
திருஞானசம்மந்தர் பதிகம்பாடி அங்கம் பூப்பாவையை உயிர்பிக்கச் செய்த திருத்தலம்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்.
63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார் மனதால் பூஜித்து, முக்தி அடைந்த திருத்தலமும் இதுதான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இங்கு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு கபாலீஸ்வரருக்கு இதுவரை செப்பில் தங்க முலாம் பூசிய நாகாபரணம்தான் சிறப்பு பூஜை நேரங்களில் சாற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், கபாலீஸ்வரருக்கு ரூ.2.75 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ எடை கொண்ட தங்க நாகாபரணம் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 7-ம் தேதி காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடம் சங்கராசார்யர் ஸ்வாமிகள் ஸ்ரீஜெயேந்திரர், ஸ்ரீவிஜயேந்திரர் இருவரும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்து, நாகாபரணத்துக்குச் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், அந்த நாகாபரணத்தைக் கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, மூலவருக்குச் சிறப்பு அபிஷேகங்களைச் செய்து, தங்க நாகாபரணத்தை அணிவித்தனர்.