Published:Updated:

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’
பிரீமியம் ஸ்டோரி
‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’
பிரீமியம் ஸ்டோரி
‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

னீஸ்வர பகவான் அருள்புரிவதால் தென் திருநள்ளாறு என்றும். தண்பொருநையாம் தாமிர பரணி தட்சிணவாகினியாகத் தவழ்ந்து செல்வதால் காசிக்கு நிகரான தலம் என்றும் போற்றப்பெறும் திருத்தலம் நாணல்காடு.   

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீதிருக்கண்டீஸ்வரர் கோயில் சிதிலம் அடைந்திருப்பதாக வல்ல நாட்டைச் சேர்ந்த ஓர் அன்பர் நமக்குத் தகவல் தெரிவித்திருந்தார். மேலும், கோயிலின் அறங் காவலர்க்குழுத் தலைவர் பரமசிவனின் தொலை பேசி எண்ணையும் நமக்குக் கொடுத்தார்.

ஒரு பனிக்காலைப் பொழுதில், நாணல்காடு நாயகனைத் தரிசிக்கவும், அவர்தம் கோயிலின் நிலையை உலகத்தவர்க்குத் தெரிவிக்கவும் வேண்டி, அந்த ஊருக்குச் சென்றோம். எதிர்ப்பட்ட பள்ளிச் சிறுமியிடம் கோயில் இருக்குமிடம் பற்றித் தெரிந்துகொண்டு, அவள் காட்டிய திசையில் சற்றுத் தொலைவு சென்றபோது, மஞ்சணத்தி மரங்களும் முட்புதர்களும் மண்டிக்கிடக்க, கோபுரம் எதுவும் இல்லாமல் பரிதாபமாகக் காட்சி அளித்தது ஐயனின் திருக்கோயில்.  

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

ஒரு காலத்தில் மகோன்னதமான அருள் சிறப்புடன் விளங்கிய திருக்கோயில், இன்று சிதிலமடைந்து திகழ்வதைக் கண்டு பதறிப் போனோம். கருவறை விமானங்களில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த பிளவுகளையும், அவற்றில் பல்வேறு செடிகொடிகள் முளைத்துப் புதர்போல் மண்டிக் கிடந்த நிலை நம் மனதைச் சோகத்தில் ஆழ்த்தியது. மனதை பாரமாக அழுத்திய சோகத்தைப் பிரதி பலிப்பதுபோல் நம் கண்களிலும் நீர் தளும்பியது. 

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’நாம் கோயில் குருக்களிடம் பேசிக்கொண்டி ருந்தபோது, அன்பர் பரமசிவனும் அவருடன் இணைந்து கோயில் திருப்பணிகளுக்கான ஏற்பாடு களை முன்னின்று கவனித்துவரும் கல்லூரிப் பேராசிரியர் போஸும் கோயிலுக்கு வந்தனர். அவர்களிடம் கோயில் பற்றிய விவரங்களைக் கேட்டோம்.

‘`நாணல்களுடன் தர்ப்பையும் அடர்த்தியாகக் காணப்பட்டதால், முற்காலத்தில் இந்த ஊருக்கு தர்ப்பாரண்யம் என்ற பெயரும் வழங்கி வந்ததாகச் சொல்கிறார்கள்.

சிவபெருமானால் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனிபகவான், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச் சந்நிதி கொண்டுள்ளதால், திருநள்ளாறு சனீஸ்வரன் தலம் என்று போற்றப் படுகிறது. இங்கும் தர்ப்பை வனம் இருந்தபடியாலும், சனீஸ்வர பகவான் சந்நிதி அமைந்திருப்பதாலும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்குத் தென் திசையில் இருப்பதாலும் இந்தத் தலம் தென் திருநள்ளாறு என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.    

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

இந்தப் பகுதியில் தவழ்ந்தோடும் தாமிரபரணி, வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து செல்வதால், ‘தட்சிண கங்கை’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. திருநள்ளாறு மற்றும் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து திருக்கண்டீஸ் வரரை வழிபட்டால், காசியையும் திருநள்ளாறையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தனை சிறப்பு கொண்ட கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. இப்போது, சில சிவ அன்பர்களின் உதவியால்தான் ஒருகால பூஜையாவது நடக்கிறது’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது. நீள் செவ்வக வடிவத்தில் உள்ள அர்த்த மண்டபத்தின் 6 தூண்களும் வெடிப்புற்ற நிலையில் காணப்படுகின்றன. கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பட்டப் பெயரினைப் பெற்றவன் வீரபாண்டியன். ஆகவே, இந்த மன்னனின் காலத்தைச் சேர்ந்த கோயிலாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.

 சென்னையில் தொல்லியல் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அர்ச்சுனன், இந்தக் கோயிலை ஆய்வு செய்து சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில், கோயில் 14 அல்லது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தெரிவித் திருப்பதாக நம்மிடம் கூறிய பரமசிவன், அந்த அறிக்கையின் நகலையும் நம்மிடம் காட்டினார்.  

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

கோயில் கருவறையில் ஈசன் திருக்கண்டீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மேலும் ஆவுடைநாயகி அம்பாள், சிவகாமி அம்மை, சர்ப்ப பீடத்தில் அமர்ந்த கோலத்தில் விநாயகப் பெருமான் ஆகியோரும் காட்சி தருகின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் கன்னி மூலையில் கன்னி விநாயகரும், வாயு மூலையில் வள்ளி, தெய்வானை சமேதராக ஸ்ரீசுப்ரமணியரும் அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆகியோரும் தனித் தனிச் சந்நிதிகளில் திருக்காட்சி தருகிறார்கள்.

தற்போது பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் விசேஷ மாக நடைபெறுகின்றன. பிரதோஷ நாளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, மயில்கண் வஸ்திரமும், வன்னியிலை மாலை, வில்வமாலை சாத்தி, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வேலையில்லாமல் கஷ்டப்படுபவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் தடைப்பட்டவர்கள், செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிவகாமி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, பச்சைநிறப் பட்டும், பிச்சிப்பூ அல்லது மல்லிகைப்பூ மாலை சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், நல்ல இடத்தில் திருமணம் நடை பெறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

சனிக்கிழமைகளில், தாமிரபரணியில் நீராடி, சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாத்தி, எள் தீபம் ஏற்றி, கற்கண்டு நைவேத்தியம் செய்தால், சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

நாம் கோயிலில் இருந்து புறப்பட்டபோது பரமசிவன் நம்மிடம், ‘`புராதனச் சிறப்பு கொண்டதும், சனிகிரக தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் திகழும் இந்தக் கோயிலுக்கு விரைவில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம்.   

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

எங்களுடைய நியாயமான வேண்டுதலை திருக் கண்டீஸ்வரர்தான் நிறைவேற்றி அருள்புரிய வேண்டும். அருள்புரிவார் என்று நாங்கள் உறுதி யாக நம்புகிறோம்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

வேலை கிடைக்காதவர்களுக்கு வேலையும், மணமாலை கிடைக்காதவர்களுக்கு கல்யாண பாக்கியம் என வரம்வாரி வழங்கும் ஐயன் மற்றும் அம்பிகையின் அருள்திறம் நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது. இங்ஙனம் பூலோகக் கற்பகவிருட்சமாய் கருணைமழை பொழியும் ஐயன் திருக்கண்டீஸ்வரரின் திருக்கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் காணவேண்டும்; நாளும் அங்கே நித்திய பூஜைகளும், விழாக்களும் விமர்சையாக நடைபெற வேண்டும். 

உன்னதமான அந்தத் திருப்பணிக்கு நம்மால் முடிந்த பொருளுதவியைச் செய்யலாமே. சிறு துளியும் சிவனார் அருளால் பெருவெள்ளமாகப் பெருகி ஐயனின் திருக்கோயிலைப் புதுப்பொலி வுடன் திகழச் செய்யும். கோயில் பொலிவுற்றால் ஊர் செழிக்கும்; நம் தேசம் நலம் பெறும்.

ஆகவே, சனி தோஷம் விலக்கி சந்தோஷ வாழ்வு அருளும் ஐயன் திருக்கண்டீஸ்வரரின் திருக்கோயில் திருப்பணியில் நாமும் பங்கேற்போம். ‘ஆறங்கம் நால்வேதம் ஆனானும், காற்றாகி எங்கும் கலந்தானும், போகாது நம் சிந்தை புகுவானு’மாகிய ஐயன் திருக்கண்டீஸ்வரரின் அருள்திறம், நமக்கும் நம் சந்ததியினருக்கும் அளவற்ற புண்ணியம் சேர்க்கும் என்பது உறுதி.

‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது..?

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில், வல்லநாட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது நாணல்காடு. இருபுறமும் வயல்கள் சூழ்ந்த
சாலையில் சிறிது தொலைவு சென்றதும், இடப்புறத்தில் உள்ளது அருள்மிகு சிவகாமி அம்மை உடனுறை அருள்மிகு திருக்கண்டீஸ்வரர் திருக்கோயில்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் 10.30 மணி வரை; பௌர்ணமி நாள்களில் 9 முதல் 1 மணி வரை; பிரதோஷ நாள்களில் மாலை  4 முதல் 7 வரை.

தொடர்புக்கு: பரமசிவன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் 090478 56642