
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''முப்பது வருஷத்துக்கு முன்னால வறுமைக்கு வாக்கப்பட்டவன் நான். கஷ்டம், பிரச்னைன்னே போய்க்கிட்டிருந்த வாழ்க்கைல, சந்தோஷங்கறது மருந்துக்குக்கூட கிடைக்கலை! போராடுறதுக்கு தைரியமும் என் மேலான நம்பிக்கையும் மெள்ள மெள்ள குறைஞ்சுக்கிட்டு வந்த தருணம் அது. அப்பத்தான் நண்பர் லேகா ரத்னகுமார், 'இந்தப் புத்தகத்தைப் படிங்க; மனசு லேசாகும்; சங்கடமும் சஞ்சலமும் பறந்தே போயிடும்’னு
சொல்லி, புத்தகங்களைக் கொடுத்தார். அவை, ஸ்ரீஅரவிந்த அன்னையின் கருத்துக்களைத் தொகுத்து வந்திருந்த புத்தகங்கள்.

படிக்கப் படிக்க, உள்ளுக்குள்ளே மாற்றம்; புதுசாகப் பிறந்தேன். எல்லாமே எனக்கே எனக்காகச் சொன்ன வார்த்தைகள். வார்த்தைகளா... இல்லை; அவை எனக்கான வாழ்க்கை! அப் புறம், 'அன்னை நேசித்த மலர்கள்’, 'அன்னையின் வாழ்க்கை வரலாறு’ன்னு தேடித் தேடிப் படிச்சேன்; வாழ்க்கைல ஜெயிச்சேன்'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார்.
''கோயம்புத்தூர்ல வாடகை வீட்ல இருந்தோம்; அப்புறமா சொந்த வீடு, அருமையான மனைவி, அற்புதமான மகன்கள்னு சந்தோஷமான வாழ்க்கை அமைஞ்சதுக்கு ஸ்ரீஅன்னையின் பேரருளும் அவங்களோட பொன்மொழிகளும்தான் காரணம். புத்தகங்களை சரஸ்வதி பூஜையன்னிக்குத்தானே பூஜையறைல வைப்பாங்க; ஆனா, ஸ்ரீஅன்னையின் புத்தகங்கள் எல்லாத்தையுமே பூஜையறையில வைச்சு, தினமும் வழிபட்டுட்டிருக்கேன். எத்தனையோ கதைகள்; புத்தகங்கள்னு எழுதியிருந்தாலும், என்னை எனக்குக் காட்டியதும், இந்த உலகுக்கே என்னைக் காட்டியதும் ஸ்ரீஅன்னையின் புத்தகங்கள்தானே?!'' என்று ராஜேஷ்குமார் புன்னகைக்க... ஸ்ரீஅன்னையின் அருள்மொழி ஒன்று நம் நினைவுக்கு வந்தது:
'எல்லா நாட்களும் நல்ல நாட்களே;
நீங்கள் நல்லவர்களாய் இருந்தால்!’
- செ.கார்த்திகேயன்
படங்கள்: வெ.பாலாஜி