Published:Updated:

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!
பிரீமியம் ஸ்டோரி
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!

Published:Updated:
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!
பிரீமியம் ஸ்டோரி
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
  கேலி பொறுத்திடுவான் - எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
  ஆறுதல் செய்திடுவான்...


கண்ணனைப் போற்றும் மகாகவி பாரதியின் பாடல் இது. ஆம், கண்ணன் கடவுள் மட்டுமல்ல, தன்னை நம்பி வந்த அத்தனை பேருக்கும் உற்ற தோழனும்கூட. தன்னிடம் இருப்பதை மட்டுமல்ல, தன்னையே கொடுப்பதிலும் கண்ணனுக்கு நிகர் கண்ணன்தான்.

தன்னை நாடிவந்து, பிடி அவல் தந்து, அன்பு பாராட்டிய நண்பன் குசேலனை நொடிப் பொழுதுக்குள் குபேரனாக்கிய கருணை வள்ளல் அல்லவா அவன்?

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்..!

கிருஷ்ணரின் பால்யகால நண்பன் சுதாமன். இவருக்கு, `குசேலர்' என்றொரு பெயரும் உண்டு. ஒரே ஆசிரியரிடம் கல்வி பயின்ற காலத்தில் இருவரும் இணைபிரியாத நண்பர்களாகத் திகழ்ந்தார்கள். கல்வி நிறைவுற்றதும் கண்ணனும் குசேலரும் பிரிய நேர்ந்தது. காலங்கள் ஓடின. குசேலருக்குத் திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்தனர். அவரின் குடும்பம் ஏழ்மையில் தவித்தது. மனைவியின் வேண்டுகோளின்படி, துவாரகைக்குச் சென்று கண்ணனிடம் உதவி பெற்று வரலாம் என்று புறப்பட்டார் குசேலர்.

நண்பனைக் காணச் செல்லும்போது வெறுங் கையுடன் போவது சரியல்ல என்று கூறி, வீட்டிலிருந்த கொஞ்சம் அவலைக் கொடுத்து அனுப்பினாள், குசேலரின் மனைவி.

துவாரகைக்கு வந்துசேர்ந்த குசேலரைச் சிறப்பாக வரவேற்று உபசரித்தனர் கிருஷ்ண னும் ருக்மிணியும். அவரிடமிருந்து அவலை உரிமையோடு பிடுங்கி உண்டார். பக்தன் கொண்டுவந்த அவல் பன்மடங்கு ருசித்தது. இரண்டு கைப்பிடி சாப்பிட்ட பிறகும் ஆவல் அடங்கவில்லை. 3-வது பிடியை வாயில்போட முயன்றபோது, ருக்மிணி தடுத்தாள். `இனியும் உட்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் குசேலரின் மனைவியை அடையும். தானும் கண்ணனும் சேர்ந்து, குசேல தம்பதிக்கு நிரந்தரமாகப் பணிவிடைசெய்யும் சூழல் வந்துவிடும்!' என்கிற எச்சரிக்கையுடன் செயல் பட்டாள். ஆம்! கண்ணன் ஏற்கெனவே சாப்பிட்ட அவலுக்குப் பலனாக, குசேலரின் இல்லத்தில் பொன்- பொருள் யாவும் சேர்ந்து, நிறைவடைந்துவிட்டாள் குசேலரின் மனைவி.

இப்படி, கண்ணனின் திருவருளால் குசேலர் குபேர சம்பத்து பெற்றது மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமை என்பார்கள். இதையொட்டி, அன்றைய தினத்தில் குருவாயூர் கோயிலில் குசேலர் தினம் வெகு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது; குருவாயூரப்பனுக்கு அவல் படைத்து வழிபடுவார்கள்.

நாமும் வரும் மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமை (20.12.17) அன்று கண்ணனுக்கு, அவல் படைத்து, வணங்கி வழிபடுவோம். அவனருளால் நமது வறுமை மற்றும் துன்பங்கள்  நீங்கும். செல்வ வளம் பெருகும்.

- மு.வ.ஹரிகாமராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism