Published:Updated:

புதிய புராணம்! - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்!

புதிய புராணம்! - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்!

ஷங்கர்பாபு

புதிய புராணம்! - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்!

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்! - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்!

நான், நீங்கள்... எல்லோருமே அடுத்தவரது துயரம் குறித்து கவலைப்படவே செய்கிறோம். நம்மைப்போன்று பெரும்பாலான அன்பர்கள் இப்படி மற்றவர்களின் துயரத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் வருந்துகிறவர்களாகவே திகழ்கிறார்கள். இருப்பினும் இந்த உலகம் துயரத்தால் நிரம்பி வழிகிறதே ஏன்?

புதிய புராணம்! - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்!

ஊட்டிக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். கூடலூர் சாலையில் எங்கள் வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது. நல்லவேளையாக எவருக்கும் அடிபடவில்லை; காயங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் இல்லையா?

காவல் துறையினர், இன்ஷூரன்ஸ் சர்வேயர்... என நிறைவேற்றப்படவேண்டிய சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடங்கின. தெரியாத ஊரில், தெரியாத மனிதர்களிடம் அவரவர் தரப்பு நியாயங்களைச் சொல்லவேண்டிய கட்டாயம். சுற்றுலாவுக்கு வந்த மற்ற குழுவினரெல்லாம் சந்தோஷக் கூச்சலுடன் எங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்க, நாங்களோ கவலை படிந்த முகத்துடனும், குழப்பமான மனநிலையோடும் அங்கே நின்றிருந்தோம். பல நாள்களாக திட்டமிட்டு வந்தும் இங்கே இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை எங்களுக்கு. நண்பர் ஒருவர் வாய்விட்டுப் புலம்பினார் ‘‘அவனவன் எவ்வளவு ஜாலியா போய்க்கிட்டுருக்கான். நம்ம நிலைமையை பாரு...’’ என்று! ஏறக்குறைய எல்லோரது வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள் வாய்த்தே இருக்கும். அதாவது நமது பக்கம் எந்தவொரு தவறும் இல்லாமல், நாம் பலிகடாவாக்கப்பட்டு நின்றுகொண்டிருப்போம். வெளியே ஓர் உலகம் அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கும். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தோன்றும் நமக்கு.

இதன் அடுத்தகட்டம் என்ன தெரியுமா?

‘நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. ஆனாலும் நமக்கேன் இப்படியான துன்பம்?' எனும் சிந்தனை எழும். இப்படியான இந்தச் சிந்தனைக்கான, சுயகழிவிரக்கத்துக்கான மறைபொருள் என்ன தெரியுமா?

‘மற்றவர்களுக்கு இப்படியான துன்பம் நடக்கவில்லையே?’ என்பதுதான்!

உங்களைப் பொறுத்தவரையிலும் நீங்கள் மென்மையானவர், அன்பானவர்... இன்னும் எப்படி வேண்டுமென்றாலும் உங்களைப்பற்றி சுயமதிப்பீடு செய்துகொள்ளுங்கள். ஆனால், உங்களுக்குள்  ஏதேனும் ஒரு தருணத்தில், ‘நமக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பம் நடந்தது?’ என்ற எண்ணமானது ஒரு மின்னல் கீற்றுபோல் தோன்றி மறைகிறது எனில், மற்றவர்களது துயரம் குறித்த உங்களது அனுதாபம், வருத்தமெல்லாம் மிகவும் மேம்போக்கானவை என்றே அர்த்தம். அவை இதயபூர்வமானவை அல்ல என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையிலேயே நீங்கள் கருணையும் அன்பும் மிகுந்தவர்கள் எனில், `எனக்கு வந்த இந்தத் துன்பம் எவருக்குமே வரக்கூடாது’ என்றே நினைத்திருக்கவேண்டும்.

`நமக்கு ஏன் இந்தத் துயரம்?’ என்று யோசிப்பதில் நியாயம் உண்டு. ஆனால், பெரும்பாலானோருக்கு ‘நமக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பம்’ என்ற நினைப்பே மேலோங்கித் திகழ்கிறது.

‘நமக்கு மட்டும் ஏன்...’ என்பதில் ஒருவித மமதை, ஆணவம் அடங்கியிருக்கிறது. அடுத்தவரது துயரத்துக்காக ஏங்குகிற, அதன்மூலம் ‘நல்லவேளை நமக்கு இப்படியான துயரம் நடக்கவில்லை’ என்று ஆறுதல் தேடும் ஒருவித மனப்பான்மை இருக்கிறது.

இப்படியான மனநிலையே அதிகம்பேருக்கு இருக்கும்பட்சத்தில்... பிறர் துயரத்தை தனது துயரமாகக் கருதிக் கண்ணீர் வடித்தல், அவர்தம் துயரத்தைப் போக்க வழிகாட்டுதல் போன்ற மனிதம் பூக்கும் தருணங்கள் பூமிக்கு எப்படி வாய்க்கும்?!

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.  விதிவிலக்காக ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மனிதர் களும் வெகு அபூர்வமாக இருக்கவே செய்கிறார்கள். இல்லையென்று சொல்ல முடியாதுதான். ஆனால், பூமிவாழ் உயிரினம் அனைத்துக்கும் இந்தச் சிறு எண்ணிக்கை போதுமா?

நமக்கெல்லாம் தெரிந்த ஈசனின் திருக்கதை ஒன்று. உலக உயிர்களின் துயர் துடைக்க ஈசனே களமிறங்குகிறார். அமிர்தம் பெறுவதற்காக பாற்கடல் கடையப்பட்டது. எதிர்பாராதவிதமாக  நாகம் விஷம் கக்க, பாற்கடலிலும் விஷம் தோன்ற இரண்டும் சேர்ந்து ஆலகாலமாகப் பொங்கி வந்தது! அதன் வெம்மையைத் தாங்காமல் உலக உயிர்கள் எல்லாம் நடுங்க, அந்தக் கொடிய விஷத்தை தாமே ஏற்று அருள்பாலித்தார் ஈஸ்வரன்.

அதாவது ஒரு பிரச்னை வருகிறது. அது உலகத்துக்குத் துயரம் தருவதாக இருக்கிறது. அதை தடுக்கும் பொருட்டு, ஈஸ்வரன் அந்தத் துயரை ஏற்றுக்கொள்கிறார். அவ்வாறு அவர் விஷம் அருந்தி மயங்கியதுபோல் மயங்க, அண்டசராசரங் களும் செய்வதறியாது மயங்கின. அந்த மயக்கத்தைப் போக்கும் வகையில் எழுந்தாடினார் ஈசன். அந்த அற்புத தருணத்தையே பிரதோஷ காலமாக வழிபடுகிறோம். சனிப் பிரதோஷம், சோமவார பிரதோஷம்... என ஒவ்வொரு பிரதோஷ தினங்களின் சிறப்புகளையும், அந்த நாள்களில் சிவதரிசனத்தால் கிடைக்கும் பலன்களையும் அறிந்திருப்போம்.

கொஞ்சம் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... அந்த நேரத்தில், நமக்கான வரங்களையே ஈசனிடம் யாசிக்கிறோமே தவிர, நம்மில் எத்தனைப் பேர் உலகின் துயர் தீர்க்கும் வகையில் அதை தாமே ஏற்றுக்கொண்ட ஸ்வாமியின் அருட்கடாட்சத்தை நினைவுகூர்கி றோம்?! இல்லைதானே? அந்த வகையில் நாம் நன்றி கொன்றவர்களும்கூட!

இனி, பிரதோஷ வழிபாட்டுக்குச் செல்லும் போது, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் தென்னாடுடைய அந்தச் சிவனாரின் கருணையையும் தியாகத்தையும் கொஞ்சமேனும் யோசிப்போம்.   அதுவே பிறர் துயர் துடைக்கும் மனோபாவத்தின் முதல் படி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!