Published:Updated:

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....
பிரீமியம் ஸ்டோரி
கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

Published:Updated:
கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....
பிரீமியம் ஸ்டோரி
கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....
கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

‘எந்தரோ மகானுபாவலு அந்தரிகி வந்தனமு’ என்று ஸ்ரீதியாராஜ ஸ்வாமிகள் பாடியதற்கு ஏற்ப,  நமது புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை மகான்கள் அவதரித்திருக்கிறார்கள்?! அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுவாமி விவேகானந்தர்.

அவர்தான், நம் இந்திய தேசத்தின், நம் இந்து மதத்தின் அருமைபெருமைகளை சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலித்தவர். இந்தியா என்றாலே பாம்பாட்டி களின் தேசம் என்றும், நாகரிகத்தில் மிகவும் பின்தங்கிய தேசம் என்றும் நினைத்துக்கொண்டிருந்த மேலை நாட்டினரின் மனோபாவத்தை அடியோடு மாற்றியவர். அப்படிப்பட்ட வீரத் துறவி விவேகானந் தரை உலகத்துக்கு அருளிய ஒப்பற்ற மகான்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

வங்க மாநிலத்தில் புண்ணிய நதியாம் கங்கையின் மடியில் தவப்புதல்வராக அவதரித்த அந்த மகானின் வாழ்க்கையில் இருந்து...   

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

கனவு பலித்தது!

மே
ற்குவங்க மாநிலம், கமார்பு கூர் கிராமத்தில் குதிராம் - சந்திரா தேவியின் திருமகனாக அவதரித் தவர் பகவான் ராமகிருஷ்ணர்.

குதிராம் அறுபது வயதை நெருங்கினாலும், பக்தியில் இளமையாகவே திகழ்ந்தார். ஒருமுறை பித்ரு காரியங்களை நிறைவேற்றுவதற்காக, பிரசித்திப் பெற்ற விஷ்ணு தலமான கயாவுக்குச் சென்றார் குதிராம். அங்கே ஒரு மாத காலம் தங்கியிருந்து பித்ரு காரியங்களைச் சிரத்தையுடன் செய்தார். கடைசி நாள் இரவில் அவருக்கு ஒரு கனவு! 

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....பித்ருக்கள் அனைவரும் அவரை ஆசீர்வதித்து, பிறகு விஷ்ணுவை வணங்கி நிற்பதைப் போல் காட்சி. பித்ருக்களுக்கு நடுவில் இருந்த மகாவிஷ்ணு, குதிராமைப் பார்த்து, ‘உனது பக்தி எம்மை சந்தோஷம் அடையச் செய்கிறது. மறுபடியும் நான் இந்த உலகத்தில் அவதரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நான் உனக்கு மகனாகப் பிறக்க இருக் கிறேன்’ என்று அருள்புரிந்தார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அதே நேரத்தில் கமார்புகூரில் இருந்த சந்திராதேவிக்கும் ஒரு கனவு ஏற்பட்டது. சிவ லிங்கத்திலிருந்து  ஓர் ஒளிப் பிழம்பு தனது உடலுக்குள் பாய்வதுபோல் கனவு கண்டதாக தன் தோழி ‘தனி’யிடம் பகிர்ந்துகொண்டார் சந்திராதேவி.

மறுநாள் தோழியுடன் அருகில் இருந்த சிவன் கோயிலுக்கு அவர் சென்றபோது, முன் தினம் இரவு கனவில் கண்டதைப் போலவே, கருவறையிலிருந்த சிவ லிங்கத்திலிருந்து ஒளிப்பிழம்பு தோன்றி, சந்திராதேவியின் உடலுக்குள் சென்றது.

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

சந்திராதேவி அதை உணர்ந்த அதே தருணத்தில், அதன் வீர்யத் தைத் தாங்க முடியாமல் மயங்கிக் கீழே விழுந்தார். உடன் சென்ற தோழி அவருக்கு மயக்கம் தெளிவித்து சுயநினைவுக்குக் கொண்டுவந்தார். சந்திராதேவி தனக்கு நேர்ந்த அனுபவத்தை தோழியிடம் பகிர்ந்துகொள்ள, அந்தத் தோழியோ `வெறும் பிரமையாக இருக்கும்' என்றாள். சந்திராதேவிக்கு இந்த அனுபவம் வாய்த்தபோது அவருக்கு வயது நாற்பது.

கணவர் ஊரிலிருந்து திரும் பியதும் தனது அனுபவத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டார் சந்திராதேவி. அந்த ஒளி உள்ளே சென்றதிலிருந்து தனக்குள் ஒரு புது சக்தி ஏற்பட்டிருப்பதையும்,  தான் ஒருவித பரவச உணர்வில் திளைத்திருப்பதையும் மெய் சிலிர்க்க விவரித்தார்.

குதிராம், தான் கண்ட கனவும் தன் மனைவியின் அனுபவமும் ஒரேபோல் இருப்பதை அறிந்து மகிழ்ந்தார். விரைவில் அவர்களின் கனவு பலிக்கும் காலம் கனிந்தது.

1836-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 - ம் தேதி குதிராம் சாட்டர்ஜிக்கும் - திருமதி சந்திராதேவிக்கும் ஆண் மகனாகப் பிறந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற அவதார புருஷர். `கயா' திருத்தலத்தில் அருளும் இறைவனுக்கு `கதாதரன்' என்று திருப்பெயர் உண்டு. அந்தப் பெயரையே தங்கள் குழந்தைக்கும் சூட்டினார்கள் குதிராம் தம்பதி.

அன்போடும் பண்போடும் அற்புதமாக வளர்ந்தது அந்தத் தெய்வக் குழந்தை!

காளி மாதா ஆலயம்!

சி
று வயதிலேயே மயானங் களுக்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்துவிடுவானாம் சிறுவன் கதாதர். கமார்புகூர் எனும் அந்த ஊரை ஒட்டி ஒன்றும், அங்கிருந்து  சுமார் 2 மைல் தொலைவில் ஒன்றுமாக இரண்டு மயானங்கள் இருந்தன.   

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

கதாதர் தனது விருப்பப்படி, ஏதேனும் ஒரு மயானத்துக்கு இரவு-பகல் பாராது தியானத்தில் லயிக்கப் போய் விடுவது வழக்கம். அதுமட்டுமல்ல பூரி, கயா என்று க்ஷேத்ராடனம் செய்துவிட்டு வரும் சந்நியாசி களிடத்தும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தான் கதாதர். இதுபற்றி அவனது தாய் மிகவும் கவலைப்பட்டார். தன் பிள்ளை சந்நியாசியாகிவிடுவானோ என்று கலங்கினார் அவர்.

காலமோ கதாதரை காளி மாதாவிடம் சமர்ப்பித்தது! 

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....அன்றைக்கு கல்கத்தாவில் வசித்த சான்றோர்களில் ஒருவர் ஸ்ரீராஜேந்திர தாசர். இவரின் மனைவி ராஸ்மணி பக்தி மிகுந்தவர்; வெள்ளைக் காரர்களையும், அவர் களது வாழ்க்கை முறை களையும் கொஞ்சமும் விரும்பாதவர். மனப்பக்குவமும்,  தைரியமும் மிகுந்தவர்.

 ராஸ்மணியின் மீது கொண்ட அன்பால், மக்கள் அவரை ராணி என்றே அழைத்தனர். அவரால் கட்டப்பட்டதுதான் தட்சிணேஸ்வரத்தில், கங்கைக் கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீகாளி மாதா திருக்கோயில்.

பகவான் ராமகிருஷ்ணர் என் றாலே நம் நினைவுக்கு வருவது தட்சிணேஸ்வரம் காளிதேவியின் கோயில்தான். இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர் களின் புனிதத் தலமாகத் திகழும் இந்தத் தலத்துக்கு -  காளிமாதாவின் திருக் கோயிலுக்கு கதாதர் வந்து சேர்ந்தபோது அவருக்கு வயது 16!  

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

சர்வம் சக்தி மயம்!

1859-
ம் ஆண்டு 23 வயதான கதாதர் சம்சார சாகரத்தில் இணைந்தார். உலகத்தாருக்கு உயர் பாடம் கற்பிப்பதற்காகவே கல்யாணம் செய்துகொண்டார்.

யா தேவீ சர்வபூதேக்ஷூ
மாத்ரு ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நஸ்தஸ்யை நமோ நம:


‘எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி தாய் வடிவில் உறை கிறாளோ அவளுக்கு நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம்’ என்று ஸ்ரீதேவி மகாத்மியம் சொல்வதுபோல், மகாத்மாக்கள் தேவியை தாயாகப் பார்க்கிறார்கள்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவியையே அம்பாளாகப் பார்த்தவர். தட்சிணேஸ்வரத்தில் இருந்தபோது, பகவான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சருக்கு, தேவி ஷோடசியை உபாசனை செய்ய வேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டது.

1872-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி நீலவானில் முழுநிலவு பிரகாசமாகக் காட்சி அளித்தது. காளிதேவிக்கு மிகவும் உகந்த அந்த நாளின் இரவுப் பொழுது... ஒன்பது மணிக்கு, பரமஹம்சரின் கட்டளையின்படி  சாரதாதேவி அவருக்காகப் போடப்பட்டிருந்த பலகையில் அமர்ந்தார். பகவானின் ஆத்மார்த்தமான ஷோடசி பூஜையில் இருவருமே அத்வைத நிலையை அடைந்தனர்.சாதனையின் உயர்நிலையை உணர்ந்தனர். பூஜை முடிந்த நிலையில், அன்னையின் காலில் விழுந்து வழிபட்டார் ராமகிருஷ்ணர்.

பக்திபூர்வமான இந்த வரலாற்றைக் கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது. பெண்ணை பெரும் தெய்வமாகக் கொண் டாடிய ஒப்பற்ற மகான் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்.    

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

அதுமட்டுமா? சில நேரங்களில் அவரே சக்தியின் வடிவமாக மாறி பெண்ணின் இயல்புக்குச் சென்றுவிடுவது உண்டு.

ஏன் இந்த தாமதம்?

ரமஹம்சரின் பிரதான சீடர்... அவரது அளப்பரிய அன்புக்கு ஆளானவர், அவருடைய அருமைபெருமைகளை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவர் சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தரின்  இயற்பெயர் நரேன். சங்கீதத்தில் நன்றாகத் தேர்ச்சி பெற்ற நரேனுக்கு இனிய குரல்வளமும் உண்டு.

ஒருநாள், நரேன் சுரேந்திரநாத் மிஸ்ரா என்பவரின் வீட்டுக்குச் சென்றான் நரேன்.

`‘நரேன்! என் வீட்டுக்கு இன்று ஒரு முக்கியஸ்தர் வரப்போகிறார்.அவர் முன்னிலையில் நீ பாடி, அவரை மகிழ்விக்கவேண்டும்'’ என்று கேட்டுக்கொண்டார் சுரேந்திரநாத். அந்த முக்கியஸ்தர் வேறு யாருமல்ல, ராமகிருஷ்ண பரமஹம்சர்தான்.

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....


 
அந்தச் சந்திப்பில் கிடைத்த தனது அனுபவத்தை நரேனாக விளக்குகிறார், விவேகானந்தர்.

“என்னைப் பாடச் சொல்லி, நான் பாடி முடித்தவுடன் குரு எழுந்து நின்றார். கையைப் பிடித்துக்கொண்டு வடக்குத் திசையில் இருந்த வராந்தாவுக்கு அழைத்துச் சென்றார்.

அது, குளிர் காலமாதலால், குளிர்க்காற்றைத் தடுப்பதற்காக  தூண்களுக்கு இடையிலான இடைவெளிகள் திரையிடப் பட்டிருந்தன. குரு கதவைச் சாத் தினார்.  தனியாக  என்னிடம்  ஏதோ அறிவுரை சொல்லப்போகிறார் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் சொன்னதும், செய்ததும் நான் கற்பனையிலும் நினைத்துப் பார்க்காதவை. எனது இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, ஆனந்தக் கண்ணீர் உகுத்தபடி மிகவும் அன்பொழுக, ஏதோ வெகுநாள் பழகிய நண்பனைப் போல, `‘இவ்வளவு காலம் தாமதித்து வந்திருக்கிறாயே, இது சரியா? நான் எப்படி காத்திருக்கிறேன் என்று உன்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லையா? லௌகீ கர்கள் பேசும் பேச்சைக் கேட்டுக் கேட்டு காதெல்லாம் வலிக்கிறது. எனது அனுபவத்தைக் கேட்க ஆளில்லாமல், அந்தரங்கமே வெடித்துவிடும் போலிருக்கிறது’ என்று அழுது புலம்பியவாறே சொன்னார். திடீரென்று கையைக் கட்டிக்கொண்டார். என்னைக் கடவுளாகப் பார்த்தார்.

`‘நாராயணனின் மறு அவதாரமே! மக்களின் கவலையையும், கஷ்டத் தையும் போக்குவதற்கே நீ மறு அவதாரம் எடுத்திருக் கிறாய்'’ என்றார்.

அவருடைய வார்த்தைகளைக் கேட்டும் செயல்களைப் பார்த்தும் நான் ஊமையானேன். எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். ‘இவரை எந்தவிதத்தில் சேர்ப்பது? பைத்தியம்போல் உளறுகிறாரே... என்னைப் பார்த்து எப்படி இவர் இதையெல்லாம் சொல்கிறார். நான் விஸ்வநாத் தத்தாவின் செல்ல மகனாயிற்றே! ' என்று.

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

நான் ஒன்றும் பதிலளிக்க வில்லை. அவர் விருப்பப்படி பிதற்றட்டும் என்று விட்டு விட்டேன். என்னை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சென்று வெண்ணெய், தேன், சந்தேஷ் (ஒரு வகை இனிப்பு) ஆகியவற்றை எடுத்து வந்து அவர் கைகளாலேயே எனக்கு ஊட்டி விட ஆரம்பித்துவிட்டார்.

`‘இவற்றையெல்லாம் என் கையில் கொடுங்கள். எனது நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடுகிறேன்’' என்றேன்.

‘`அவர்களுக்குப் பிறகு கிடைக்கும். இவற்றை நீதான் சாப்பிட வேண்டும்'’ என்றார். நான் உண்ட பிறகுதான் திருப்தி அடைந்தார். தொடர்ந்து என் கையைப் பற்றி, ‘`கூடிய விரைவில் நீ இங்கு தனியாக வருவதாக சத்தியம் செய்து கொடு'’ என்றார். என்னால் மறுக்க முடியவில்லை. வருவதாக வாக்களித்துவிட்டு மற்றவர்கள் மத்தியில் மீண்டும் சென்று அமர்ந்தேன்' - என்று விளக்குகிறார் விவேகானந்தர்.

அப்போதைய சூழலில் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிதற்றுவதாகவே கருதினாலும், அறிவுஜீவியான அந்த இளைஞ னுக்கு, காலப்போக்கில்  மெள்ள மெள்ள உண்மை புரியத் தொடங்கியது. பரமஹம்சரிடம் நம்பிக்கை வந்தது. காரணம், அவர் உபதேசம் மட்டும் செய்ய வில்லை. உண்மையாக வாழ்ந்து காட்டினார். சொன்னதைச் செய் தார்; செய்வதைச் சொன்னார்.

ஒருமுறை, “உன்னிடம் பேசிப் பழகுவதுபோல் கடவுளிடம் பேசிப் பழக முடியும். ஆனால், யாரும் அப்படி உண்மையில் கடவுளை விரும்புவதாகத் தெரிய வில்லை. மனைவி - மக்களின் இழப்புக்காகவும், சொத்தை இழந்ததற்காகவும், அழுதழுது கண்ணீரால் பானையை நிரப்புகிறார்களே தவிர, கடவுளைக் காண முடிய வில்லையே என்று யாரும் அழுத தாகத் தெரியவில்லை'’ என்று வேதனையோடு சொன்னாராம்.

ஆக, அவரது பேச்சில் வார்த்தை அலங்காரம் இல்லை என்பது புரிந்தது. ஆகவே, வாக்கு கொடுத்தபடி மறுமுறை சென்றான் நரேன்.

இப்போது அனுபவமே வேறு. ராமகிருஷ்ணர் அவரது அறையில் கட்டிலின் மீது தனிமையில் உட்கார்ந்திருந்தார். எப்போதுமே அருள் நிலைதானே அவருக்கு!   

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

நரேனைக் கட்டிலின் மறுபுறம் அமரச் சொன்னார். அறிவால் ஏற்றுக்கொண்டும், உணர்வால் ஏற்றுக்கொள்ளாத நிலை! தெளிந்த நீராக நரேன் உட்கார்ந்திருக்க, திடீரென்று அவன் மீது தனது வலது காலை வைத்தார் ராமகிருஷ்ணர். நரேனுக்கு ஒன்றும் புரியவில்லை. அறை, கட்டில், மற்ற காட்சிகள் எல்லாம் மறைந்து போக, எங்கும் சூன்யமாகத் தெரிகிறது. நரேன் அலறினான்: 

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....“ஆ, என்ன செய்கிறீர்கள்? எனக்கு வீட்டில் தாய் தந்தை இருக்கிறார்கள்!”

இதைக் கேட்ட ராமகிருஷ்ணர் ஒன்றும் நடக்காததைப்போல சிரித்தபடியே, அவரது அன்புக் கையால் இதயத்தைத் தடவினார். “சரி இப்போது இதுபோதும். எல்லாம் நேரப்படி நடக்கும்” என்றபடி மௌனமாகிறார்.

தியானத்தின் உயர்நிலையை ஒரு நொடித் துளியில் உணர வைத்த பரமஹம்சரின் சக்தி புரிந்தது நரேனுக்கு; அவர் பரமஹம்சரின் பக்தரானார்; உலகம் போற்றும் வீரத் துறவியானார்!

இனி, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அருளிய சில கதைகளைப் படிப்போம்.

நாகமும் சாதுவும்

மை
தானம் ஒன்றில் கொடிய நாகப்பாம்பு ஒன்று இருந்தது. அதைக்குறித்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அச்சம் கொண்டிருந்தனர்.

ஒருநாள் சாது ஒருவர், அந்த மைதானத்தின் வழியே நடந்து கொண்டிருந்தார். வழியில் எதிர்ப் பட்ட இடையர்கள் சிலர், விஷப் பாம்பைப் பற்றிச் சொல்லி அவரை எச்சரித்தனர். ஆனால், அவரோ பயமில்லாமல் மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தார். ஓரிடத்தில் பாம்பு எதிர்ப்பட்டது; படமெடுத்து சீறியபடி  அவரைத் தீண்ட வந்தது. உடனே மந்திர சக்தியால் அதை வசப்படுத்தி விட்டார் சாது. ஒரு புழுவைப் போன்று அவர் முன்னிலையில் கிடந்தது பாம்பு.

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

`‘நீ ஏன் உயிர்களை இப்படித் துன்புறுத்துகிறாய்? உனக்கு ஒரு மந்த்ரோபதேசம் செய்கிறேன். அதை நீ ஜபித்தால் உனக்கு நல்லியல்பு வந்துவிடும். கடவுள் தரிசனம் கிட்டும்’' என்று சொல்லி, அந்தப் பாம்புக்கு மந்திரம் ஒன்றை  உபதேசித்துவிட்டுச் சென்றார் சாது.

மீண்டும் ஒருநாள் மீண்டும் சந்திப்பதாகவும் கூறிச் சென்றார்.

அன்று முதல் தனது இயல்பை மாற்றிக்கொண்டது நாகம். அந்தப் பகுதியில் இருந்த சிறுவர்கள் நாகத்தின் புதிய போக்கை விரைவில் தெரிந்து கொண்டனர்.

நாகத்தின் மீது கல்லெறிவதும், சீண்டுவதுமாக சித்திரவதை செய்யத் தொடங்கினர். ஒருநாள் அதன் வாலைப் பிடித்திழுத்துச் சுழற்றித் தரையில் அறைந்தனர்.

ரத்தத்தைக் கக்கிக்கொண்டு விழுந்த பாம்பு பிரக்ஞையற்றுக் கிடந்தது. அது செத்துப் போய் விட்டதென்று, மற்றவர்கள் கலைந்து சென்றனர்.

நள்ளிரவில் நாகத்துக்கு கொஞ்சம் பிரக்ஞை வந்தது. வெகு சிரமத்துடன் நகர்ந்து, அருகிலிருந்த ஒரு வளையினுள் சென்று மறைந்தது. அது நலம் பெற ஒரு மாதம் ஆனது. அதுவரையிலும் இரவில் உணவு தேடுவதும், பகலில் வளையில் தங்குவதுமாகப் பொழுதைக் கழித்தது பாம்பு.

இப்படி ஓராண்டு கழிய, சாது மீண்டும் வந்தார். பாம்பைப் பற்றி சிறுவர்களிடம் விசாரித்தார். அது செத்துப் போய்விட்டது என்றனர் அவர்கள். ஆனால், அவர்கள் வார்த்தையை சாது நம்பவில்லை. தாம் உபதேசித்த மந்த்ர சக்தியைப் பற்றி அவருக்குத் தெரியும். ஜன்மசாபல்யம் ஆகாமல் பாம்பு சாகாது என்பது அவருக்குத் தெரியும்.   

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

ஆகவே, வளையின் அருகில் வந்து, தாம் உபதேசித்த மந்திரத்தை உச்சரித்து பாம்பை அழைத்தார்.குருவின் குரலைக் கேட்டதும் வெளியே வந்த பாம்பு சிரம் தாழ்த்தி அவரை வணங்கியது.

அது இளைத்துப் போயிருந் ததைக் கண்ட சாது, அதற்குக் காரணமான நிகழ்வுகளையும் அறிந்து கொண்டார். ஆனால் நாகமோ, ``அறியாத பிள்ளைகள் தெரியாமல் செய்து விட்டார்கள்'' என்று சமாதானம் சொன்னது.

ஆனால், அதன் கூற்றைச் சாது ஏற்றுக்கொள்ளவில்லை. `‘நீ ஒரு மடையன். உலகில் வாழ்ந்திருக்க உனக்குத் தெரியாது. யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன்; சீறவேண்டாம் என்று நான் சொல்லவில்லை. உன்னை உபத்திரவப்படுத்த வருகிறவர்களை நோக்கிச் சீறிப் பயமுறுத்தி விரட்டி ஓட்ட வேண் டும். ஆனால், அவர்களைக் கடிக்கலாகாது’' என்றார். 

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....இந்தக் கதை சொல்லும் அறிவுரை நமக்கும் பொருந்தும். பண்பும் பொறுமையும் அவசியம். அதேநேரம், எளியவர்களுக்கு நேரும் கொடுமைகளைக் கண்டு பொங்கியெழும் போர்க்குணமும் மிக அவசியம் என்பதை உணர வேண்டும்.

காலணாவே மிச்சம்!

ருவன், பன்னிரண்டு வருட தவப்பயனாக பல ஸித்திகள் கைவரப் பெற்றிருந்தான். அதுகுறித்து அவன் தற்பெருமை கொண்டிருந்தான்.

ஒருநாள் பெருக்கெடுத்து ஓடும் நதியின் மீது நடந்து சென்று  மறு கரையி லிருந்த கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தான். அதைக் கண்டு அந்த ஊரே அவனைப் பாராட்டியது. அங்கே, ஆற்றங் கரையில்  ஓர் அரச மரத்தடியில் மகான் ஒருவர் அமர்ந்திருந்தார்.

தனது பெருமையை அவரிடமும் தெரிவித்தான் அந்த மனிதன். அவனிடம் மகான் ‘`இன்னும் உன்னால் வேறு என்னென்ன செய்யமுடியும்?'' என்று கேட்டார். உடனே, `‘இதோ இங்கு நிற்கும் யானையைக் கொல்ல முடியும்'' என்றவாறு, ஒரு துளி மண்ணை எடுத்து யானையின் மீது வீசினான்.  மறு கணம் யானை இறந்து விழுந்தது.

`‘இன்னும் வேறு என்ன செய்ய முடியும்?'' என்று அந்த மகான் மீண்டும் கேட்டார்.  `‘யானைக்கு உயிர் தர முடியும்’' என்றவன், மற்றொரு துளி மண்ணை எடுத்து யானையின் மீது வீசினான். யானை உயிர்ப் பெற்றெழுந்தது.

இப்போது மகான் சொன் னார்: `‘அப்பா! நீ பன்னிரண்டு வருஷம் தவம் புரிந்து காலணா சம்பாதித்திருக்கிறாய்'’

`‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என எரிச்சலுடன் கேட்டான் அந்த அகங்கார மனிதன்.

‘`தண்ணீர் மீது நடக்க முடிந்த தால், ஓடக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய காலணா உனக்கு மிச்சம். யானை இருப்பதாலும், இறப்பதாலும் உனக்கென்ன பயன்? உனது  அகங்காரமும் தற்பெருமையும் இம்மிய ளவும் போகவில்லையே'’ என்றார் அந்த மகான். உண்மையை உணர்ந்து மன்னிப்பு வேண்டினான் அந்த மனிதன்.

அடித்த கையே பால் வார்க்கிறது!

ரு மடத்தில் சாதுக்கள் சிலர் வசித்தனர். அவர்கள் தினந்தோறும் ஊருக்குள் சென்று பிக்ஷையெடுத்து வந்து உணவருந்துவது வழக்கம்.

ஒருநாள் சாதுக்களில் மூத்தவ ரான ஒருவர், பிக்ஷைக்காக ஊருக் குள் சென்றார். ஒரு வீட்டில் மிராசுதார் ஒருவர், தனது வேலை யாளை இரக்கமின்றி அடித்துக் கொண்டிருந்தார்.

சாது ஓடிச் சென்று அந்த எஜமானனைத் தடுக்க முயன்றார்.  அதனால், மிராசுதார் தனது கோபத்தை சாது மீது திருப்பினார்.

வேலையாளை அடிப்பதை விட்டுவிட்டு சாதுவை அடிக்கத் துவங்கினார். அடி தாங்க முடியாத சாது மூர்ச்சையாகிக் விழுந்தார். இந்தச் செய்தி மடத்துக்கு எட்டியது. மற்ற துறவியர்கள் ஓடிவந்து அவரை மடத்துக்குத் தூக்கிச் சென்றனர்.

சாதுவைக் கட்டிலில் படுக்க வைத்து அவரது மயக்கத்தைத் தெளியச்செய்ய முயன்றனர். ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தார். இன்னொருவர் விசிறியைக் கொண்டு வீசினார்.சற்று நேரத்தில் கண் விழித்த சாது சுற்றுமுற்றும் பார்த்தார். அவருக்கு நன்கு பிரக்ஞை வரும் பொருட்டு அவர் வாயில் ஒருவர் கொஞ்சம் பால் வார்த்தார். மற்றொருவர் அவருக்கு எவ்வளவு தூரம் பிரக்ஞை திரும்பி வந்திருக்கிறது என்பதை அறியும் விதம், `‘உங்களுக்கு பால் வார்ப்பவர் யார் தெரிகிறதா?’' என்று கேட்டார்.

சாது பதில் சொன்னார்:

`‘இந்த மேனியை அடித்த கை அதற்கு இப்போது பால் வார்த் துக் கொண்டிருக்கிறது''

நிறைஞானம் அடையப் பெற்றாலன்றி இத்தகைய மன நிலையை யாரும் பெற முடியாது. ஞானிகள் எல்லா உயிர்களிடமும் ஒருவனையே காண்பார்கள்.

ராமனின் இச்சைப்படி...

ரு கிராமத்தில் நெசவுத் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் பரம பக்தன்.

எவரேனும் `துணி ஒன்றுக்கு விலை என்ன?' என்று கேட்டால், `ராமனின் இச்சையால் நூல் கிரயம் ரூபாய் ஒன்று; நெசவுக்கூலி நான்கணா; ஊதியம் இரண்டனா.ஆக, விலை ரூபாய் ஒன்று, அணா ஆறு' என்பான்.

அவன் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் ஊர் மக்களும் அவன் சொன்ன விலையைக் கொடுத்து துணியை வாங்கிச் செல்வார்கள்.

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....மாலையில் வியாபாரம் முடிந் ததும், நெடுநேரம் பகவத் தியானம் செய்வான்; ஜபம் செய்வான்.

ஒருநாள் இரவில் தூக்கம் பிடிக் காது ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியே வந்த திருடர்கள் சிலர், அவனைத் தங்களுடன் இழுத்துச் சென்றனர். தாங்கள் கொள்ளையடித்த பொருள்களை மூட்டையாகக் கட்டி அவன் தலையில் ஏற்றி, சுமந்து தரும்படி வற்புறுத்தினர். சிறிது தூரத்தில் காவலர் கள் எதிர்ப்பட்டார்கள். திருடர்கள் ஓடிவிட, இவன் மாட்டிக் கொண்டான். விடிந்ததும் அவனை நியாயாதி பதியிடம் அழைத்துச் சென்றனர்
காவலர்கள். ஊரார் அவனை அந்த நிலைமையில் கண்டும் அவன் மீது சந்தேகம் கொள்ள வில்லை. நியாயாதிபதி அவனது கருத்து  என்ன என்று நெசவுத் தொழிலா ளியிடம் விசாரித்தார். அவன் பதில் சொன்னான்: “ராமனின் இச்சையால் திருடர்கள் சிலர், என்னை அவர்க ளுடன் இழுத்துச் சென்றனர். ராமனின் இச்சையால் அவர்களுக்கு அகப்பட்ட திருட்டுச் சாமான்களை என் தலையில் வைத்து சுமக்கச் செய்தனர். ராம னின் இச்சையால் காவலர்கள் வந்தார்கள். ராமனின் இச்சை யால் திருடர்கள் தப்பித் துக் கொண்டனர். ராமனின் இச்சையால் நான் அகப்பட்டேன்; இரவெல்லாம் காவலில் வைக்கப் பட்டேன். ராமனின் இச்சையால் இப்போது தங்களால் விசாரிக்கப் படுகிறேன்''

விசாரணையின் முடிவில், அவன் குற்றவாளியல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது,  “ராமனின் இச்சை யால் நான் விடுபட்டேன்” என்று அவன் ஊராரிடம் பகர்ந்தான். இவனைப் போன்று, `அனைத்தும் இறைவன் வசம்' என்ற மனோபாவம் வாய்ப்பது மிக அபூர்வம்!

உள் நோக்கிப் போ!

டர்ந்த வனப்பகுதி அது. ஒருநாள் அந்தி மயங்கும் தருணத் தில், விறகுக்கட்டைச் சுமந்து கொண்டு ஒருவன் வனத்திலிருந்து வெளியேறியதைக் கண்டார் சாது ஒருவர். அவனை அருகில் அழைத்தவர்,  ``உள் நோக்கிப்போ'’ என்று மொழிந்துவிட்டு, அவர் தம் வழியே போனார். அவரை வணங்கித் தொழுதுவிட்டு விறகு வெட்டியும் வீடுபோய் சேர்ந்தான்.

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

மறுநாள் காலையில் வனத்தின் எல்லையை அடைந்தவனுக்கு சாதுவின் அறிவுரை நினைவுக்கு வந்தது. ஆகவே, அன்றைய தினம்  வழக்கத்தை விடவும் அதிகமாக வனத்தின் உள்நோக்கி சென்றான். அவனுக்கு சந்தனக் கட்டைகள் கிடைத்தன.

சில நாள்களுக்குப் பிறகு மேலும் உள்நோக்கிச் சென்றான். தாமிரக்கட்டிகள் கிடைத்தன. இன்னும் சில நாள்களுக்குப் பிறகு மேலும் உள்நோக்கிச் சென்றான். வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அடுத்த சில நாள்களுக்குப் பிறகு, இன்னும் உள்நோக்கிச் சென்றான். அவனுக்குப்  பொன், வைரம் முதலியன கிடைத்தன.

மனிதர்களாகிய நாமும் நம் மனதினுள் உள்நோக்கிச் செல்லும் அளவுக்கு அரிய பொருள்களைப் பெறுவோம்.

மரங்கள்... மனிதர்கள்!

து
றவில்  மூன்று விதம் உண்டு. வீட்டில் எத்தனையோ கஷ்டங்கள் ஏற்படுகின்றன. அவற்றை முன்னிட்டு ஒருவன் காவி அணிந்து கொண்டு வெளியேறுகிறான் எனில், அத்தகைய துறவு நெடுநாளைக்கு நிலைத்திராது.

ருவனுக்கு உலக வசதிகள் எல்லாம் இருக்கின்றன. ஆயினும் அவன் நாடுவது கடவுள் ஒருவரையே. கடவுளின் பொருட்டு அவன் அருள் தாகமெடுத்துக் கண்ணீர் சிந்துகிறான்.  அத்தகையவன் துறவி ஆகிறான் எனில், அவனுடைய துறவுதான் சரியான துறவு.  

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....

ரங்களில் சில சுவை நிறைந்த கனிகளைத் தருகின்றன. வேறு சில புளிக்கின்ற அல்லது கசக்கின்ற கனிகளைத் தருகின்றன. அதே விதத்தில் மக்களில் சிலர் நல்லியல்பு படைத்தவர்களாக இருக்கின்றனர்; வேறு சிலர் கெட்ட இயல்பு படைத் தவர்களாக இருக்கின்றனர். 

மாத்ரு பக்தி, பித்ரு பக்தி ஆகிய இரண்டையும் சரியாக அடையப் பெறாதவனுக்கு தெய்வபக்தி ஒரு நாளும் வராது. தாய், தந்தையர் துஷ்டர்களாக இருந்தாலும், நெறி வழுவியவர்களாக இருந்தாலும் மைந்தன் அவர்களுக்குத் தக்க மரியாதை செலுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கிறான்.

தானியத்தைக் களஞ்சியத்தில் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கின்றனர். பிறகு அதைச் சுற்றிலும் பாகில் தோய்த்த பொரியை ஏராளமாகத் தூவி விடுகின்றனர்.

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....எலிகள் அந்தப் பொரியைத் தின்று திருப்தியடைகின்றன; தானியத்துக்குப் பக்கத்தில் வருவது இல்லை. உலகத் தவரின் போக்கும் அத்தகையதே. உலக போகங்கள் அவர்களுக்கு வேண்டியவாறு வழங்கப் பட்டிருக்கின்றன. அவர் களும் அந்த போகங்களில்  திருப்தி அடைந்தவர்களாகக் காலத்தைக் கழிக்கின்றனர். கடவுளிடத்திலிருந்து வரும் பேரானந்தத்தைப் பற்றி அவர் களுக்கு ஒன்றும் தெரியாது.

ணக்காரன் வீட்டில் இருக்கும் வேலைக்காரி போன்று நீங்கள் உலகில் வாழ்ந்திருங்கள். எஜமான னுடைய குழந்தைகளையும் வீடு வாசல்களையும் தன்னுடை யவை என வேலைக்காரி கருதுகிறாள். ஆனால், தன் சொந்த வீடு வேறு எங்கேயோ இருப்பதை அவள் மறந்து விடுவதில்லை. உங்களுக்கு சொந்த வீடு தெய்வம் என்பதை மறந்து விட வேண்டாம்.

கவானுடைய திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் யார் ஒருவனுக்கு ஆனந்தக் கண்ணீர் பொழிகிறதோ, அவனுக்குச் சந்தியா வந்தனம் வழிபாடு முதலிய கிரியைகள் தேவை இல்லை. கர்மங்களெல்லாம் தாமாக நின்றுவிடுகின்றன. கர்மபலம் எதும் அவனைத் தொடுவதில்லை.

சிருஷ்டிக்கு சிவம், சக்தி ஆகிய இரண்டும் தேவை. உலர்ந்த களி மண்ணால் பானை வனைய முடியாது. நீர் அவசியமாகிறது. அங்ஙனம் சக்தியின் துணையின்றி சிவம் பிரபஞ்சத்தைச் சிருஷ்டிக்காது.

தீப வெளிச்சத்தில் சிலர் சமைக் கின்றனர்; சிலர் பாகவதம் படிக் கின்றனர்; வேறு சிலர் பொய்ப்பத்திரம் எழுதுகின்றனர். இவர்களுடைய நல்ல செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் தீப வெளிச்சம் பயன்பட்டது. எனினும், செயல் களின் நன்மை தீமைகள் தீப வெளிச்சத்தைச் சேராது. அதே விதத்தில் பகவானுடைய அருளை முக்திக்காகச் சிலர் பயன் படுத்துகின்றனர். வேறு சிலர் திருடுதலில் வெற்றியடைவதற்குப் பயன்படுத்துகின்றனர். எல்லாச் செயல்களுக்கும் ஈசனிடத்திருந்து வருகிற அருள் சக்தி பயன்படுகிறது. எனினும் செயல்களின் குண தோஷங்கள் பகவானைச் சாராது.

தொகுப்பு - கே.புவனேஸ்வரி

படங்கள் உதவி :  ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை 

கங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....