Published:Updated:

வள்ளலார் மகிமை!

நிழல் கனிந்த கனியே!

வள்ளலார் மகிமை!

நிழல் கனிந்த கனியே!

Published:Updated:
வள்ளலார் மகிமை!

தைப்பூச நன்னாளில் அருட் பெருஞ்சோதியில் ஐக்கியமான ராமலிங்க அடிகளார், தன்னை யார் என்று அறிமுகம் செய்துகொள்கிறார் தெரியுமா?

'வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் யானும் ஒருவன்’ என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞான பரம்பரைக்கு வாழை மரம்தான் ஏற்ற உவமை. ஆலமரம், அரசமரம், புளியமரம் எல்லாம் வளர்ந்து அதனதன்

வாழ்வு முடியும்போது, ஒரு வாரிசை விட்டுச் செல்வதில்லை. ஆனால், தாய் வாழை சாயும்போது, தன் சேய்வாழையைத் தோற்று விக்கிறது. அதேபோல், சங்கிலித் தொடர்பு அற்றுப்போகாமல் ஞான பரம்பரை தோன்றி நலம் புரிகிறது.

ஒரு வாழையின் அடியில் இன்னும் சில வாழைக் கன்றுகள் தோன்றுவது, திருவடி சம்பந்தமாக மகான்கள் வருவதைக் குறிக்கும். நூறு சதவிகிதம் முழுமையாகப் பயன்படும் வாழைமரம், ஞானி என்பவன் மனித குலத்துக்குத் தன்னை மொத்தமாக அர்ப்பணிக்கவேண்டும் என்பதை உணர்த்தும். வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் வாழைமரம், மங்கல விழா நடைபெறுவதைக் காட்டுவது போல், ஞானிகளின் வருகையே மங்கலம்தான் என்பதையும் அடிகளாரின் உவமை அற்புதமாக விளக்குகிறது!

##~##
றைவனை 'நிழல் கனிந்த கனியே!’ என்று பாடுகிறார் வள்ளலார். அதற்கு என்ன பொருள்?

'நிழலிலேயே பழுத்த பழம்’ என்று நினைக்கிறீர்களா?!

காயைப் பழுக்க வைக்கும் முறை பல உண்டு. வைக்கோலை ஓர் அறையில் நிரப்பி, அதில் முதிர்ந்த காய்களைப் பரப்பி வைப்பது; தீ மூட்டி அச்சூட்டில் பழுக்க வைப்பது;  வெயில் படும்படி வைத்துப் பழமாக்குவது, மூட்டைக்குள் போட்டு மூச்சுத் திணற வைத்து முற்றாகக் கனிய வைப்பது என காயைக் கனியவைக்கப் பல வழிகள் உண்டு.

இப்படித்தான் கடவுளைக் காணும் வழிமுறைகளும்!  மூச்சை அடக்கியும், கால் மடக்கியும், சாதனைகள் செய்தும், சமாதி நிலையில் இருந்தும் கடவுளைக் காணும் இந்த வழிமுறைகள்... வலிய முறைகள்! ஆனால், எளிய முறை ஒன்றுண்டு. அது, அனைத்துயிர்க்கும் அன்பு செய்து ஆண்டவன் அருள் பெறுவது. அதைத்தான் 'நிழல் கனிந்த கனி’ என அற்புதச் சொற்பதங்களால் ஆராதிக்கிறார் அருட்பிரகாசர்!

- மதிவண்ணன்
படம்:  ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism