Published:Updated:

கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?

கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?
கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?

? என் தோழிகளில் சிலர் குங்குமத் திலகம் இடும்போது, தங்களின் புருவ மத்தியில் இட்டுக் கொள்கிறார்கள். புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்ளலாமா?

- கே.வைதேகி, திருவாரூர்

புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்ள லாம், தவறில்லை. புருவ மத்யம், உடம்பில் இருக்கும் மர்ம ஸ்தானங்களில் ஒன்று. அதன் பாதுகாப்புக்குப் பொட்டு உதவும். மஞ்சளில் உருவெடுத்த குங்குமம் தோல் வியாதியை அண்ட விடாது. அங்கு ரோமம் வளராமலும் இருக்கும்.

ஒரு விஷயம் சட்டென்று ஞாபகத்துக்கு வராமல் தவிப்பவன், தன்னையும் அறியாமல் அவன் விரல் புருவ மத்யத்தைத் தட்டும். சிறிது நேரம் கழித்து ஞாபகம் வந்துவிடும். அங்கு தட்டினால் ஞாபகம் வரும் என்ற நம்பிக்கை எப்படியோ புகுந்துவிட்டது.

திருமணத்தில் கணவனோடு சங்கமமாகும் கன்னிகையின் புருவ மத்யத்தை, தர்ப்பையால் தடவி விடப் பரிந்துரைக்கும் தர்மசாஸ்திரம் (இதமஹம் யா...). கணவன் வீட்டில் புதியவர் களைச் சந்திக்கும் தருணத்தில் அவளது சிந்தனை, சிக்கலின்றிச் செயல்படும் வாய்ப்பையும் அது ஈட்டித்தரும். திருமண், திருநீறு, சந்தனம், சாந்து போன்றவை முகத்துக்கு அழகோடு சுகாதாரத்தையும் தருகிறது. பாபம் போகும், தூய்மை பெறும், செயல்பாடு சிறக்கும் என்று சாஸ்திரம் கூறும் (மிருத்திகே ஹனமே பாபம்...) மஞ்சள் மங்கலப் பொருள். அதில் உருவான குங்குமம், மங்கலம் தரும். எனவே குங்குமம் இட்டுக்கொள்வது சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?

? திருக்கோயில்கள் சிலவற்றில், செப்புத் தகடுகளால் கூரை வேய்ந்திருப்பதைப் பார்த் திருக்கிறேன். அதற்கான தாத்பர்யம் என்ன?

- சொ.ராமநாதன், நாகர்கோவில்

தென்னங்கீற்றினால் ஆன கூரையை வருடத் துக்கு ஒரு முறை மாற்ற வேண்டியிருக்கும். ஓட்டுக் கூரையே ஆனாலும், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது அதைப் பிரித்து தூசி தட்டி மீண்டும் கூரை அமைக்க வேண்டியிருக்கும்.

செப்புத் தகடுகளால் ஆன கூரை நீண்ட நாள்கள் நீடிக்கும். பராமரிப்புச் செலவும் குறையும். கூரையும் லேசாக இருப்பதால் தேய்மானம் குறைவு. மழை, வெயில், காற்று ஆகியவற்றின் தாக்கத்தால் தென்னங் கீற்று மற்றும் ஓட்டுக் கூரைகள் எளிதில் பாதிப்புறும். ஆனால் செப்புத் தகடு தாக்குப் பிடிக்கும்.கூரையின் அதிக ஆயுள், பொருளாதாரம் என்ற நோக்கில் செப்பு சிறப்பு. செல்வச் செழிப்பு மிகுதியாக இருந்தால், தங்கத் தகடுகூடப் பயன்படுத்தலாம். தற்போது, தங்க முலாம் பூசிய கோபுரங்களைக் காண முடிகிறதே. கூரை முழுவதும் தங்க முலாம் பூசும் காலமும் வரும்!

கூரை வேண்டாம் என்று நினைக்கும் தெய்வங்களும் உண்டு. கேரளத்தில் கூரை இல்லாத சிறு கோயில்கள் ஏராளம். காவல் தெய்வங்களின் கோயில்களில் கூரைக்கு முன்னுரிமை இருக்காது.

? வீட்டில் சிறப்பு வழிபாடுகளின்போது சுவாமிக் காகப் பதார்த்தங்கள் தயார் செய்வோம். பூஜை முடிந்தபிறகே அவற்றைப் பிள்ளைகளுக்குத் தர இயலும். பூஜை முடிய அதிகநேரம் ஆகும் எனில் பிள்ளைகள் பசி தாங்க மாட்டார்கள். இந்த நிலையில் என்ன செய்வது?

