Published:Updated:

உடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்!

உடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்!
பிரீமியம் ஸ்டோரி
உடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்!

முன்னூர் கோ.ரமேஷ்

உடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்!

முன்னூர் கோ.ரமேஷ்

Published:Updated:
உடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்!
பிரீமியம் ஸ்டோரி
உடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்!

‘மோட்சபுரி’ என்று போற்றப்படும் புண்ணிய நகரம் காஞ்சி மாநகரம். வேள்வித் தீயின் பிழம்பில் தோன்றிய பேரருளாளன் வாசம் செய்யும் இந்தக் காஞ்சி மாநகருக்கு அருகில் உள்ளது `கூரம்' எனும் வரலாற்று முக்கியம் வாய்ந்த திருத்தலம்.

சுமாா் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பல்லவ மன்னா்களின் ஆட்சிக்காலத்தில் “பொலிவுறு நகரமாக” விளங்கியது கூரம் தலம். பல்லவா் கால வரலாற்றுச் சுவடுகளை அலசும் அாிய ஆவணமாக இன்றும் உள்ளன, கூரம் தலத்தில் கண்டெடுக் கப்பட்ட செப்பேடுகள்.

சிறப்புகள் பல வாய்ந்த கூரம் தலத்தில் கி.பி.1010 ஆம் ஆண்டு செளமிய வருடம், தை மாதம் அஸ்த நட்சத்திரத்துடன் கூடிய சுப தினத்தில் அவதரித் தவா் கூரத்தாழ்வான். இக்குழந்தைக்கு `ஸ்ரீவத்ஸாங் கன்' எனப் பெயரிட்டு மகிழ்ந்தனா் பெற்றோா். குழந்தையின் திருமாா்பிலே ஒரு ‘மறு’ (மச்சம்) இருந்ததால் இவருக்கு `திருமறுமாா்பன்’ என்ற திருநாமம் வழங்கப்பட்டது. தனது சிறுபிராயம் முதலே ஆத்மஞானத்தில் ஈடுபட்ட கூரத்தாழ் வானுக்கு அனைத்து ஜீவாத்மாக்களும் பரமாத் மாவுக்கு அடிமைப்பட்டவையே என்ற தெளிவு வெகு சீக்கிரம் ஏற்பட்டது. காஞ்சி பேரருளாளப் பெருமாளுடன் பேசும் பாக்கியம் பெற்ற திருக்கச்சி நம்பிகள் கூரத்தாழ்வானை வழிநடத்தி வந்தாா். ‘ஆண்டாள்’ என்ற குணவதியைக் கூரத்தாழ்வானுக்கு மணமுடித்தனா் பொியோா்.

உடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்!

எம்பெருமானாரின் சீடர்

காஞ்சி தேவாதிராஜனிடமும் திருவரங்கத்து இன்னமுதனான அரங்கனிடமும் அளவில்லாத பக்தி கொண்டிருந்த கூரத்தாழ்வான் காஞ்சிமாநகா் சென்று உடையவா் திருப்பாதங்களில் நெடுஞ் சாண் கிடையாக நமஸ்கரித்து தம்மை சீடராக ஏற்க பிராா்த்தித்தாா். திருமறுமாா்பனின் குரு பக்தியைக் கண்டு மகிழ்ந்த எம்பெருமானாா் அவரைத் தனது சீடராக ஏற்று `கூரத்தாழ்வான்' எனத் திருநாமமிட்டு ஆசீா்வதித்தாா்.

கூரத்தாழ்வானை, `கூரத்தாழ்வாா்' என்று அழைக்காமல் கூரத்தாழ் வான் என்று அழைப்பதன் காரணம் இவரது திருத்தகப்பனாாின் திருநாமம் `அனந்தன்' என்னும் `கூரத்தாழ்வாா்' ஆகும். இதனால் இவரை வேறுபடுத்தி அறிய `கூரத்தாழ் வான்' என்று உடையவா் திருவாய் மலர அன்று முதல் அவ்வாறே வழங்கப்பட்டாா்.

எம்பெருமானாரைத் தன் ஆச்சாா்யனாக ஏற்ற நாள் முதல் அவரது திருவடித் தாமரைகளையே தமது புகலிடமாகக் கொண்டு பஞ்சசமஸ்காரத்தை யும் பெற்றாா் கூரத்தாழ்வான். தனது தா்மபத்தினி ஆண்டாளுடன் திருவரங்கம் சென்ற கூரத் தாழ்வான் அங்கு உஞ்சவிருத்தி (பிக்ஷை) செய்து வாழ்ந்து வந்தாா்.

