Published:Updated:

மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!

மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!
பிரீமியம் ஸ்டோரி
மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!

துரை வேம்பய்யன் - படங்கள்: என்.ராஜமுருகன்

மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!

துரை வேம்பய்யன் - படங்கள்: என்.ராஜமுருகன்

Published:Updated:
மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!
பிரீமியம் ஸ்டோரி
மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!

ரூர் மாவட்டம் சிறுதெய்வ வழிபாட்டுக்கு ஏகப் பிரசித்தம். அந்த அளவுக்கு சிறுதெய்வக் கோயில்கள் ஊர்தோறும் நிறைந்திருக்கின்றன. இன்னும் மண்மணம் மாறாமல் இருக்கும் கிராமக் கோயில்களின் அமைப்பே அலாதியான ஆன்மிக அனுபவத்தைத் தரக்கூடியவை.

அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெரிச்சினம் பட்டியில்  கோயில்கொண்டிருக்கும் நல்லையா சாமி எனும் மலையாளத்துக் கருப்பர், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்று வதுடன், அந்தக் கிராமத்துக்கே காவல் தெய்வமா கவும் விளங்குகிறார்.

கிராமத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மலையாளத்துக் கருப்பு சந்நிதிக்கு அருகில் தட்டித்தாத்தன் சிலை இருக்கிறது. பின்புறமாக நாகம்மன் ஒரு மரத்தினடியில் காட்சி தருகிறாள். பரிவார சாமிகளான மதுரை வீரன், மாயம் பெருமாள், வீரமாத்தி, விநாயகர் சந்நிதிகளும்  இந்த ஆலயத்தில் அமைந்திருக்கின்றன.

மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!

இந்தக் கிராமத்துக்கு மட்டுமன்றி, வெளி மாவட்டங்களில் இருக்கும் 75 கிராம மக்களுக் கும் பாத்தியப்பட்ட கோயில் இது என்கிறார்கள். இங்கே மலையாளத்துக் கருப்பு கோயில் கொண்ட சம்பவத்தை ஊர் முக்கியஸ்தர்களில் ஒருவரான சின்னான் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!


‘‘ரொம்ப காலத்துக்கு முன்னாடி கேரளாவைச் சேர்ந்த நல்லையா சாமிங்கற மலையாளத்துக் கருப்பு, அங்கே கோவிச்சிக்கிட்டு மாற்றிடம் தேடி, காடு கரை, நாடு நகரமெல்லாம் அலைஞ் சிருக்கார். அப்படி வர்றயிலே, பூத்துக் குலுங்கிய ஆவாரஞ்செடிகள் நிறைஞ்ச எங்க ஊரு அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஊருக்கு வடக்கால இருந்த சாமி தட்டித்தாத்தனிடம் போய், ‘உங்க ஊர்ல உட்காரணும்னு ஆசை. உட்கார்ந்துக்கவா’ன்னு கேட்டிருக்கார் கருப்பு.

தட்டித்தாத்தனும், ‘சரி, உட்கார்ந்துக்கோ. ஆனா, கறுப்புக்கோழி, கறுப்புப்பன்றி, கறுப்பு ஆடுதான் உனக்கு பலியா தரமுடியும் சம்மதம்தானா'ன்னு கருப்புகிட்ட கேட்டு சத்தியமும் வாங்கிக்கிட்டார். அப்படித்தான் தட்டித்தாத்தனும் மலையாளத்துக் கருப்பும் ஒரே இடத்துல பக்கம்பக்கமா இருக்கறாங்க. மலையாளத்துக் கருப்பனுக்கு அசைவப் படை யலும், தட்டித்தாத்தனுக்குப் பொங்கலும்தான் படையல் போடுவோம். இங்கே இருக்கற ஒவ்வொரு சாமிக்கும் ஒரு பூசாரி தனியா இருக்காங்க. வேற வேற ஊர்ல இருக்கற அவங்க திருவிழா நடக்கறச்சேதான் வந்து பூஜை பண்ணுவாங்க. மத்த நேரத்துல நாங்களே பூஜை பண்ணுவோம்’’ என்றார்.

மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!

75 கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சித்திரைக் கடைசி அல்லது வைகாசி முதல் வாரத்தில் மலையாளத்துக் கருப்புக்கு ஐந்து நாள்களுக்கு விழா எடுத்து வழிபடுகிறார்கள். அப்போது 50,000-க்கும் அதிகமான பக்தர்கள் இங்கே திரளுவார்களாம். தட்டித்தாத்தனுக்கு வாக்களித்தபடியே மலையாளத்துக் கருப்புக்கு, கறுப்புக்கோழி, கறுப்பு ஆடு, கறுப்புப்பன்றி பலியிடப்படுகின்றன. மேலும் 31 வகையான பூஜைப்பொருள்களை வைத்து பூஜிக்கின்றனர்.

திருவிழாவின்போது மலையாளத்துக் கருப்பருக்கு அசைவப் படையல் போடும் ராமன் என்ற அன்பர் நம்மிடம், ‘‘இந்த மலையாளத்துக் கருப்பு காவலுக்குச் சிறந்த சாமி. எந்த துர்சக்தியும் ஊர் எல்லையில்கூடக் கால் வைக்க முடியாது. யாரும் திருடக்கூட வரமுடியாது. மீறி வந்தா அவங்களுக்குக் கைகால் விளங்காமப் போயிடும். மத்தபடி, நமக்கு உடம்புல ஏதேனும் பிரச்னை இருந்தா, மலையாளத்துக் கருப்பரிடம் வேண்டிக்கிட்டா போதும், உடனே குணமாக்கி வெச்சிடுவார். வேண்டுதல் நிறைவேறினதும் அவருக்குக் காணிக்கையா வேல் அரிவாள்களைக் கொடுப்பாங்க’’ என்றார்.

மலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்!

பொன்னம்மா பாட்டி என்பவர், ‘‘அஞ்சு வருஷத்துக்கு ஒருதரம்தான் திருவிழான்னாலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகள்ல கூட்டம் வந்தபடிதான் இருக்கும். பௌர்ணமிக்கு நாகம்மாளுக்கு விசேஷமா பூஜை செய்வோம். அமாவாசைக்கு மலையாளத்துக் கருப்பைக் கும்பிட ஏகப்பட்ட பக்தர்கள் வருவாங்க. தைப்பூசம் இன்னும் விசேஷம். அன்றைக்கு மாவிளக்கு ஏற்றி, பெண்கள் எல்லோரும் கோயிலுக்கு முன்னாடி கும்மியடித்துப் பாட்டுப் பாடிக் கும்பிடுவாங்க. அன்றைக்கு என்ன வேண் டுதல் வெச்சாலும் உடனே நிறைவேத்திடுவார் மலையாளத்துக் கருப்பு’’ என்றார் சிலிர்ப்புடன்.

சந்நிதியில் நிற்கும் பக்தர்களின் முகத்தில் வெளிப்படும் நிம்மதியையும், கண்களில் ஒளிரும் நம்பிக்கையையும் காணும்போது, இந்த மலையாளத்துக் கருப்பர் எவ்வளவு சாந்நித்தியத் தோடு அருள்பாலிக்கிறார் என்பதை நம்மாலும் உணரமுடிந்தது. நாமும், சிலிர்ப்பு மேலிட கருப்பரை வணங்கி வழிபட்டு வரம் பெற்றுத் திரும்பினோம்.