Published:Updated:

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!

மு.ஹரி காமராஜ் - படம்: சி.ரவிக்குமார்

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!

மு.ஹரி காமராஜ் - படம்: சி.ரவிக்குமார்

Published:Updated:
ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!

‘தென்னாடுடையவர்’ என்று சிவபெருமானுக்கு ஒரு சிறப்புப்பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், தென்னாடெங்கும் எண்ணற்ற சிவாலயங்கள் அருளொளி பரப்பித் திகழ்ந்ததுதான். ஆனால், அவற்றுள் பல ஆலயங்கள் காலப்போக்கில் சிதிலமடைந்து, சரியான  பராமரிப்பும் பூஜைகளும் இல்லாத நிலையில் இருப்பதையும் பல ஊர்களில் காண நேரிடுகிறது. அப்படி ஒரு சிவாலயத்தின் படங்களை அன்பர் ஒருவர் நம்மிடம் காட்டினார். அந்தப் படங்களைப் பார்த்தபோது நாம் பதறித்தான் போனோம்!

ஆயிரமாயிரம் புனித நிகழ்வுகளை, ஐயனின் அருளாடல் களைத் தன்னகத்தே கொண்டிருந்த அந்த ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமைச் சிறப்பு வாய்ந்த அந்த ஆலயம், காலக்கறையான் அழித்த கவின் சிற்பம் போல் சவுக்குமரத் தோப்பில் மறைந்துகிடந்த காட்சியை அந்தப் படங்களில் பார்த்தபோது, நம்மையும் அறியாமல் நம் கண்களில் நீர் கசிந்தது. அந்த அன்பர் கூறிய செய்திகளின் அடிப்படையில், அந்தக் கோயிலின் வரலாற்றுச் சிறப்பை நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!

பிற்காலச் சோழர்களும், விஜய நகர மன்னர்களும் கொண்டாடிய அந்த ஊரும், ஆலயமும் காலச் சுழற்சியில் கண்டுகொள்ளப்படாமல் போயினவாம். ஆலகாலம் உண்டு அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய பரமன், ஏனோ தன்னைத்தானே மண்ணில் மறைத்துக்கொண்டார்.  எத்தனை ஆண்டுகளோ தெரியாது. மண் மூடி, மரத்தின் விழுதுகள் மூடி, சுற்றிலும் காடு மண்டி அந்தக் கற்றளி காணாமல் போனது.

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!


ஆலயம் மண்மூடிப்போயிருந்தாலும், அந்தப் பகுதிக்கு வேளாண்மை காரணமாக வரும் மக்கள், சில தெய்விக அனுபவங்களைக் கண்டிருக்கிறார்கள். சித்தர்களின் நடமாட்டம் அந்தப் பகுதியில் இருக்கிறதென்றும் தெரிவித் தார்களாம். இப்படியான அத்தனை அற்புதங் களுக்கும் மண்ணில் புதையுண்டுபோன சிவன் கோயில்தான் காரணம் என்றும், சிவபெருமானே மனம் வைத்தாலன்றி கோயில் எழும்பப்போவதில்லை என்றும் அன்பர்கள் முடிவுக்கு வந்த வேளையில், சிவம் சித்தம் கொண்டதுபோலும், இங்கே ஓர் ஆலயம் பொலிவுடன் எழும்பட்டும் என்று. ஆம்! இறைசித்தப்படி சிதிலமடைந்த கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதாக நம்முடன் வந்த அன்பர் கூறவே, நமக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டது.

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - ஆவணிப்பூர் சாலையில் கீழ்ப்பசார் என்ற ஊரில் சவுக்குத் தோப்புக்கு மத்தியில் ஆலயம் அமைந்திருக்கிறது. நம்முடன் வந்த அன்பர்,

‘‘சில வருடங்களுக்கு முன்பு பாம்புகளும், பூச்சிகளும் நிறைந்திருந்த புதர்ப்பகுதியாக இருந்தது கோயிலும் அதன் சுற்றிடமும். திருப்பணிகள் செய்ய நினைத்ததுமே, சில இளைஞர்கள் அந்தப் பகுதியை சிறிதும் அச்சமின்றி சுத்தம் செய்தார்கள்.  பிறகு, ஊர் மக்கள் ஒன்றுகூடிக் கோயிலின் இடிபாடுகளை அகற்றியபோது கருவறையில் மிகவும் அழகிய லிங்கத் திருமேனி எந்தவித சிதைவுமின்றிக் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு துர்கை சிலையும், இரட்டை நந்தியும், உடைந்துபோன சில சிலைகளும் கிடைத்தன’’ என்றார்.

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!

அவரே தொடர்ந்து, ‘`ஆனால், அம்பாள் சிலை கிடைக்க வில்லை. மேலும், சுவாமியின் பெயர்கூட எங்களுக்குத் தெரியவில்லை. பின்னர், தேவப் பிரச்னம் பார்த்தபோது சுவாமியின் பெயர் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர்  என்றும், அம்பிகை பச்சை நிறத்தினளாகத் திகழ்ந்தவள்; மரகதாம்பிகை என்ற திருப்பெயர் கொண்டிருந்தவள் என்றும் தெரியவந்தது.மேலும், சுக்கிரபகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்பதும், அதனால் இந்தத் தலம் சுக்கிரப் பரிகாரத் தலமாகவும் திகழ்ந்தது எனவும் தெரியவந்தது'' என்றார்.

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!


நாம் ஆலயத்தை தரிசிக்கச் சென்றபோது, திருப்பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் சுவாமிக்கு ஒன்பது விதமான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாம் கோயிலைச் சுற்றிவந்தோம். உள்ளூர்க்காரர்களுடன், அந்த ஊரிலிருந்து வெளியூர்களுக்குச் சென்று வசிப்பவர்களும் வந்திருந்து தங்களைத் திருப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருந்ததைக் கண்டோம். அவர்களுடைய முயற்சியின்பேரில் தற்போது சுவாமி சந்நிதியுடன், அம்பிகை, வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், கற்பக விநாயகர், சுக்கிர பகவான், லட்சுமி குபேரர் சந்நிதிகள் உருவாகத்தொடங்கியுள்ளன. பௌர்ணமி பூஜைகளும், நித்ய அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றுவருகின்றன.

ஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்!

அந்த ஊரைச் சேர்ந்த பக்தை ஒருவர், திருமணமாகிப் பல வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த தனக்கு, சந்திரமௌலீஸ்வரர் அருளால்தான் குழந்தை  பாக்கியம் கிடைத்தது என்று நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மழலை வரம் அருளும் மகேஸ்வரனின் ஆலயத்துக்கு இன்னும் திருக்குளம், ராஜகோபுரம் உள்ளிட்ட பல திருப்பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. அனைத்துத் திருப்பணிகளும் விரைவிலேயே நிறைவுபெற்று கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேற நம்மால் முடிந்த பொருளுதவி செய்வது நம்முடைய கடமை. ‘திருவிளக்கிட்டாரை தெய்வமறியும்; நெய் வார்த்து உண்பித்தாரை நெஞ்சம் அறியும்’ என்பதுபோல், நாம் மனமுவந்து ஐயன் திருக்கோயில் திருப்பணிக்கு வழங்கும் பொருளுதவி, நமக்கும் நம் சந்ததியினருக்கும் ஐயனின் பேரருளைப் பெற்றுத்தரும் என்பது உறுதி.

எப்படிச் செல்வது?

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்துக்கு முன்னதாக 3 கி.மீ தொலைவிலேயே இடப்புறமாக ஒரு சாலை பிரியும். இந்த (திண்டிவனம்- ஆவணிப்பூர்) சாலையில் உள்ளது கீழ்ப்பசார் கிராமம். நொளம்பூர் வழியாகச் செல்லும் திண்டிவனம் - ஆவணிப்பூர் பேருந்தில் கீழ்ப்பசாரை அடையலாம்.

தொடர்புக்கு

எஸ்.ஹரிஹரன், 99622 47752

Bank Details : KEELPASAR SRI CHANDRA MOULEESWARAR SEVA TRUST (Regd. 7/2016)

A/C Details - THE FEDERAL BANK Ltd.  TINDIVANAM BRANCH,

CURRENT A/C - 19560200000844

IFSC CODE - FDRL0001956, MICR CODE - 605049003

கல் யானை கரும்பு தின்ற நாள்!

மதுரை சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல் களில் ஒன்று ‘கல் யானை தின்னக் கரும்பு கொடுத்த’ விளையாடல். சிவபெருமான் எல்லாம் வல்ல சித்தராக வந்திருந்து இப்படியான லீலையை நிகழ்த்தியது, பொங்கல் திருநாளில்தான். விஸ்வாமித்ர மகரிஷியும் சூரியனைப் போற்றும் காயத்ரீ மந்திரத்தைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதும் தைப் பொங்கலன்றுதான் என்பர்.

- எம்.சுந்தரன், நெல்லை-2