Published:Updated:

புதிய புராணம்! - கடைசி ஆயுதம்!

புதிய புராணம்! - கடைசி ஆயுதம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - கடைசி ஆயுதம்!

ஷங்கர்பாபு

புதிய புராணம்! - கடைசி ஆயுதம்!

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்! - கடைசி ஆயுதம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - கடைசி ஆயுதம்!

ஞானம் அடைந்தவர்கள் ஞானிகள் என்றும், அவர்கள் பொதுவாக உலகியல் வாழ்க்கையி லிருந்து விலகி இருப்பவர்கள் என்றும் நாம் நினைக்கிறோம்.

 அவர்கள் மட்டுமல்ல, உலகியல் வாழ்க்கையை விடமுடியாத நம்மைப் போன்றவர்களும் ஞானம் அடைய முடியும்.  அந்த ஞானம்  நம் வாழ்க்கைக் குப் பயன்படுவதை அனுபவத்தில் பார்க் கவும் முடியும்.

ஞானம் என்றால் என்ன?

நம்முடைய முயற்சிகள் எல்லாம் பலனற்றுப் போன நிலையில், ‘இனி நம் கையில் எதுவும் இல்லை’ என்ற மனநிலையில் இறைவனைப் பற்றி நிற்கும் நிலையே உண்மையான ஞானம். இறைவனை அடைவதற்கும் சரி, நம்முடைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் சரி இதைவிட மேலான வழி இல்லை.

தன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார் மூர்த்தி. கல்யாணப் பேச்சைத் தொடங்கும் போது, பலரும் உதவி செய்வதாகக் கூறினார்கள். அவர்கள் கூறியதைக் கேட்டு, திருமணத்துக்கு நாளும் குறித்து விட்டுத் திரும்பிப் பார்த்தால், பணம் தருவதாகச் சொன்னவர்கள் ஆளுக்கொரு கதை சொல்லி நழுவிவிட, திகைத்து நின்றார் மூர்த்தி. கண்ணுக்குத் தெரிந்த வெளிச் சங்கள் எல்லாம் தொலைந்து போய்விட்ட அந்த நிலையில், ‘இனி என்ன செய்ய... நடக்கறது நடக்கட்டும்’ என்ற முடிவுக்கு வந்தார்.

புதிய புராணம்! - கடைசி ஆயுதம்!

இப்படியான... ‘இனி இறைவன் பார்த்துக்கொள்வார்’ என்ற இந்த சரணாகதி நிலையே ஞானம். நம்மால் ஆவது எதுவுமில்லை, அனைத்துக்கும் அந்தப் பரம்பொருளே கர்த்தா என்று தெளிந்துணரும் நிலை அது!

 பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதும், அவைக்கு அழைத்து வரப்படுகிறாள் திரௌபதி. அவளுடைய கெஞ்சல், நியாயத்துக்கான முறையீடுகள் எதுவும் பலன் தரவில்லை. உச்சகட்டக் கொடுமையாக கௌரவர்கள் அவளைத் துகிலுரிக்கவும் தயாராகிறார்கள்.

தன்னுடைய ஆடையை இறுகப் பற்றிக் கொண்டு தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவள் செய்த முயற்சி எதுவும் பலிக்கவில்லை. கரங்கள் சோர்ந்து, வார்த்தைகள் வலுவிழந்து, மனம் தளர்ச்சியடைந்த நிலையில், அவள் செய்யவேண்டிய முயற்சி எதுவுமே இல்லையென்று ஆன நிலையில், முயற்சி செய்வதையே விட்டுவிட்டு, பகவானிடம் தஞ்சம் அடைந்தாள்.

திரௌபதி எடுத்த அந்த முடிவைப் பற்றிப் பாமரர்களுக்கும் விளங்கும்படி சொல்வதானால், ‘இனி நடக்கறது நடக்கட்டும். நம்ம கையில் எதுவும் இல்லை’ என்று முடிவெடுத்ததாகவே சொல்லவேண்டும்.

பக்த மார்க்கண்டேயனுக்கும் இதுதான் நடந்தது. அவனுக்கு 16 வயது நிறைவடைந்த நிலையில், அவன் உயிரைக் கவர்ந்து செல்ல காலன் வருகிறான். இந்த இடத்தில் மார்க்கண் டேயனின் மனநிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எல்லா வழிகளும் அடைபட்டுவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் ஒரே வழியாகத்  தன்னுடைய முயற்சிகளைக் கைவிட்டுவிட்டு, ‘நடக்கறது நடக்கட்டும்... இனி நம்ம கையில் எதுவும் இல்லை’ என்ற முடிவை எடுத்தான். சிவ லிங்கத்தைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறான். பரமனின் திருவருளால் சிரஞ்ஜீவியானான்.

புத்தருக்கும் இப்படித்தான் ஞானம் கிடைத்த தாகச் சொல்லப்படுகிறது. இறுதி உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக, உடலை வருத்துகிறார். பட்டினியும் இருக்கிறார். பல குருமார்களைச் சந்திக்கிறார். பலவித தியானங்களை, பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஆனாலும், இறுதி உண்மையை அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

 ஒருநாள் தன்னுடைய முயற்சிகள் அனைத்தை யும் கைவிட்டுவிட்டு, இனி தான் செய்ய எதுவுமில்லை. தேடிய உண்மை கிடைத்தால் கிடைக்கட்டும், கிடைக்காவிட்டாலும் கவலை யில்லை என்ற மனநிலையுடன், அதுவரை தனது கட்டுப்பாட்டில் இருந்த மனதை நிபந்தனையின்றி விடுவித்து விடுகிறார். இப்படி அவருடைய முயற்சிகளை எல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில், அந்த கணத்தில் அவருக்கு ஞானம் கிடைக்கிறது.

முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போன நிலையில், ‘இனி நடப்பது நடக்கட்டும்’ என்ற மனநிலைக்கு வருவதுதான் தன்னை  இழத்தல் என்பது. ஆன்மிகத்தில் சுய முயற்சிக்கு இடமே இல்லை. முயற்சி செய்யாதிருப்பதே ஆன்மிகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆன்மிகத்தில் மட்டுமன்று, அன்றாட வாழ்க்கையிலும் பல நிலைகளில், ‘நடப்பது நடக்கட்டும்’ என்ற மனநிலையை அடைந்து, எதற்காக அந்த மனநிலையை அடைந்தோமோ, அதைச் சார்ந்த பல நன்மைகளை நாம் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.

நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலை எல்லாக் கதவுகளையும் தட்டித் தட்டி ஓய்ந்த பிறகு ஏற்படும் நிலை. பிடித்திருந்த எல்லாக் கட்டுகளையும் விட்டுவிட்டுப் பரிபூரணமாக நிராயுதபாணியாக இருப்பது. இந்த மனநிலையை அடைந்துவிட்டால், நீங்கள் விரும்பும் துறைகளில் உங்களுக்கு அது அற்புத சக்தியைக் கொடுக்கும்.

கேட்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும் இந்த வழி உண்மையில் அவ்வளவு சுலபமானதன்று. காரணம், நம் மனம் அவ்வளவு சுலபத்தில் தன்னை இழக்க ஒப்புக்கொள்ளாது என்பதுதான். சுயமுயற்சியைக் கைவிட்டுவிட்டு, இறைவ னிடம் சரணாகதி அடைவதற்கு முன்பு ஆயிரம் கணக்குகளைப் போட்டுப் பார்க்கும்.

அந்த நிலைகளையும் கடந்து இறைவனிடம் நாம் அடையும் சரணாகதிதான் நம்முடைய கடைசி ஆயுதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism