Published:Updated:

சந்தன நட்பு... சான்றோர் நட்பு!

சந்தன நட்பு... சான்றோர் நட்பு!
பிரீமியம் ஸ்டோரி
சந்தன நட்பு... சான்றோர் நட்பு!

சந்தன நட்பு... சான்றோர் நட்பு!

சந்தன நட்பு... சான்றோர் நட்பு!

சந்தன நட்பு... சான்றோர் நட்பு!

Published:Updated:
சந்தன நட்பு... சான்றோர் நட்பு!
பிரீமியம் ஸ்டோரி
சந்தன நட்பு... சான்றோர் நட்பு!

‘சேருமிடம் அறிந்து சேர்’ என்பார்கள் பெரியோர்கள். நாம் நாடிச் செல்லும் நட்பு நல்லதாக இருப்பின் நன்மையே நடக்கும். உயர்ந்த இடத்தின் சேர்க்கை உயர்வையே தரும் என்பதை மிக அழகாக விவரிக்கிறது பாடலொன்று.

சந்தன நட்பு... சான்றோர் நட்பு!

சந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல
    தருவும் அவ்வாசனை தரும்
தங்கமா மேருவை அடுத்திடும் காக்கையும்
    சாயல்பொன் மயமே தரும்
பந்தமிகு பாடலுடன் வளாவியத ணீரெலாம்
    பால்போல் நிறங்கொடுக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தன நட்பு... சான்றோர் நட்பு!


படிகமணி கட்குளே நிற்கின்ற வடமும்அப்
    படியே குணங்கொடுக்கும்
அந்தம்மிகு மரகதக் கல்லைத் தரித்திடில்
    அடுத்ததும் பசுமையாகும்
ஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்
    அவர்கள்குணம் வருமென்பர் காண்
மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்த அரி
    மருகமெய்ஞ் ஞான முருகா
மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு
    மலைமேவு குமரேசனே


குமரேச சதகத்தின் ஒரு பாடல் இது. சந்தன மரத்தின் அருகிலுள்ள மரங்களும் சந்தன வாசனையைத் தரும். பொன்மயமான மேருமலையில் வசிக்கும் காக்கைகளும் பொன்மயமான கறுப்பு நிறத்தைப் பெறும். பாலுடன் சேரும் தண்ணீரும் பாலாகவே மாறும். ஸ்படிக மணிகள் கோக்கப்பட்ட நூலும் ஸ்படிகத்தின் நிறத்தைப் பெறும். மரகதக் கற்களுக்கு நடுவில் வைக்கப்படும் பொருள்கள் பச்சை வண்ணத்தை அடையும். அதேபோல், உயர்ந்தவர்களுடன் பழகினால் அவர்களின் மேலான குணங்களும் நமதாகிவிடும் என்று மிக அழகாக அறிவுறுத்துகிறது இந்தப் பாடல். பக்தியோடு நற்பண்புகளையும் வளர்க்கும் இதுபோன்ற பாடல் களைப் பாடி இறைவனைத் தொழுவதோடு, இவற்றை நம் சந்ததிக்கும் சொல்லிக்கொடுப்போம்; அவர்களது எதிர்காலம் செழிக்கட்டும்.

- கே.பத்மினி கந்தசாமி, திருச்சி-2