Published:Updated:

திருப்பதி பிரம்மோற்சவத்தில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருப்பதி பிரம்மோற்சவத்தில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி!
திருப்பதி பிரம்மோற்சவத்தில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி!

திருப்பதி பிரம்மோற்சவத்தில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி பவனி!

திருப்பதியில்,  செப்டம்பர் 13 - ம் தேதி பிரம்மோற்சவம்  தொடங்கி, கடந்த ஆறு நாள்களாக நடைபெற்றுவருகிறது.  5 -வது நாள் நிகழ்ச்சியான நேற்று, ( 17 -ம் தேதி) கருட சேவை  நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆறாவது நாளான இன்று காலையில், அனுமந்த வாகனத்தில் ஶ்ரீராமர் அலங்காரத்தில் வீதி உலா வந்தார்.  பிரம்மோற்சவத்தையொட்டி சுவாமி வீதி உலாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாறுவேட அலங்காரம் என வண்ணமயமான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  

மாலை  5 மணிக்கு, 32 அடி உயரமுள்ள தங்கத்தேரில் மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக  நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து 'கோவிந்தா... கோவிந்தா...' என கோஷமிட்டனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சுவாமி தரிசனம்செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு