Published:Updated:

‘பூசம் புண்ணியம் தரும்!’

‘பூசம் புண்ணியம் தரும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘பூசம் புண்ணியம் தரும்!’

தேச.மங்கையர்கரசி

‘பூசம் புண்ணியம் தரும்!’

தேச.மங்கையர்கரசி

Published:Updated:
‘பூசம் புண்ணியம் தரும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘பூசம் புண்ணியம் தரும்!’

தைப்பூசம்... தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. பொதுவாகவே மாதம்தோறும் வரக்கூடிய பூச நட்சத்திரம் சிறப்புக்குரியது. அதிலும் தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திரம் இன்னும் சிறப்பானது.

உத்தராயன காலத்தின் முதல் மாதம் தை. இந்த மாதத்தை மகர மாதம் என்று சொல்வார்கள். அகரம், உகரம், மகரம் இவை மூன்றும் ஓம் எனும் பிரணவ மந்திரத்திலிருந்து வெளிப்படுபவை. ஆக தை மாதம் என்பது, இறைவனிடத்தில் நாம் நமக்குத் தேவையான அனுக்கிரஹத்தை வாங்கக் கூடிய மாதம் ஆகும்.

இப்படியான சிறப்புகளுக்குரிய தை மாத பூச நட்சத்திரத்தில், பழநியிலுள்ள முருகப்பெருமானை வழிபடுவது மிகுந்த சிறப்புக்குரியது. எப்படி சூர சம்ஹாரத்துக்குத் திருச்செந்தூர் புகழ் பெற்றதோ, அதைப்போல தைப்பூசத்துக்குப் பழநி புகழ் வாய்ந்தது. குழந்தை ரூபத்தில் குன்றின்மேல் நின்றிருக்கும் முருகப் பெருமானை, இடும்பன் காவடி எடுத்து வழிபட்டதால், பக்தர்களும் அன்றைய தினம் காவடி எடுத்தும், பால்குடங்கள் எடுத்தும் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.

‘பூசம் புண்ணியம் தரும்!’

`நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே'


இப்படியாக, முருகப்பெருமானின் திருவடியைச் சரணடைந்தோர்க்கு ஒருநாளும் தீங்கில்லை என கந்தர் அலங்காரப் பாடலில் அருணகிரிநாதர் சொல்லி யிருக்கிறார். அதனால், தைப்பூசத்தன்று வீட்டிலோ, முருகனின் ஆலயங்களுக்கோ சென்று மனம் உருகித் துதி பாடி அவனையே முழு மனதாக நம்பி வழிபட நன்மைகள் யாவும் கைகூடும்.

தைப்பூசத்துக்குத்தான் எத்தனை மகிமை! ஆம், இது முருகனுக்குப் பார்வதிதேவி ஞானவேலை வழங்கிய நாளும்கூட. ஆகையால் இது அம்பாளுக்கும் உகந்த நாள். வடலூர் வள்ளலார் தன்னை ஜோதியில் ஐக்கிய மாக்கிக்கொண்ட திருநாளும் இதுவே. ஆகவே, தைப்பூச நாளில் வடலூர் சென்று ஜோதி வழிபாட்டில் பங்கேற்று மகிழ்கிறார்கள் பக்தர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘பூசம் புண்ணியம் தரும்!’

தைப்பூசத்தன்று சிவாலயங்களிலும் முருகனின் கோயில்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். இந்த வைபவங்களில் கலந்துகொண்டு, பக்தர்களுக்கு வேண்டுவன எல்லாம் அள்ளித் தரும்  தெய்வமான கந்தனை வழிபடுவதால் நமது கவலைகள் நீங்கும், பாவங்கள் தொலையும், புண்ணியம் பெருகும்.

தைப்பூசத்துக்காக மாலை அணிந்து, விரதமிருந்து, காவடி தூக்கிப் பழநிக்குச் செல்பவர்கள் ஏராளம். மற்றவர்கள் வீட்டிலிருந்தே எளிமையாக இறைவனை வழிபடலாம்.

‘பூசம் புண்ணியம் தரும்!’


காலை எழுந்ததும் குளித்துமுடித்து சுத்தமான ஆடைகளை உடுத்தி, பூஜையறையில் முருகப் பெருமானுக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். நிறைவாக கந்தனின் படத்துக்கு முன்பாக  தீபம் ஏற்றி, தேங்காய் - பழம், தாம்பூலம் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.

அன்று வீட்டில் வள்ளலாரையும் மனதில் தியானித்து வணங்கலாம். வள்ளலாருக்குப் பிடித்த அப்பம், தயிர்சாதம் சமர்ப்பித்து வழிபடலாம்.பிரார்த் தனை முடிந்த பிறகு, அருகிலிருக்கும் யாரேனும் ஒருவருக்காவது நிச்சயமாக தர்மம் செய்ய வேண்டும்.

 `வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். அவர் வாக்கை நிறைவேற்றும் பொருட்டு இப்போதும் வடலூரில் அன்னதானம் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நாமும், தைப்பூசத்தன்று பூஜை முடிந்ததும் வறுமையில் வாடுபவர்களுக்கு தர்மம் செய்தால், இறை வனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

‘பூசம் புண்ணியம் தரும்!’

பொதுவாகவே எந்த விழா கொண்டாடி னாலும் அதன் வழியாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்குச் சிறப்பான ஒரு விஷயத்தைச் சொல்லித் தரவேண்டும் என்பது நம் முன்னோர்களின் வழிமுறை.

விரதம் இருப்பது பசியின் தன்மையை உணர்த்துவதற்காகவே  என்பதைப் புரிய வைப்பதோடு, பசியிலிருப்பவர்க்கு உணவிடும் பழக்கத்தையும் நம் சந்ததிகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நம் குழந்தைகளுக்கு பக்தியை மட்டுமல்லாமல்,  வாழ்வியல் நெறிமுறை களையும் கற்றுத்தருவதே இதன் நோக்கம்.

ஆக, தைப்பூசத்தன்று குடும்பத்தோடு சேர்ந்து கந்தனின் துதியைப் பாடுங்கள். அவன் நாமத்தைச் சொல்லச் சொல்ல இனிக்கும் என்பார்கள். அதுபோல, நம் உள்ளமும் வாழ்வும் அவனை நினைக்க நினைக்கத் தித்திக்கட்டும்.

தொகுப்பு: மு.பார்த்தசாரதி