ்வாலயம் 14-ம் நூற்றாண்டில் வானமாமலை மடத்தின் கண்காணிப்பின் கீழ் வந்தது. வானமாமலை மடத்தின் தலைமைப் பீடமும் இத்தலத்தில் அமைந் துள்ளது. மணவாள மாமுனிகள் நியமனம் செய்த அஷ்டதிக் கஜங்களுள் இந்த வானமாமலை ஜீயர் முதன்மையானவர்.

 எட்டு சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்று இந்தத் தலம். இங்கே, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய், ஆதிசேஷன் குடைபிடிக்க, கிழக்கு முகமாக வீற்றிருந்து ராஜ அலங்காரத்தில் பட்டாபிஷேகக் கோலத்தில் மூலவராக அருள்பாலிக்கின்றார் தோத்தாத்திரி பெருமாள். அவருக்குப் பின்னால் சுயம்பு மூர்த்திகளான சூரியன், சந்திரன், பிருகு ரிஷி, மார்க்கண்டேயன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் ஏக ஆசனத்தில் வீற்றிருந்து காட்சி தருவது அரிய தரிசனம்! சுயம்பு மூர்த்திகளான கருடாழ்வார் விஷ்வக்சேனரை அர்த்தமண்டபத்தில் காணலாம்.

ற்சவர் திருநாமம்: தெய்வ நாயகன். தாயாரின் திருநாமம்: ஸ்ரீவரமங்கை நாச்சியார், உபயநாச்சியார், பெரிய பிராட்டி, பூமிபிராட்டி மூலவருடன் காட்சி தருகின்றனர். தாயார் திருமலையிலிருந்து இங்கு வந்து எழுந்தருளியதாக அறியப்படுகிறது.

ம்மாழ்வார் 11 பாசுரங்களால் இத்தலத்தின் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இவருக்கு தனிச் சந்நிதி அமைப்பில்லை. சடாரியில் சடகோபன் திருவுருவ அமைப்பே உள்ளது. தல விருட்சம்: மாமரம். தீர்த்தம்: சேற்றுத்தாமரை, இந்திர தீர்த்தம். விமானம்: நந்தவர்த்த விமானம் என்ற ஸ்ரீவைகுண்ட விமானம்.

பிரம்மா, இந்திரன், உரோமச முனி, பிருகு மகரிஷி, மார்க்கண்டேயன் ஆகியோருக்கு இங்கே பெருமாளின் தரிசனம் கிடைத்தது என்பர்.

- மு.வெ.சம்பத், படம்: டி.வி.வெங்கடேஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism