
சிவ மலர்கள்!
பூக்கள் இல்லாத பூஜைக்கு பலன் குறைவே என்பது பெரியோர் வாக்கு. அவ்வகையில், சகல மலர்களும் இறை பூஜைக்கு ஏற்றவையே என்றாலும், குறிப்பிட்ட சில மலர்களை சிவபூஜைக்கு விசேஷமாகப் பரிந்துரைக்கின்றன ஞான நூல்கள். அதன்படி அதிகாலை, காலை, நண்பகல், மாலை ஆகிய நான்கு வேளைகளிலும் சிவ பூஜைக்கு உகந்த மலர்கள் இன்னின்ன என்று ஆன்றோர் வகுத்துள்ளனர். அவை:

அதிகாலை: புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை
காலை: அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவர்த்தம், தாமரை, பவழமல்லி.
உச்சிக்காலம்: பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, மல்லிகை, கத்தரி, மந்தாரை, சரக்கொன்றை, தும்பை.
மாலை மற்றும் அர்த்தசாமம்: மல்லிகை, காட்டு மல்லிகை, மகிழம்பூ, கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மருக்கொழுந்து
- எஸ். அருணா, சென்னை-47