Published:Updated:

நாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாரதர் உலா...  -  கருவறை இடிப்பு... காரணம் என்ன?
நாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன?

படம்: விஜயகுமார்

பிரீமியம் ஸ்டோரி

‘இன்று வைகுண்ட ஏகாதசி ஆயிற்றே. நாரதர் வருவாரோ மாட் டாரோ’ என்ற எண்ணம் ஒருபுறமும், ‘என்ன ஆனாலும் நாரதர் தம் கடமையி லிருந்து தவறமாட்டார். கண்டிப்பாக வருவார்’ என்ற எண்ணம் மறுபுறமும் நம்மை ஆக்கிரமித்திருந்த நிலையிலும், நாரதரின் வருகைக்காகக் காத்திருந்தோம். நம்முடைய காத்திருப்பை உணர்ந்தவர் போல், தான் வந்துகொண்டே இருப்பதாக ஒரு தகவலை நமக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார் நாரதர்.

சொன்னபடியே சற்று நேரத்துக்கெல் லாம் நாரதர் நம் அறைக்குள் பிரவேசித் தார். வரும்போதே, தாம் அன்று விரதம் இருப்பதாகக் கூறவே, அவருக்காக வைத்திருந்த இஞ்சி டீயை நாமே பருகியபடி நாரதரைப் பார்த்தோம். நம் பார்வையின் பொரு ளைப் புரிந்துகொண்டவர் போல், சேலத்தில் நடந்த ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நாரதர் உலா...  -  கருவறை இடிப்பு... காரணம் என்ன?

‘`நான் சமீபத்தில் சேலத்துக்குப் போயிருந்தேன்’’ என்ற நாரதரை இடைமறித்த நாம்,

‘`சேலம் என்றாலே மாம்பழத்தைவிட முதலில் நினைவுக்கு வருவது கோட்டை மாரியம்மன் கோயில்தானே?’’ என்று கேட்டோம்.

‘`நீர் தீர்க்கதரிசியேதான்’’ என்று நம்மைப் பாராட்டிய நாரதர் தொடர்ந்து, ‘`நான் சொல்ல வந்ததே அந்தக் கோயிலைப் பற்றித்தான். சமீபத்தில் பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி அந்தக் கோயில் கருவறையை இடித்திருக்கிறார்கள். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றி விசாரிப்பதற்காக, கோயில் அறக்கட்டளையின் தலைவர் ரஜினி செந்திலிடம் பேசினேன்.

நாரதர் உலா...  -  கருவறை இடிப்பு... காரணம் என்ன?


‘சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மிகவும் பழைமை வாய்ந்த கோயில். சிற்பக் கலைநயம் மிகுந்த இந்தக் கோயிலை இடிக்க முற்பட்டபோது, கோயிலை இடிக்காமல், அதன் பழைமை மாறாமல் புனரமைக்கவேண்டும் என்று அறநிலையத்துறையிடம் முறையிட்டோம். நாங்கள் சொன்னதைக் கேட்காததால், நீதிமன்றத் தில் முறையிட்டு, கோயிலை இடிப்பதற்குத் தடையுத்தரவு வாங்கினோம். அதன் பிறகு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி வல்லுநர் தலைமையில் ஒரு கமிட்டியை ஏற்படுத்தினார்கள்.

ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவு, வல்லுநர்கள் குழுவின் அறிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பு எதையும் பொருட்படுத்தாமல், இரவோடு இரவாக பின்வாசல் வழியாக வந்து கருவறையை இடித்துவிட்டார்கள்’ என்று கூறினார்’’ என்றார் நாரதர். ‘`தடையுத்தரவை மீறி இடிப்பதற்கு அப்படியென்ன அவசரம் வந்தது?’’ என்று கேட்டோம்.

`‘புராதனமான கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்போகும் புதிய கோயிலில், பரம்பரையாகப் பூசை செய்து வரும் பூசாரிகளுக்குப் பதிலாக அர்ச்சகர்களை நியமிக்கவேண்டும் என்பதற் காகத்தான் இப்படிச் செய்திருப்பதாகக் கோயில் நிர்வாகத்தின் மீது பக்தர்கள் குற்றம் சாட்டு கிறார்கள்’’ என்றார் நாரதர்.

நாரதர் உலா...  -  கருவறை இடிப்பு... காரணம் என்ன?

‘`அறநிலையத்துறை சார்பில் யாரிடமாவது பேசினீர்களா?’’

