Published:Updated:

‘பூ வாக்கு தருவான் வேலவன்!’

‘பூ வாக்கு தருவான் வேலவன்!’
பிரீமியம் ஸ்டோரி
‘பூ வாக்கு தருவான் வேலவன்!’

தி. ஜெயபிரகாஷ் - படம்: சூரியபாரதி

‘பூ வாக்கு தருவான் வேலவன்!’

தி. ஜெயபிரகாஷ் - படம்: சூரியபாரதி

Published:Updated:
‘பூ வாக்கு தருவான் வேலவன்!’
பிரீமியம் ஸ்டோரி
‘பூ வாக்கு தருவான் வேலவன்!’
‘பூ வாக்கு தருவான் வேலவன்!’

சிவபெருமானுக்குத் தகப்பன்சாமியாக இருந்து முருகப்பெருமான் பிரணவப் பொருளுரைத்த தலம் சுவாமிமலை என்பது நமக்குத் தெரியும். ஆனால், சூரர்களை சம்ஹாரம் செய்வதற்குப் புறப்பட்ட முருகப்பெருமானுக்கு, அம்பிகையின் வேண்டுகோளின்படி சிவபெருமான், ‘சத்ருசம்ஹார மந்திரோபதேசம்’ செய்த திருத்தலம் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளலாமே. அந்தத் தலம்தான் தென்சேரித் திருத்தலம்.

சூர சம்ஹாரத்துக்காக முருகப்பெருமான் புறப்பட்டபோது, அம்பிகை சிவபெருமானிடம், முருகப்பெருமானுக்கு ‘சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்தாள். இந்த நிலையில் முருகப்பெருமானும் சிவ பெருமானிடம் மந்திரோபதேசம் பெறுவதற்காக, ஆகாய மார்க்கமாகப் புறப்பட்டு தென்சேரி மலையை அடைந்தார்.

‘பூ வாக்கு தருவான் வேலவன்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த இடத்தின் புனிதம் உணர்ந்த முருகப் பெருமான், அங்கேயே சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றினார். அதன் பயனாக சிவனாரின் தரிசனமும், ‘சத்ரு சம்ஹார மந்திரோபதேசமும்’ பெற்றார் முருகப்பெருமான். அத்துடன், பதினொரு ருத்திரர்களைப் பதினொரு ஆயுதங்களாக மாற்றி  முருகப்பெருமானுக்கு வழங்கி, சூரர்களை வெற்றி கொள்ள ஆசீர்வதித்தும் அனுப்பினார் சிவனார். இப்படி, முருகப்பெருமான் தந்தையிடம் மந்திரோபதேசம் பெற்றவர் என்பதால் இத்தலத்தின் முருகப்பெருமானை மந்திரகிரி வேலாயுதசாமி, மந்திர முருகன், மந்திரியப்பன் என்றெல்லாம் பரவசத்தொடு அழைத்து மனமுருகி வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதே காரணத்தையொட்டி இந்தத் தலத்தை ‘மந்திராசலம்’ என்றும் ‘மந்திரகிரி’ என்றும் போற்றுகின்றனர். சேர சோழ பாண்டியர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டதும், சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததுமான திருக்கோயில் இது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில், ‘செஞ்சேவல் செங்கையுடைய சண்முகத்தேவே’ என இந்தத் தலத்து முருகப்பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார்.

‘பூ வாக்கு தருவான் வேலவன்!’

கருவறையில் வள்ளி தெய்வானையருடன், ஆறுமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு, மயில்வாகனத்துடன் காட்சி தருகிறார் முருகப்பெருமான். இவருடைய ஒரு திருக்கரத்தில் சேவலை ஏந்தியுள்ளார். முருகன், சூரனை அடக்கித் தம் பிடிக்குள் வைத்திருப்பதாக அதற்கு விளக்கம் தருகிறார்கள்.

உற்சவ மூர்த்தியாக வள்ளி தெய்வானையருடன் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார் முத்துக்குமாரசாமி. ஏனைய உற்சவ மூர்த்தங்களாக சிவகாமி உடனமர் நடராஜப்பெருமான், விநாயகர், வீரபாகு தேவர், அஸ்திரத் தேவர் மற்றும் பெரியநாயகி அம்மனும் காட்சியளிக்கின்றனர்.
திருமணம், தொழில் தொடங்குதல் உட்பட எந்தவொரு காரியமாக இருந்தாலும், அதன் பொருட்டு இத்திருக்கோயில் முருகனிடம் `பூக் கேட்டல்' என்ற முறையை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பக்தர்கள். முருகப்பெருமான் பூ தந்து உத்தரவு கொடுத்த பிறகே அதற்குண்டான வேலைகளைத் தொடங்குவோம் என்கிறார்கள் பக்தர்கள்.

‘பூ வாக்கு தருவான் வேலவன்!’

மேலும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க, சந்நிதி முன்பு நின்று, வேலால் நாக்கினில் மூல மந்திரம் எழுதி வேண்டிச் செல் கின்றனர். மனநிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து 48 நாள்களுக்கு இந்தத் திருக்கோயிலில் கிரிவலம் வந்து, ஞான தீர்த்தத்தில் நீராடி, எலுமிச்சையை அர்த்தஜாம சந்தனத்துடன் நீரில் கலந்து உண்டுவந்தால் குணமடைவதாக ஐதீகம்.

‘பூ வாக்கு தருவான் வேலவன்!’


ஞான தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், வாணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தர்ப்பைச் சுனை, கண்ணாடிச் சுனை, கானாச் சுனை ஆகியவை இக்கோயிலின் தீர்த்தங்கள் ஆகும். இதில் ஞான தீர்த்தக் குளத்தின் நீரே முருகனின் பூஜை மற்றும் அபிஷேகங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கந்த சஷ்டி விழா இங்கே விசேஷம். தைப்பூசத் திருவிழா  10 நாள்கள் வெகு சிறப்பாகக் கொண் டாடப்படும். ஆறாம் நாளன்று வள்ளி திருக்கல்யாணம், ஏழாம் நாள் முருகப்பெருமானின் திருவீதி உலாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

நாமும் நமது வாழ்க்கை செழிக்கத் தென்சேரி முருகனை தரிசித்து, அவன் அருளையும் பூ வாக்கையும் பெற்று வருவோம்.

‘பூ வாக்கு தருவான் வேலவன்!’

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது..?

* திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தென்சேரி மலை மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயில். பல்லடத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

* நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல்  இரவு 8 மணி வரையிலும் திருக் கோயில் நடை திறந்திருக்கும்.