Published:Updated:

தைப்பூசத் திருநாளில்...

தைப்பூசத் திருநாளில்...
பிரீமியம் ஸ்டோரி
தைப்பூசத் திருநாளில்...

தைப்பூசத் திருநாளில்...

தைப்பூசத் திருநாளில்...

தைப்பூசத் திருநாளில்...

Published:Updated:
தைப்பூசத் திருநாளில்...
பிரீமியம் ஸ்டோரி
தைப்பூசத் திருநாளில்...

ர் யுகத் தோற்றத்தின்போது, தைப்பூச தினத் தில்தான் நீர் தோன்றியது; நீரிலிருந்தே மற்ற அனைத்துயிர்களும் தோன்றின என்கின்றன ஞானநூல்கள். இதை உணர்த்தவே தைப்பூச நாளில் ஆலயங்களில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நீரில் - தெப்பப் பந்தலில் ஈசனும், இறைவியும், முருகனும் உலா வரும் வைபவம், படைப்பின் ரகசியத்தை எடுத்துரைக்கவே என்பது பெரியோர் வாக்கு.

ன்னை பார்வதிதேவி மைந்தன் முருகனுக்கு வெற்றியை அளிக்க வல்ல வேலாயுதத்தை உருவாக்கித் தந்து ஆசி வழங்கியது ஒரு தைப்பூசத் திருநாளில்தான். முருகனுக்குப் பின்னர் தோன்றியதால் சக்தி வேல் முருகனுக்கு தங்கை முறையானது என்று சுவாரஸ்ய விளக்கம் தருவார்கள் சான்றோர்கள். அதனாலேயே கந்தனின் சக்தி வேலினை ‘ஷண்முகி’ என்றும் போற்றுவர். எதிரிகளை வெல்வதற்கு மட்டுமல்ல, அருணகிரியார், குமரகுருபரர் முதலான அடியார்களின் நாவில் அட்சரம் எழுதி, ஞானத்தை அளித்ததும் இந்தக் குமரவேல்தான்.

தைப்பூசத் திருநாளில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு பகவான். ஞானமே வடிவான முருகப்பெருமானை சிறப்பிக்க தைப்பூச நாளை அர்ப்பணித்தார் குரு பகவான். அதனால் இந்த தைப்பூசத் திருநாளில் புனித நீராடுவதும், முருகப்பெருமானையும், தேவகுருவான பிரகஸ்பதியையும்  வணங்கித் தியானிப்பதும் நன்மையைத் தரும்.

தோஷங்கள் நீக்கும் நாளாக தைப்பூசம் விளங்குகிறது. வியாஜன் (வஜன்) என்ற ஆதிகாலச் சோழ மன்னன் ஒருவன், விதிவசத்தால் தவறுதலாக அப்பாவி அந்தணரைக் கொன்றுவிட்டதால் பாவத்துக்கு ஆளானான். அதனால் உண்டான தோஷம் நீங்க, பார்கவ முனிவரிடம் சென்று வழி கேட்டான். திருவிடைமருதூரில் அருளும் சிவபெருமானைத் தைப்பூச நன்னாளில் சென்று வழிபடுமாறு மன்னருக்கு அறிவுறுத்தினார் முனிவர். அதன்படியே செய்து நலம் பெற்றான் மன்னன்.

காலவரிஷியை அவமதித்த நந்தினிப் பசு, தவறை உணர்ந்து தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள வழிபட்ட தலமும் திருவிடைமருதூர்தான். அப்படி அந்தப் பசு வழிபட்ட தினமும் தைப்பூசமே. மன்னன் வரகுணபாண்டியனும் ஒரு தைப்பூச நன்னாளில் திருவிடை மருதூருக்குச் சென்று வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றதாக  திருவிடைமருதூர் தலவரலாறு கூறுகிறது. தைப்பூசத்தன்று திருவிடைமருதூருக்குச் செல்ல முடியாவிட்டாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று அம்மையப்பனையும், கந்தப்பனையும் வணங்கி வழிபட்டு, சகல தோஷங்களும் நீங்கப்பெற்று, சந்தோஷ வாழ்வைப் பெறலாம்.

 - மு.ஹரிகாமராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism