Published:Updated:

கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?

கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?

? சிலைக்கடத்தல் குறித்த செய்திகள் அதிகம் வந்தவண்ணம் இருக் கின்றன. கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள், தெய்வச் சிலை களைக் கடத்திப் பொருள் சம்பாதிப்பவர்கள்... இவர்களுக்கெல்லாம் தெய்வம் தண்டனை அளிக்காதா?

- கே.ராமமூர்த்தி, திண்டிவனம்

  இந்தக் குற்றங்களுக்குக் குறைந்தபட்சமாகக் கடுங்காவல் தண்ட னையும், அதிகபட்சமாக மாறுகால், மாறுகை போன்ற உடலுறுப்பு இழப்பை ஏற்படுத்தும் தண்டனைகள் வரை உண்டு. அதைச் செய்த ஆள், நோக்கம், தரம் - இவையும் ஆராயப்படும். அறியாமை, நிர்பந்தம், தூண்டுதல் போன்ற காரணங்களை ஆராய்ந்து நாடு கடத்தல், அபராதம், சாதாரணக் காவல் என்று தண்டனையில் குறைவும் இருக்கும்.

பண்டைய பாரதத்தில் இருந்த நிலை தற்போது இல்லை. கோயில் என்பது பொதுச் சொத்து. அன்பு, பண்பு, அடக்கம், ஆன்மிகம் ஆகியவற்றைப் பொதுமக்களுக்கு ஊட்டும் பள்ளிக்கூடமாக அது செயல்படும். அங்கு நடைபெறும் உற்சவங்களும், கலை விழாக்களும் பொதுமக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, அரசின் ஸ்திரத் தன்மையை நிலைநாட்டும். ஆகையால் கோயில் சொத்துகள் சார்ந்த குற்றங்கள்  அரசாங்கக் குற்றமாகவும் கருதப்பட்டுத்  தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரசின் கண்களிலிருந்து தப்பினாலும் கடவுள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. கடவுளின் தண்டனை இதைவிடக் கடினமாக இருக்கும்.

கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?

சிறையில் அடைத்தால் அவனது உணவுக்கும், சுகாதாரத்துக்கும் அரசு பொறுப்பேற்க வேண்டி வரும். அது அரசுக்குச் சுமை. தெய்வம், திறந்த வெளிச் சிறையில் அவனை வாட்டி வதைக்கும். பிச்சைக்காரனாக, தீராத நோய் உடையவனாக, ஊனமுற்றவனாக, முட்டாளாக - பல உருவங்களில் அவன் வளைய வருவான். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும். அவனது அடுத்த பிறவியில் தண்டனையளிக்கும் தெய்வம். அவனுக்கு உணவளிக்கும் பொறுப்பையும், சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தெய்வம் ஏற்காது. அதற்காக அவனை அலைய விடும்.

பிச்சைக்காரனாகவோ, நோயாளியாகவோ அவன் இருக்கும்போது காரணம் தெரியாமல் திண்டாடுவான். காரணம் முன் ஜன்ம வினை என்பதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். முற்பிறவியில் செய்த பாபம் இந்தப் பிறவியில் பிணியாகத் தோன்றி அவனுக்குத் தண்டனை அளிக்கும் என்று  கர்மவிபாகம் சொல்லும். அவர்கள் தண்டனை அனுபவிக்கவில்லையே என்று நீங்கள் ஏங்க வேண்டாம். அவர்களுக்கும் உண்டு தண்டனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?

? என் தோழி ஒருத்தி புராதன ஆலயங்களுக்கு மட்டுமே செல்வாள். அத்தகைய கோயில்களிலேயே தெய்வ சாந்நித்தியம் நிறைந்திருக்கும் என்பது அவள் நம்பிக்கை. எனில், தற்போது புதிதாகக் கட்டப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டால் பலன் கிடைக்காதா?

- எம்.பர்வதவர்த்தினி, தூத்துக்குடி

உள்ளே குடியிருப்பவரை வைத்து தான் கோயி லுக்குப் பெருமை. அந்த வகையில்... பழைமையான கோயில்கள், புதிய கோயில்கள் இரண்டு வகையிலும் உள்ளே குடியிருப்பது ஒன்றுதான். ஆகையால் பாகுபாடு இல்லை.

இரண்டுக்கும் இடையே கட்டுமானப் பொருள்களிலும், பொருளாதார ரீதியில் அமைந்த வடிவமைப்பிலும் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கும். பண்டைய மனிதர்களுக்கும், இன்றைய மனிதர்களுக்கும் இடையே பாகுபாடு இல்லை. சிந்தனையில் பாகுபாடு இருக்கும். கோயிலின் உருவ மாற்றம் காலத்தின் கட்டாயம். பண்டைய காலத்திலும் பாரதத்தின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள கோயில்களில் உருவ மாற்றம் உண்டு.

இறை வழிபாடு வேண்டும். அதற்குக் குந்தகமில் லாத மாறுதல்கள் ஏற்கப்படுகின்றன. ஆகவே, வானளாவிய கோபுரங்களுடன் கூடிய கோயில் களே உண்மையான வடிவம் என்று எண்ணுவது கூடாது. நம் இதயம்கூடக் கோயில்தான். குடியிருக் கும் கடவுளின் பெருமையைக் குறைக்காத வகையில், எழுப்பப்படும் அத்தனை கோயில்களும் ஒன்றுதான்; பாகுபாடு இல்லை.

கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?

? நல்லதோ கெட்டதோ எந்தவொரு விளைவாக இருந்தாலும், ‘தெய்வ சங்கல்பம் இப்படித்தான்...’ என்று தொடங்கி ஆறுதல் சொல்கிறார்கள் சிலர். அதென்ன தெய்வ சங்கல்பம்?

- கீர்த்தனா வேல்முருகன், வத்தலக்குண்டு

விடிந்தால் ராமனுக்குப் பட்டாபிஷேகம். அதைக் காண அயோத்தியே விழித்துக்கொண் டிருந்தது. நள்ளிரவில் தசரதனை அணுகிய கைகேயி,  ‘தாங்கள் அன்று அளித்த இரு வரங்களை இன்று கேட்கிறேன். ராமன் 14 ஆண்டுகள் வன வாசம் மேற்கொள்ள வேண்டும்; பரதன் அரியா சனத்தில் அமர வேண்டும். இவை இரண்டும் இப்போதே நடைமுறைக்கு வர வேண்டும்!’ என்றாள். பொழுது விடிந்தது. பட்டாபிஷேகக் கோலத்தில் இருக்க வேண்டிய ராமன், மரவுரி தரித்து (மரப்பட்டைகளால் ஆன ஆடை) காடு செல்ல ஆயத்தமானான். நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்தது. இதுவே தெய்வ சங்கல்பம்.

பஸ்மாசுரன் தவத்தில் ஆழ்ந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ‘நான் யார் தலையில் கை வைக்கிறேனோ, அவர் உடனே பஸ்பமாக வேண்டும்!’ என்று வரம் கேட்டான் அசுரன். அப்படியே வரம் அளித்தார் கடவுள். அசுரன் அகமகிழ்ந்தான். ஆனால், அது நீடிக்கவில்லை. அவன் முன் மோகினி ரூபத்தில் தோன்றினார் நாராயணன். மோகினியைப் பார்த்ததும் அசுரனுக்கு மோகம் வந்தது. அவன் மதிமயங்கிய வேளையில், அவன் தலையில் அவனே கை வைக்கும்படிச் செய்தாள் சாமர்த்தியசாலியான மோகினி! பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனான். கிடைத்த வரத்தை ஒரு முறைகூடச் செயல்படுத்த அவனால் இயலவில்லை. அசுரன் ஒன்று நினைக்க... தெய்வம் ஒன்று நினைத்தது. இதுவே தெய்வ சங்கல்பம்.

உலகையே உலுக்கிக்கொண்டிருந்தவன் தாரகாசுரன். ஈசனுக்கும் பார்வதிதேவிக்கும் பிறக்கும் மைந்தனால் மட்டுமே அவனை அழிக்க முடியும். எனவே, அப்போது தவத்தில் ஆழ்ந்திருந்த ஈசனை, பார்வதியுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்தனர் தேவர்கள். அதற்காக மன்மதனை ஏவினர். ஆனால் மன்மதன், ஈசனின் நெற்றிக் கண் நெருப்பில் எரிந்து சாம்பலானான். தேவர்கள் தோல்வியைத் தழுவினர். இதன் பிறகு, தவத்தில் இருக்கும் பார்வதியைச் சந்திக்கச் சென்றார் ஈசன். தன் மனதில், ‘பார்வதியைச் சந்திக்க வேண்டும்!’ என்று அவர் நினைத்தார். அவரது சங்கல்பத்தை ஈஸ்வர சங்கல்பம் என்பர். எத்தனை முயன்றாலும் ஈஸ்வர சங்கல்பம் இருந்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும்.

வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற பரீக்ஷித்து மகாராஜாவுக்கு தாகம் எடுத்தது. தண்ணீரைத் தேடி அலைந்தவர், காட்டில் ஓர் ஆசிரமத்தை அடைந்தார். அங்கு முனிவர் ஒருவர் தவத்தில் இருந்தார். பரீக்ஷித்து வந்ததை அவர் அறியவில்லை. இதனால் கோபம் கொண்ட பரீக்ஷித்து, முனிவரின் கழுத்தில் பாம்பை மாலையாகப் போட்டு, சிறுபிள்ளைத்தனமாக விளையாடினார்! சற்று நேரத்தில் அங்கு வந்த முனிவரின் மகன், தந்தை யின் கழுத்தில் பாம்பைக் கண்டு திடுக்கிட்டான். ‘இந்தக் காரியத்தைச் செய்தவன், ஏழு நாள்களில் தக்ஷகன் எனும் பாம்பு தீண்டி மரணம் அடையட் டும்!’ என்று சபித்தான் முனிகுமாரன். அந்த சாபத்தை எதிர்த்துப் போராடிய பரீக்ஷித்து மகா ராஜாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவர் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது. முனிகுமாரனது சாபத்தின் மூலம் பரீக்ஷித்தின் உயிரைப் பறித்தது தெய்வம். இதுவும் தெய்வ சங்கல்பமே!

? சுத்தமான பசும்பால், பசுஞ்சாண வறட்டி போன்றவை கிடைக்காத சூழலில், பாக்கெட் பால் போன்று தற்காலத்துக்கு ஏற்ப கிடைப்பதைக் கொண்டு ஆராதனைகளைச் செய்யலாமா?

- வேலா சிதம்பரம், காரைக்குடி

கேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா?நெருப்பை அணையாமல் வைத்துக்கொள்ள சாணி உருண்டை பயன்பட்டது. தவிர... வீட்டை சுத்தம் செய்ய, விறகின் பற்றாக்குறையை நிறைவு செய்ய, பூத உடலை எரிக்க, பயிருக்கு உரமாக, வாசலில் தண்ணீர் தெளிக்க, பறங்கிப் பூவைச் செருகி வைக்க, ஈயம் பூசிய பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, பஞ்சகவ்யத்தின் தூய்மையை உறுதி செய்ய, மூங்கில் கூடைகள் மற்றும் முறங்களைப் பராமரிக்க, குதிரில் சேமித்த அரிசியைப் பாதுகாக்க, நீரில் கிரகணத்தின் நிழலைக் காணும்போது கண் கூசாமல் இருக்க... இப்படிப் பல இடங்களில் சாணியின் சேர்க்கை தேவைப்படும்.

பிற்காலத்தில் சாணம், விஞ்ஞானத்தின் கண்ணில் பட... கியாஸ் (கோபர் கியாஸ்) ஆக மாற்றப்பட்டது; சமையல் எளிதானது. ஊதுபத்தி போன்ற பல பொருள்களுக்கும் அது மூலப்பொருள் ஆனது. இதுபோன்ற அதீத தேவைகளின் விளைவால் ஏற்பட்ட சாணத்தின் இழப்பு, குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மாற்று பொருளைத் தேட வைத்தது.

பசுவின் பால் தரமானது; தாய்ப்பாலின் பற்றாக் குறையையும் தீர்ப்பது. ஆண்டவனுக்கான அபிஷேகங்களிலும், உபவாசத்தின்போது உணவாகவும், மருந்து மற்றும் பானங்கள் தயாரிப்பிலும் பால் பயன்படும்.

பால் ஒரு முழுமையான உணவு. இரவில் பாலைக் காய்ச்சி, உறைகுத்தி வைக்க... மறு நாள் காலையில் தயிராகியிருக்கும். அதைக் கடைந்து வெண்ணெய் எடுத்து மீண்டும் காய்ச்சி, நெய் தயாரிப்பதுண்டு. இந்த நெய் தரமானது. ஆனால், இதில் ஏற்படும் கால விரயத்தைத் தவிர்த்து, பாலிலிருந்து நேரடியாக நெய்யை எடுக்க உதவியது விஞ்ஞானம். மட்டுமன்றி, நாள்பட்ட பாலையும் குளிர்சாதன அறைகளில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் பாலின் பற்றாக்குறையையும் விஞ்ஞானம் சரி செய்தது.

விஞ்ஞானம் நமக்குப் பிடிக்கும். அதைப் பயன்படுத்திப் பழக்கப்பட்டுவிட்டோம். இனி, பழைய நடைமுறைக்குத் திரும்ப இயலாது. எனவே, கிடைப்பதை வைத்துச் செயல்படுங்கள்; பலன் உண்டு.

இக்கட்டான சூழலில் கிடைத்ததைப் பயன் படுத்துவதை தர்மசாஸ்திரம் ஏற்கும். ஆனால், நல்ல சாணம், பால் மற்றும் நெய் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்போது அவற்றையே ஏற்க வேண்டும். அப்போதும் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தக் கூடாது.

- பதில்கள் தொடரும்...