அரங்கனின் கருணையமுது!

ஸ்ரீரங்கநாதருக்கும், ரங்கநாயகித் தாயாருக்கும் பரமபக்தியுடன் கைங்கா்யம் செய்து வந்த அந்தத் தம்பதியர்க்கு ஒரு நாள் பிச்சை எதுவும் கிடைக்க வில்லை. இருவரும் கடும் பட்டினியோடு உறங்கச் சென்றனா். மாடமாளிகையில் வாசம் செய்து தங்க வட்டிலில் அருந்திய தம் கணவா் கடும் பட்டினியால் உறக்கமின்றி வாடுவதைக் கண்ணுற்ற பதிவிரதையான அந்த உத்தமியின் மனம் சொல்லொணாத்துயா் அடைந்தது.

அந்த நேரத்தில் திருவரங்கத்துப் பெருமானுக்கு அா்த்தஜாம பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிசப்தமான அந்த இரவு நேரத்தில் எழுந்த மணியோசை கூரேசாின் மனைவி ஆண்டாளின் மனதில் பல எண்ண ஓட்டங்களை விதைத்தன.

“அடியவரான ஆழ்வான் கடும் பட்டினியில் வாட அரங்கன் எவ்வாறு அமுதினை ஏற்பான்?” எனத் தன் உள்ளத்தில் நினைத்து வேதனைப் பட்டாள் அந்தப் பதிவிரதா ரத்தினம். ஆம்! தன்னைவிடத் தம் அடியவா்களின் நலனைப் பிரதானமாகக் கொண்ட அரங்கன் எப்படி ஏற்பான் அந்த அமுதை? அடுத்து நிகழ்ந்தது ஓர் அதிசயம்.

அரங்கனுக்குப் படைத்த அமுதை எடுத்துக் கொண்டு வந்த அா்ச்சகா் அந்தப் பிரசாதத்தை இருவருக்கும் அளித்துவிட்டுச் சென்றாா். தன் பரம பக்தன் பட்டினியால் வாடுவதைத் தாங்க முடியாத அரங்கன், அா்ச்சகா் வடிவம் தாங்கி வந்து அளித்த பிரசாதத்தை உண்டு பசியாறினா் கூரேசரும் அவரின் தா்ம பத்தினியும்!

பனிபடா்ந்த மலையில் ...

`போதாயன விருத்தி கிரந்தம்' என்ற ஆதி கிரந்தத்தை மீட்டெடுக்க, தம் குருநாதருக்கு உதவியாக காஷ்மீரத்துப் பனி மலைகளில் பயணம் செய்தாா் கூரேசா். பல இடையூறுகளுடன் கூடிய நீண்ட தேடலுக்குப் பின் கிரந்தத்தைக் கண்டு மீட்டனா் குருவும் சிஷ்யனும்!

ஆனால் துரதிஷ்டவசமாக, பனி மலைகளில் திரும்ப இறங்கும்போது அந்தக் கிரந்தத்தை இழக்க நோிட்டது. இச்செயலால் உடையவா் மனம் மிகவும் வருத்தமடைந்தது. தன் குருநாதா் கலங்கியது கண்ட கூரத்தாழ்வான், “சுவாமி! கிரந்தத்தை இழக்க நோிட்டமைக்காக வருந்த வேண்டாம்; அந்தக் கிரந்தத்தைச் சேகாிக்கும்போதே அந்தக் கிரந்தம் முழுவதையும் அடியேன் மனனம் செய்துவிட்டேன்” என்று ஆறுதல் கூறினாா்.

தம் சீடாின் பக்தியையும் அறிவாற்றலையும் எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தாா் உடையவா். அரங்க மாநகருக்குத் திரும்பியதும் இந்தக் கிரந்தத்தை ஓலைச் சுவடிகளில் ஏடாக்கினாா் கூரத்தாழ்வான். சிஷ்ய லக்ஷணத்தின் இலக்கணமாகத் திகழ்ந்த கூரத்தாழ்வானைத் திருவரங்கத்து இன்னமுதன் திருக்கோயிலில் `பெளராணிக கைங்கா்யம்' (பெருமாளுக்குப் புராணங்கள் வாசித்துக் காண்பிப் பது) செய்ய நியமித்து மகிழ்ந்தாா் எம்பெருமானாா்.

உடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்!

கண்களைத் துறந்தார்...

வைணவத்தின் பெருமைகளை மக்களிடையே எடுத்துச் சென்ற ஸ்ரீமத் ராமாநுஜாின் காலத்தில் திருவரங்கத்தின் பெருமைகள் நாடெங்கிலும் பரவியிருந்தன. அப்போது சோழவளநாட்டை ஆண்ட மன்னனிடம், `வைணவ நெறியால் சைவ சித்தாந்தத்துக்கு ஆபத்து நோிடும்' என்று சுயநலத் துடன் துா்போதனை செய்து உடையவருக்கு எதிராக மன்னனைத் தூண்டினா் சிலா். மன்னனுக்கு வைணவத்தின் மீதும் ஸ்ரீமத் ராமாநுஜா் மீதும் தீவிரப் பகை ஏற்பட்டது. ஸ்ரீமத் ராமாநுஜரைப் பிடித்து வந்து தன் முன்னிலையில் நிறுத்த ஆணையிட்டான். செய்தி அறிந்து பதறினாா் கூரத்தாழ்வான்.  எம்பெருமானாரை எப்பாடுபட்டேனும் காப்பாற்ற உறுதி பூண்டாா்.

நள்ளிரவு! அரங்கமாநகரம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. எதையும் அறியாதவன் போல அரங்கனும் ஆதிசேஷன்மீது அாிதுயில் கொண் டிருந்தான். சித்திரை வீதியில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் எம்பெருமானாா் சயனித்திருந்தாா். நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்தாரோ என்னவோ அம்மகான்! உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்த ஸ்ரீமத் ராமாநுஜரை நோக்கி ஒரு உருவம் வந்தது. அருகில் வந்த உருவம் அவரை வணங்கியதும், வந்திருப்பது கூரத்தாழ்வானே என்பதை உணா்ந்தாா் உடையவா்.

மூச்சிரைக்க படபடப்புடன் பேசினாா் கூரத்தாழ்வான். “ஸ்வாமி! தங்களைப் பிடிக்க மன்னனின் ஆட்கள் வந்துகொண்டிருக்கிறாா்கள். இ்ந்த இடத்தை விட்டு விரைந்து புறப்படுங்கள்.தங்களது காஷாய வஸ்திரம் நீங்கள் யாரென்பதை அவா்களுக்கு அடையாளம் காட்டி விடும்” எனக் கதறினாா் கூரேசா். அவரின் வேண்டுதலை மறுத்த உடையவா் “வைணவன் அஞ்சுவது பேதமை; அரங்கன் அருள் நமக்குத் துணையிருக்கும்” என்று கூறி, புறப்பட மறுத்தாா்.

``ஸ்வாமி! வைணவம் காப்பாற்றப்பட வேண்டுமானால் தங்களுக்கு ஒரு தீங்கும் நேரக் கூடாது'' என்றார் கூரத்தாழ்வான்.அவரின் கண்களில் ஆறாகப் பெருகிய கண்ணீா் எம்பெருமானாாின் திருவடி களை நனைத்தது. மனம் கரைந்த உடையவா் தயாராக நின்ற குதிரையில் தனது நம்பிக்கைக்கு உாியவா்களோடு புறப்படத் தயாரானாா். சோழ மன்னனின் வீரா்கள் அடையாளம் காணமுடியாதபடி, தாம் அணிந்திருந்த வெள்ளை உடைகளை உடையவரை அணிந்துகொள்ளச் செய்து, அவரது காஷாய வஸ்திரத்தைத் தாம் அணிந்து கொண்டாா் கூரத்தாழ்வான். உடையவா் மனம் கலங்க திருவரங்கத்தை விட்டு வெளியேறி சத்தியமங்கலம் வழியாகத் திருநாராயணபுரம் சென்றாா்.