- கே. விஜயலக்ஷ்மி, திருப்பூர்-2

பூஜை முடியும் வரையிலும் பிள்ளைகள் பசியோடிருக்கத் தேவையில்லை. அவர்களுக்குத் தனியாக உணவு தயாரித்து வழங்க வேண்டும். ஒருவர் சிறிதளவு சாப்பிட்டாலும் அதன்பின், கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படும் தகுதியை அந்தப் பொருள் (பதார்த்தம்) இழந்துவிடும். குழந்தைகளும் அதைச் சாப்பிடக் கூடாது. 

கடவுளுக்குப் படைக்கப்பட்ட பொருளை, அதன்பின் குழந்தைகளுக்குக் கொடுப்பதே உண்மையான அன்புக்கு அடையாளம். தெய்வ வழிபாடு வேறு; நமது அன்பின் வெளிப்பாடு வேறு. கடவுளுக்குப் படைக்கப்படும் பொருளைப் பிறர் பார்க்காமலும், அதன் வாசனையை முகராமலும் இருக்க வேண்டும். கோயில்களில், கருவறைக் கதவுகளைச் சாத்திக்கொண்டோ திரை போட்டு மறைத்தபடியோ நிவேதனம் செய்வார்கள். நைவேத்தியப் பொருள்களை அவருக்கு அளித்த பிறகு நாம் பெறும்போது, நம் மனம் மாசற்று விளங்கும்!

கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?

? வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்களே ஏன்? `இப்படித்தான் படுக்க வேண்டும்’ என்ற சாஸ்திரங்களின் வழிகாட்டல்கள் உண்டா?

- கலைவாணி அரவிந்தன், கடலூர்

வடக்கில் தலை வைத்துப் படுத்தால், வட துருவத்தின் ஈர்ப்பால், நமது வலிமை குன்றுவதற்கு வாய்ப்புண்டு. எனவேதான், ‘வடக்கில் தலை வைத்து உறங்க வேண்டாம்!’ என்றார்கள்.

தெற்கே தலை வைத்து, வடக்கே கால் நீட்டி உறங்குவது சிறப்பு. வடக்கில் தலை வைத்தால் ஏற்படும் பாதகத்தின் தரத்தைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். ஒன்றை இழந்த பிறகு அதை மீண்டும் பெறுவதற்கான வழியைத் தேடுவதை விட, இழக்காமல் இருப்பதே சிறந்தது.

? புராண-இதிகாசங்களில் வரும் அசுரர்கள், திரைப்படங்களில் காட்டப்படுவதுபோன்று விகாரத் தோற்றத்துடன்தான் இருந்தார்களா? தோற்றத்தை யும் பலத்தையும்  வைத்துதான் அசுர இனம் அடையாளம் காணப்பட்டதா?

கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா?- எம்.கிருஷ்ணகுமார், சென்னை-21

காரணமே இல்லாமல், பிறரைத் துன்புறுத்தி, அதைப் பார்த்து மகிழ்வது அரக்க குணம். உலக இயக்கத்துக்கு உதவும் நிரந்தர சட்ட திட்டங்களை சீர்குலைப்பதும் அரக்க குணத்தின் அடையாளமே. அரக்கர்கள், தங்கள் தவத்தினால் கடவுளிடமிருந்தே பலம் பெற்ற தகவல்கள் புராணத்தில் உண்டு. ஆனால், அவர்களது செயல்பாடு, இயற்கைக்கு மாறாக உயிரினங் களைத் துன்புறுத்துவதில் முற்றுப் பெற்றது.

‘எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். எவரையும் துயரம் தழுவக்கூடாது’ என்ற கோட்பாட்டைக் குலைப்பவர்களை, அரக்கர்களாகச் சித்திரிப்பது புராணத்தின் மரபு. மகாபலி அப்பழுக்கு இல்லாதவர்; பண்பாளர். ஆனால், தேவையின்றி தேவர்களைத் துன்புறுத்தியதால் அவர், அரக்க இனத்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

முனிவருக்குப் பிறந்தவன் ராவணன். தாய், அரக்க இனத்தைச் சார்ந்தவள் ஆதலால், ராவணனிடமும் கொடூர குணம் தென்பட்டது. ஆனால், அதே தாயின் வயிற்றில் பிறந்த விபீஷணனின் மனம் மென்மையாக இருந்தது. ஆம், இயல்பை வைத்து இனம் மாறுபடு கிறது. ஹிரண்யகசிபு மைந்தனாக பிரகலாதன், உக்ரசேனனின் மைந்தன் கம்சன், த்வஷ்டாவின் மைந்தன் விச்வரூபன் ஆகியோர் ‘இயல்பே இனத்துக்குக் காரணம்’ என்று சுட்டிக் காட்டியவர்கள். பகவான் கண்ணனும், இயல்பை வைத்தே இனப் பாகுபாடு எழுந்ததாகக் கூறுவார்.

- பதில்கள் தொடரும்...