Published:Updated:

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

Published:Updated:
ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்

மகிமைமிகு சிவத்தலங்கள்

னி பகவான், மந்தா-ஜேஷ்டா ஆகிய தேவியருடன் அமர்ந்த கோலத்தில் மங்கள சனீஸ்வரராக அருளும் தலம் விளாங்குளம். விளா மரங்கள் நிறைந்திருந்த இடமாதலால் விளாங்குளம்  எனப் பெயர்பெற்றதாம். தஞ்சை மாவட்டம், பேராவூரணிக்கு அருகிலுள்ள இத்தலத்திலுள்ள- சிவனார் ஏற்படுத்திய தீர்த்தம், சனிபகவானின் ஊனம் நீக்கி அருள் செய்ததாம். சிவ பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது. 

ஆன்மிக துளிகள்

சிவபெருமான் சுவாமிமலைக்குச் செல்லும் வழியில் தங்கியிருந்து, பைரவரை ஸ்தாபித்த இடம் ஈசன் குடி. இந்தப் பெயரே பின்னாளில் ஈச்சங்குடி என்று மறுவியது. காசியில் உள்ள பைரவரின் சாந்நித்தியம் இத்தலத்தின் பைரவருக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். இந்தப் பைரவரை வணங்கி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்; சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.

- சு.கெளரீதரன், பொன்னேரி

மாசிமகமும் மாமன்னர்களும்!


மாசி மக நன்னாளன்று இந்திரன் துங்கபத்ரா நதியில் நீராடி சாபம் நீங்கப்பெற்றான் எனவும், அன்று சிவனாரை வணங்கி விளக்கேற்றி வழிபட்டு அருள்பெற்றான் எனவும் ஸ்காந்தபுராணம் சொல்கிறது. இந்திரன் இப்படியென்றால், கலியுக வேந்தர்கள் யார்யாரெல்லாம் மாசிமகத்தைச் சிறப்பித்திருக்கிறார்கள் தெரியுமா?

திருப்பராய்த்துறை கோயில் இறைவனுக்கு நைவேத்தியத்துக்காகவும், மாசிமக விழாவுக்கா கவும் ராஜராஜ சோழன் நிலம் நிவந்தம் அளித்ததாக கல்வெட்டு தகவல்கள் கூறுகின்றன.

அதேபோல், திருச்செந்தூர் முருகன் கோயில் மாசிமக விழா சிறப்புற நடைபெற வரகுண பாண்டியன் நிவந்தங்கள் அளித்ததாகச் சரித்திரத் தகவல்கள் உண்டு.

கிருஷ்ணதேவராயர், நாகலாபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வேதநாராயண சுவாமி கோயிலின் மாசிமகப் பெருவிழாவைக் கண்டு களித்ததாகவும் கல்வெட்டுகள் குறிப்பிடு கின்றன.

- எஸ்.ராஜம், சேலம்

ஆன்மிக துளிகள்

அன்னப் பறவைகளின் கோட்டை!

து அன்னப்பறவைகளின் கோட்டை. ஓர் உயர்ந்த மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்த அதை எவராலும் நெருங்க முடியாது; தாக்க முடியாது. குளிர் அதிகமானால் முகில்களை இழுத்து, இழுத்துப் போர்த்திக்கொள்ளும் அந்த மலை முகட்டில் இருந்த சிகரம்.

அங்கே அரசனாகத் திகழ்ந்த அன்னம் இரக்கம் மிகுந்தது. தன் குடிமக்களான அன்னங்களின் தேவைகளைப் பார்த்துப் பார்த்து உதவும் மேன்மையான மனம் கொண்டது. அமைச்சரான அன்னம் அரச அன்னத்துக்குத் தேவையான ஆலோசனைகளை, அறிவுரைகளை வழங்கும்.

ஒருமுறை, காக்கை ஒன்று வழிதவறி இங்கு வந்துவிட்டது. மேகக் கூட்டங்களை ஊடுருவி மேற்கொண்டு பறக்க முடியவில்லை அந்தக் காகத்தால். ஆகவே, “ஓர் இரவு மட்டும் தங்கிக்கொள்கிறேன்'' என்று அரச அன்னத்திடம் வந்து அனுமதி வேண்டி கெஞ்சியது. ‘‘வேண்டாம்! வேற்று இனத்தவரை இங்கே சேர்ப்பதில்லை.  மீறினால் நிச்சயம் பிரச்னை வரும்'' என்று மறுப்பு தெரிவித்து, எச்சரித்தது அமைசர் அன்னம். மற்ற அன்னங்களும் அதே கருத்தையே வெளிப்படுத்தின.

ஆனால், “போனால் போகட்டும். ஒரு இரவுதானே” என்று அரச அன்னம் இரக்கப்பட்டு அனுமதி அளித்தது.  காகம் அன்றிரவு அங்கு தங்கியது. அப்போது அது எச்சமிட்டதால் ஒரு சிக்கல் முளைத்தது.

ஆம்! அந்த எச்சத்திலிருந்த ஆலம் விதை ஒன்று மலையிலிருந்த பொந்துக் குள் செடியானது, மரமானது. அதன் விழுதுகள் வளர்ந்து தொங்கின. ஒருமுறை குறிப்பிட்ட உயரம் வரையிலும் மலைக்குமேல் ஏறிவந்துவிட்ட வேடன் ஒருவன்,  மேற்கொண்டு ஏறுவதற்கு ஆல விழுதுகள் உதவின. விழுதினைப் பற்றி மேலே ஏறி வந்தவன் கோட்டையையும் அன்னப் பட்டாளத்தையும் கண்டான். மளமளவென்று அனைத்து அன்னங்களையும் எளிதில் பிடித்துச் சென்றான்.

“நன்று அறியாத் தீயோர்க்கு இடம் கொடுத்த நல்லோர்க்கும் துன்று கிளைக்கும் துயர் சேரும்” என்கிறது நீதிவெண்பாவின் பாடல் ஒன்று. அதன் வரிகள் இப்படி நிறைவடைகிறது: `குன்றிடத்தில் பின்னிரவில் வந்த கரும் பிள்ளைக்கு (காக்காய்க்கு) இடம் கொடுத்த அன்ன முதற் பட்டது போலும்!'.

- வீ.ஜே.செல்வராசு