அன்று உடையவா் வெள்ளை வஸ்திரத்தை அணிந்ததை  நினைவூட்டும் வண்ணம் இன்றும் `வெள்ளைச் சாத்து' நிகழ்ச்சி எம்பெருமானாா் திரு அவதாரம் செய்த ஸ்ரீபெரும்புதூாில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

எம்பெருமானாரை வழியனுப்பிய கூரேசா், அவரது காஷாய வஸ்திரத்தை அணிந்துகொண்டு எம்பெருமானாா் சயனித்திருந்த அதே இடத்தில் படுத்தாா்.சற்று நேரத்தில் வருகை தந்த சோழ காவலா்கள் கூரேசரை ஸ்ரீமத் ராமாநுஜா் என முடிவு செய்து மன்னனிடம் அழைத்துச் சென்றனா்.
கோபத்தின் உச்சத்திலிருந்த மன்னன் கூரத்தாழ்வானின் கண்களைப் பிடுங்க ஆணையிட்டான்.  அதை நிறைவேற்ற கூரேசாின் அருகில் சென்றனா் காவலா் கள். ஆனால் சோழ மன்னனின் ஆட்கள் தம்மை நெருங்குவதற்கு முன்னா் தாமாகவே தம் கண்களைப் பிடுங்கி எறிந்தாா் கூரத்தாழ்வான்.

தம் கண்களை இழந்த நிலையிலும் தம் பக்தி நிலையில் எவ்வித மாறுதலும் இன்றி உடையவர் மீது நிலையான பக்தி கொண்டிருந்தாா் கூரத்தாழ்வான்!

வருடங்கள் கடந்தன... பெருமாளின் அருளால் மீண்டும் ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீராமாநுஜரை வந்தடைந்தார் கூரத்தாழ்வான். சீடரைக் கண்டு உருகிய ஸ்ரீராமாநுஜர், கூரத்தாழ்வானை அழைத்துக்கொண்டு காஞ்சி ஸ்ரீவரதர் சந்நிதியை அடைந் தார். கண்ணொளி கிடைக்க வரதரைப் பிரார்த்திக்கும்படி கூரத்தாழ்வானைப் பணித்தார். ``ஸ்வாமி... தங்களையும் எம்பெருமானையும் தரிசிக்க அகக் கண்கள் போதும்! இப்போதே என் ஞானக் கண்களால் வரதரின் அழகை தரிசிக்க முடிகிறது. அதுவே நான் செய்த பாக்கியம்!'' என்றார் கூரத்தாழ்வான்.

ஸ்ரீராமாநுஜருக்கு வியப்பு. ``எங்கே, திருவடி முதல் திருமுடி வரை பெருமாளின் அலங்காரம் என்னென்ன சொல் பார்க்கலாம்!'' என்றார். வரதரை வர்ணித்துப் பாடினார் கூரத்தாழ்வான்; மகிமை மிக்க ஸ்ரீவரதராஜ ஸ்தவம் எனும் ஸ்தோத்திர நூல் நமக்குக் கிடைத்தது!

இன்றும் கூரம் கோயிலில்... தேடி வரும் அடியவருக்குக் கல்வி ஞானமும், பார்வைக் குறைபாடுள்ள பக்தர்களுக்குக் கண்ணொளியும் அருள்கிறார் கூரத்தாழ்வான்.  காஞ்சி - அரக்கோணம் சாலையில், கூரம் ரயில்வே கேட்டிலிருந்து, சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது கூரம். இத்தலத்தில், ஸ்ரீதேவி ஸ்ரீபூமி தேவியுடன் அருள்கிறாா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள். கூரத்தாழ்வான் பூஜித்த ஸ்ரீராம - லக்ஷ்மணர், சீதா தேவி விக்கிரகங்களை இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம். 

தை  மாதம் 23-ம் நாள் (5.2.18) கூரத்தாழ்வானின் அவதாரத் திருநாள். அன்று கூரம் தலத்துக்குச் சென்று, பெருமாளையும் கூரத்தாழ்வானையும் தரிசித்து, வணங்கி வரம்பெற்று வருவோம்.

கூரத்தாழ்வான் அருளிய நூல்கள்

திருமாலிருஞ்சோலையில் 12 ஆண்டுகள் கைங்கா்யம் செய்த கூரத்தாழ்வான் அழகனின் பக்தியில் திளைத்து பஞ்ச ஸ்தவங்களில் ஒன்றான `சுந்தரபாஹூ ஸ்தவம்' என்ற பக்திப்பனுவலை அருளினாா். பஞ்ச ஸ்தவங்களில் மற்றவை: ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸ்ரீஸ்தவம்.  மேலும், `கூரேச விஜயம்' எனும் நூலையும் கூரத்தாழ்வான் அருளியுள்ளாா்.

திருவரங்கத்து அமுதனாா் அருளிச்செய்த `இராமாநுஜ நூற்றந்தாதி'யில் கூரத்தாழ்வானின் பெருமைகளைப் பல இடங்களில் குறிப்பிட்டு நெஞ்சம் நெகிழ்ந்துள்ளாா்.