‘`நீதிமன்ற உத்தரவையே மீறியதாகச் சொல்லப்படும் விஷயமாயிற்றே. பேசாமல் இருப்பேனா? கோயிலின் செயல் அலுவலர் மாலாவிடம் பேசினேன். அவர், ‘கோயில் சிதிலமடைந்துவிட்டதால், கோயிலைப் புதிதாகக் கட்ட முடிவெடுத்தோம். எனவே கடந்த 4.9.16 அன்று மூலவருக்குப் பாலாலயம் செய்து வைத்துவிட்டு, கருவறையை இடிக்க முயற்சி செய்தோம். ஆனால், கோயிலை இடிக்கக்கூடாது என்று நீதிமன்றத்துக்குப் போய் தடையுத்தரவு வாங்கினார்கள். நாங்கள் எதிர்த்து முறையிட்டு, 10.2.17 அன்று தடை விலக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி வல்லுநர்கள் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கமிட்டியுடன், பொதுப்பணித்துறை, மண் பரிசோதனை நிலைய வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்த பிறகு, கோயிலைப் புதிதாகக் கட்டிக்கொள்ள உத்தரவு பிறப்பித்தது. அப்போதைய அறநிலையத்துறை கமிஷனரும் புதிய கோயில் கட்டுவதற்கு உத்தரவிட்டார். மற்றபடி நாங்கள் நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாகச் சொல்வது தவறான தகவல்’ என்று கூறினார்’’ என்ற நாரதரிடம்,

‘`பரம்பரையாகப் பூசை செய்துவரும் பூசாரி களுக்குப் பதில் அர்ச்சகர்களை நியமிக்க இருப்பதாக பக்தர்கள் சொன்னது பற்றிக் கேட்டீரா?’’

‘`கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். காரணம் கேட்டபோது, ‘எங்கே தங்களது வருமானத்துக்கு வழியில்லாமல் போய்விடுமோ என்பதற்காகவே சிலர் இந்த விஷயம் குறித்து எதிர்மறைக் கருத்துகளைப் பரப்புகிறார்கள். பக்தர்கள் கேட்கும் பட்சத்தில்தான் அர்ச்சகர்களை நியமிப்போம்’ என்று கூறினார்’’ என்று நாரதர் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர் செல் போனுக்கு அழைப்பு வந்தது. “முக்கியமான விஷயம்” என்றபடி செல்போனை எடுத்துப் பேச ஆரம்பித்தார் நாரதர்.

நாரதர் உலா...  -  கருவறை இடிப்பு... காரணம் என்ன?


நாம் காத்திருந்தோம். பேசி முடித்ததும் செல்போனை அணைத்துவிட்டு வந்த நாரதர் அமைதியாக அமர்ந்தார்.

“என்ன நாரதரே, என்ன நடந்தது” என்று பதற்றத்துடன் விசாரித்தோம். “பஞ்ச சபைகளில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தாமிரசபையில், இந்த ஆண்டு திருவாதிரை ஆருத்ரா நடனம் நிறுத்தப்பட்டிருப்பதாக பக்தர்கள் ஆதங்கப்படுகிறார்கள்” என்ற நாரதர், அதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ திருக்கோயிலுக்கு எந்தவித முன்யோசனையு மின்றிப் பாலாலயம் செய்ததால்தான், இங்கிருக்கும் சந்தன சபாபதி சந்நிதியும், தாமிர சபையும் மூடப் பட்டதாக திருக்கோயில் நலன்விரும்பிகள் தெரிவிக்கிறார்கள்” என்றார் நாரதர்.

“அப்படியென்றால் திருவெம்பாவை விழா எப்படி நடக்குமாம்?”

 “இதையேதான் பக்தர்களும் கேட்கிறார்கள். ‘திருவாதிரைக் கொடியேற வழியின்றி, தேவாரம் திருக்காப்பிடாமல், திருவெம்பாவைத் திருவிழாவா?’ என்று திருநெல்வேலி முழுதும் பக்தர்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்களாம்” என்றார் நாரதர்.

“மார்கழி 18-ந் தேதி (2.1.18) செவ்வாய்க்கிழமை அன்று ஆருத்ரா தரிசனம் நடக்கவிருக்கிறதே. அதற்குள் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யவிருக் கிறார்களா? இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் கேட்கலாமே’’ என்று நாம் கூற, “அதையே நானும் நினைத்தேன். நேரிலேயே சென்று விசாரித்து வருகிறேன்’’ என்றவர், நமது பதிலுக்குக் காத்திராமல் விருட்டெனப் புறப்பட்டுவிட்டார்.

- உலா தொடரும்...
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு