திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

தியாகராஜ அலங்காரம்!

தியாகராஜ அலங்காரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தியாகராஜ அலங்காரம்!

பூசை. அருணவசந்தன்

ம்மில் பலரும், ஆரூர் தியாகேசரை கண்ணாரத் தரிசித்து மனம் மகிழ்ந்திருப்போம். அந்த மகிழ்ச்சியை, சிலிர்ப்பை பன்மடங்காக்க வல்லவை ஆரூரானின் அலங்கார நுட்பங்கள். இதோ... தியாகராஜ அலங்காரத்தின் சிலிர்ப்பூட்டும் நுட்ப விளக்கங்கள் இங்கே உங்களுக்காக!

சிம்மாசனம்:
பூங்கோயிலில், முத்து விதானத்தின் கீழ் 16 சிம்மங்களால் தாங்கப்படும் சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார் தியாகராஜர். இதனை ரத்தின சிம்மாசனம், மந்திர சிம்மாசனம், பஞ்சபிரம்ம சிம்மாசனம் என்றும் அழைப்பர். அவரின் இடப்புறம் கொண்டிதேவி அருள்கிறாள்.

வீரகட்கம்:
தியாகேசரின் மறக்கருணையை வெளிப்படுத்துபவை வீரகட்கம் எனப்படும் வாள்கள். இவை, பெருமான் ஆரூரில் அரசனாக வீற்றிருந்து ஆட்சிபுரிந்ததைக் குறிப்பன.

தியாகராஜ அலங்காரம்!

தியாகப் பரிவட்டம்: தியாகேசருக்கு அணிவிக்கப்படும் நீண்ட துணியே தியாகபரிப் வட்டம். இத்தகைய 18 பரிவட்டங்களைக் கொண்டு, உள் அலங்காரம் செய்து, அதன்மீது பட்டுத் துணிகளையும் அவற்றுக்கும் மேலாக ஆபரணங்களும் அணிவிக்கப்படுகின்றன.

லிங்கப்பட்டு: நீலநிறப்பட்டுத் துணியில் சரிகை வேலைப்பாடாக அமைந்த இந்த லிங்க உருவை பூமி தத்துவ லிங்கம் என்பர். இது, சிறப்பு நாள்களில் மட்டுமே அணிவிக்கப்படும்

நறுந்திலகம்: தியாகேசருக்குச் சந்தனத் திலகமிட்டு அதன்மீது, குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து இழைத்தால் வரும் சிவப்பு நிறத் திரவியத்தையே திலகமாக இடுகின்றனர்.

தலைச்சீரா: இது இறைவனின் திரு முடியை அலங்கரிக்கும் ஒருவகை அணி.

தியாகராஜ அலங்காரம்!செவ்வந்தித் தோடுகள்: திருமுடியின் இருபுறமும் பிறைகளையொட்டி பூவால் தொடுத்து அமைக்கப்படுபவையே செவ்வந்தித் தோடுகள். இதனால் இவரைச் செவ்வந்தித் தோடழகர் என்றும் சிறப்பிப்பார்கள்.

தியாக விநோதம்: பெருமானுக்கு காலையிலும் மாலையிலும் அணிவிக்கப்படும் கருஞ்சாந்து ‘கிருஷ்ணகந்தம்’ எனப்படும். 18 மூலிகைகள், சந்தனம், தூயநெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இதனைப் பெருமானின் செவ்வந்தித் தோடுகளில் பூசி அதனை அணிவிப்பர். அத்துடன், மாலைநேரப் பூசையின்போது அன்பர்களுக்கு அளிக்கும் விபூதியிலும் கலந்து தருகின்றனர். இதனைத் `தியாக விநோதம்' என்றும் அழைப்பர்.

சிர மாலை: தியாகராஜரின் மார்பில் தலைமாலைச்சரம் ஒன்று திகழ்கிறது. கோடானு கோடி ஆண்டுகளில் படைத்து அளித்து மாண்டுபோன பிரம்மர்களை நினைவு கூறும் வகையில் அமைந்ததே இந்த மாலையாகும்.

கிண்கிணிக் காலழகர்: பெருமானின் பாதங்களில் கிண்கிணிகள் அணிவிக்கப் பெற்றுள்ளன. எனவே அவர் `கிண்கிணிக் காலழகர் என்று அழைக்கப்படுகின்றார். இந்தத் திருவடியை, அப்பர் பெருமான் `ஆடவரக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை’ என்று பாடியுள்ளார்.