ஜீவநதியும் ஜீவகவியும்

சீதையும் ராமலட்சுமணரும் கோதாவரி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது அந்த ஆற்றில் தாமரை மலர்களையும் நீல மலர்களையும் கண்டார்களாம். மலர்ந்த தாமரைப் பூக்களைப் பார்த்தார்கள்; நிமிர்ந்து விளங்கிய நீல மலர்களையும் பார்த்தார்கள்.

அந்த மலர்களை அலைபட்ட வெள்ளம் இவர்கள் நின்ற கரையிலே ஒதுக்கியதாம். அந்த நதியின் இருகரையும் திருமகள் உறைவிடமாய்த் திகழ்ந்தன. அந்நதி பல வாய்க்கால்கள் வழியாகப் பாய்ந்து நாட்டுக்குச் செழுமையூட்டி வயல்களாய்ப் பொலிந்து மக்களுக்கு உணவுப்பொருள் பலவற்றையும் விளைத்துக் கொடுத்தது.

அந்நதியில் எத்தனையோ நீராடு துறைகள். அது மலையிலிருந்து காடு, நாடு, ‘பாலை’ என்று கருதப்படும் பாழான பிரதேசம் ஆகிய நிலங்களின் வழியாகக் கடற்கரைப் பிரதேசத் துக்கு வந்து கடலிலே சங்கமம் ஆகிறது.

ஆற்றின் தெளிவும் குளிர்ச்சியும், ஜீவ நதியாய் இடையறாது பெருகியோடும் அந்த ஓட்டமும், நீண்ட காட்டு வழிகளில் அலைந்து திரிந்துவந்த ராம லட்சுமணருக்கும் சீதைக்கும் எத்தகைய இன்பக் காட்சியாக இருந்திருக்க வேண்டும்! அக்காட்சியை வருணிக்கும் கவிஞன், ‘சான்றோர் கவி’ என்று சொல்லும்படி இருக்கிறது கோதாவரி நதி என்கிறான்.

புவியினுக்(கு) அணியாய், ஆன்ற
பொருள்தந்து, புலத்திற் றாகி,
அவியகத் துறைகள் தாங்கி,
ஐந்திணை நெறி அளாவிச்
சவியுறத் தெளிந்து, தண்ணென்
றொழுக்கமும் தழுவிச், சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா
வரியினை வீரர் கண்டார்.

சான்றோர் கவியைச் சிலேடை மூலமாகக் கோதாவரி நதிக்கு உபமானமாக்கும் அற்புதமான செய்யுள் இது.

அன்னமும் சீதையும்

கரையோரமாகப் போகிறார்கள். அப்போது அவ்வழியாக அன்னம் ஒன்று வரக் காண்கிறார்கள். அது இவர்களைக் கண்டதும் ஒதுங்கிப் போகிறது. மனிதரைக் கண்டதும் பறவை ஒதுங்கிப் போவது இயல்புதானே? எனினும் இந்தச் சாதாரண நிகழ்ச்சியில் காதலன் ஒரு விசேஷமான பொருள் காண்கிறான்.

“உல்லாச நடைக்குப் பேர்போன அன்னப் பறவை - வெட்கமடைந்ததுபோல் ஒதுங்கி நடப்பானேன்?” என்று கருதி, அருகே நடந்துவரும் சீதையின் நடையை உற்று நோக்குகிறான் ராமன். உற்றுநோக்கி யதும் ஒரு புன்சிரிப்பு - ‘சிறியதோர் முறுவல்’ - வந்துவிடுகிறதாம் ராமனுக்கு.

ஓதிமம் ஒதுங்கக் கண்ட
உத்தமன், உழைய ளாகும்
சீதைதன் நடையை நோக்கிச்
சிறியதோர் முறுவல் செய்தான்.

இந்தச் சிறிய முறுவலின் பெரும் பொரு ளைக் கவிஞன் உய்த்துணர வைக்கிறான். சீதையின் நடைக்குத் தோற்று அன்னம் ஒதுங்கிப் போனதாகக் கருதி அந்தத் தோல்விக்கு இகழ்ச்சியும், சீதையின் நடை யழகுக்கு மகிழ்ச்சியும் தோன்றச் சிறுநகை புரிகிறானாம் ராமன்.

யானையும் ராமனும்

இப்படி ராமனுக்குப் புண் சிரிப்பு வந்தது போல், சீதைக்கும் புன்னகை வருகிறதாம். ராமனது புன்னகைக்கு, ஒதுங்கிப்போன அன்னம் காரணமென்றால், சீதையின் புன்னகைக்கு ஆற்றில் தண்ணீர் குடித்துத் திரும்பிப் போகும் யானை காரணமாகிவிடுகிறதாம்.

மாதவள் தானும் ஆண்டு
வந்து, நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்
புதியதோர் முறுவல் பூத்தாள்.

நீர் பருக வந்த யானை நீர் பருகியதும் இயல்பாகத் திரும்பிப் போகிறது. ஆனால் ‘ராமனது கம்பீரமான நடைக்குத் தோற்றுத்தான் அந்த யானை அப்படிப் போகிறது!’ என்று இகழ்ச்சியும் மகிழ்ச்சியும் தோன்றப் புன்னகை புரிகிறாளாம் சீதை. அந்த நாளில் யானைப் போர் போராட்டத்தின் ஒரு முக்கியமான பகுதி. யானை புறங்காட்டிப் போவது போரின் வெற்றிக்கே காரணமாகி விடும். போரில் தோற்றவர் புறங்காட்டிப் போவதுபோல் யானை போகிறதாம். அது அப்படிப் போகும் போக்கை நோக்குகிறாள் சீதை. ‘மீளும் போதகம் நடப்ப நோக்கி’ என்று கவிஞன் கூறுவது கவனிக்கத் தக்கது. ராமனுடைய சாதாரண நடையில் அவ்வளவு வெற்றிப் பெருமிதம் கண்டு கர்வம் கொள்கிறது சீதை நெஞ்சு.

இருவகைப் புன்சிரிப்பு

ராமன் முகத்தில் தோன்றிய புன்னகையைச் ‘சிறிய முறுவல்’ என்று கூறும் கவிஞன், சீதை முகத்தில் திகழும் புன்சிரிப்பைப் ‘புதிய முறுவல்’ என்று சிறப்பித்துக் காட்டுகிறான்.

`ராமனுள்ளம் ஆழமான கருங்கடல் போல் சிந்தனை நிரம்பியது’ அகத்தின் ஆழத்துக்கு ஏற்றபடி அவன் மலர்ந்த முகம் எப்போதும் அமைதியாக விளங்குகிறது. இப்போது சீதையின் நடையழகைப் பாராட்டும் காதல் தென்றல் போல் வீச, ஒரு சிற்றலை போல் எழுந்து மறைகிறது. சிறிய முறுவல், ராமன் திருமுகத்திலே. மீண்டும் அமைதிதான், ஆழ்ந்த சிந்தனைதான்.

சீதைக்கோ இப்போது ஒரு புதிய இன்ப வாழ்வே பிறந்துவிட்டது போலத் தோன்றுகிறது. ராமனுடன் இருக்கும்போது நாடென்றும் காடென்றும் வேற்றுமையே தெரிவதில்லை அவளுக்கு. பனிக்கும் வெயிலுக்கும்தான் வேற்றுமை தெரிகிறதா, என்ன? ராமனைப் பற்றிய சிந்தனை தவிர வேறு சிந்தனைக்கு இடமே கிடையாது இந்த உள்ளத்திலே. சீதையின் முகத்திலே பூத்த புதிய புன்னகை சீதைக்குக் கிடைத்த வாடாத ஒரு மலர் போல், சீதையை இப்போது அணி செய்திருக்கும் ஒரு பொன்னகை போல் ஆகிவிடுகிறதாம்!

(20.6.1948 மற்றும் 27.6.1948 ஆனந்தவிகடன் இதழ்களிலிருந்து...)