Published:Updated:

50வது திருவிளக்கு பூஜை: வடபழநி முருகன் கோயில்

50வது திருவிளக்கு பூஜை: வடபழநி முருகன் கோயில்

50வது திருவிளக்கு பூஜை: வடபழநி முருகன் கோயில்

50வது திருவிளக்கு பூஜை: வடபழநி முருகன் கோயில்

Published:Updated:
50வது திருவிளக்கு பூஜை: வடபழநி முருகன் கோயில்
##~##
'யா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிருக்க பயமேன்?’ என முருகப்பெருமான் கோயில்கொண்டு அருள்பாலிக்கும், சென்னை வடபழநி திருத்தலத்தில், சக்தி விகடன் நடத்திய 50-வது திருவிளக்கு பூஜை, 21.12.10 அன்று விமரிசையாக நடந்தேறியது. சக்தி விகடனும் நயஹாவும் இணைந்து நடத்தும் திருவிளக்குபூஜை இது!

அடேங்கப்பா... கோயிலில் எங்கு திரும்பினாலும் நம் வாசகிகள்தான்! ஆறேழு வரிசைகளில் அனைவரையும் அமர வைத்து, பூஜை துவங்கியதும், அனந்தகோடி பிரகாசம், அந்தப் பகுதியிலும் வாசகியரின் முகங்களிலும்! விளக்கு பூஜை குறித்து, இதோ அவர்களே சொல்கிறார்கள்...

''சக்தி விகடனோட முதல் விளக்கு பூஜை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்ல நடந்துச்சு. அப்ப, என் மூத்த மகனுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும்கற பிரார்த்தனையோட கலந்துக்கிட்டேன். அதன்படியே குழந்தை பிறந்து, ரெண்டாவது குழந்தையும் பிறந்தாச்சு!  இப்ப, சக்தி விகடனோட 50-வது விளக்கு பூஜை; என் மகளுக்கு குழந்தை பிறக்கணுங் கறதுதான் இப்ப என்னோட பிரார்த்தனை! அதுவும் பலிக்கும்!'' என்று பரவசத்துடன் பேசினார் பிரேமா.  

50வது திருவிளக்கு பூஜை: வடபழநி முருகன் கோயில்

 ''நான்தான் ஹரிணி. இப்ப நைன்த் படிக்கிறேன். அடுத்த வருஷம் டென்த் தானே?! அதான், நல்லா படிக்கணும்; நிறைய மார்க் எடுக்கணும்; எதிர்காலத்துல 'ஆர்க்கிடெக்ட்’ ஆகணும்னு வேண்டிக்கிட்டேன். நீங்களும் எனக்காக வேண்டிக்குங்க'' என்று சுட்டித்தனம் மாறாமல் பேசினாள் அந்தச் சிறுமி!

 ''வயசானா உடம்பு பலஹீனமாயிடும்; ஆனா, மனசு அப்படி ஆயிடக் கூடாதுன்னுதான் பூஜைல கலந்துக்கிட்டிருக்கேன். பையனுக்கு கல்யாணமாகி மூணு வருஷத்துக்கும் மேல ஆயிடுச்சு. இன்னும் குழந்தை வரம் கிடைக்கலை. முருகன் சந்நிதானத்துல விளக்கு பூஜை நடந்திருக்கு. எங்க வம்சத்தைக் கந்தன் தழைக்கச் செய்வான்னு நம்பிக்கை இருக்கு'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்  வாசகி மாலதி.

 ''எங்க அப்பா முருக பக்தர். அவரைப் பார்த்து வளர்ந்ததால, நானும் தீவிர முருக பக்தையாயிட்டேன். முருகப்பெருமானோட சந்நிதில, விளக்கு பூஜைல கலந்துக்கிட்டதே சந்தோஷம்; அதிலேயும், சக்தி விகடன் நடத்தற 50-வது விளக்கு பூஜைல கலந்துக்கறது, கூடுதல் சந்தோஷத்தைத் தருது!'' என, பம்மலில் இருந்து வந்திருந்த சுதா தெரிவித்தார்.

 ''என் கணவர் ஜோஸியர். ஆனா, பத்து வருஷமா படாத பாடு பட்டாச்சுங்க. இன்னிக்கி நல்லாருக்கோம்னா, அதுக்கு வடபழநி முருகனோட பேரருள்தான் காரணம். ஜோஸியம் பார்க்க வர்றவங்களுக்கு என் கணவர் கணிச்சு சொல்ற பலன்கள் 100 சதவிகிதம் பலிக்கணும். இதுக்கு நீதாம்பா அருள்புரியணும்’ என்று பிரார்த்திக்கிறார் வாசகி சுகன்யா.

''பி.இ. கடைசி வருஷம் படிக்கிறேன். அடுத்ததா எம்.எஸ். படிக்கலாம்னு ஆசை. சீட் கிடைக்கணுமே?! அதுக்காகத்தான் இந்த பூஜைல கலந்துக்கிட்டேன். மனசே நிறைஞ்சிருச்சு. நான் ஆசைப்பட்ட படிப்பு கிடைச்சிடும்னு நம்பிக்கையே வந்துடுச்சு!'' என்று கண்களில் கனவுகள் மின்னச் சொன்னார் வாசகி ஸ்ரீவித்யா.

''கவலையை விடும்மா... கூட்டுச் சேர்ந்து பூஜை பண்றதுக்கு தனிச் சக்தி உண்டு. உன் பிரார்த்தனை பலிக்கும்; உலகமே செழிக்கும்!'' முத்தாய்ப்பாகச் சொன்னார் மயிலை வாசகி லட்சுமி!

- ரா.ஷர்மிளா, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism