மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?

கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - படம்: மஹிதங்கம்

? கோயிலுக்குச் செல்லும்போது முதலில் கோபுர வாயிலின் படியைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே செல்வது எனது வழக்கம்; முன்னோரைப் பார்த்துப் பழகியது. இப்போது, இதற்குக் காரணம் கேட்கிறாள் என் பேத்தி. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நீங்கள்தான் விளக்கவேண்டும்.

- ப.காமாக்ஷியம்மாள், சங்கரன்கோவில் 

கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?

துயில் எழுந்ததும் பூமித் தாயைக் காலால் மிதிக்கிறோம். தாயைக் காலால் மிதிப்பது தவறு என்பது நமது எண்ணம். ஆகையால் எழுந்தவு டன் பூமிக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். ‘பூமித் தாயே! மன்னித்துவிடு. நான் பல அலுவல் களில் ஈடுபட வேண்டியிருப்பதால் உன்னை மிதிக்காமல் செயல்பட இயலாது. எனது பாத ஸ்பரிசத்தைப் பொறுத்துக்கொள்!’ என்று பூமித் தாய்க்கு முதல் வணக்கம் அளிப்பது நமது மரபு.

கோயில் வாசலில் படியைத் தாண்டிப் போக வேண்டும். சிலர், படியில் கால் வைத்துப் போக நேரிடும். கால் வைப்பதும், தாண்டுவதும் மனதுக்கு நெருடலை உண்டுபண்ணும்.

கோயிலில் வீற்றிருக்கும் தெய்வத்தின் உடலாகக் கோயிலை நினைக்கிறோம். அப்போது அதன் வாசலில் இருக்கும் படியை மிதிக்கும்போது அபசாரமென்று மனம் எண்ணுவதுண்டு. அதைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுவதற்கு படி யைத் தொட்டு வணங்குகிறோம். அது மனதில் ஏற்பட்ட நெருடலால் வந்த செயல்.

கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?? சென்ற இதழ் சக்தி விகடனின் இணைப்பில் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சரின் சரிதத்தைப் படித்து மகிழ்ந்தேன். அவரின் திருப்பெயரில், ‘ஹம்சர்’ என்ற பதத்துக்கு என்ன பொருள்?

- கீர்த்தனா சுரேஷ், சென்னை-47


‘ஸோஹம் - அந்தப் பரம்பொருளே நான். ஹம்ஸ: - நானே அந்தப் பரம்பொருள்!’ என்று விளக்கம் அளிப்பார்கள் பெரியோர்கள். ‘பரமாத்மாதான் ஜீவாத்மா’ என்று மட்டும் சொல்லி நிறுத்தினால் போதாது. ‘இந்த ஜீவாத்மா தான் அந்தப் பரமாத்மா’ என்று திருப்பிச் சொல்ல வேண்டும். அப்போது அவர்கள் இருவரும் ஒருவரே என்பது நிச்சயமாகும்.

ஆன்மிகத்தின் எல்லையை வரையறுத்து, மங்கள வடிவான பரம்பொருளை உணர்த்துவது அது (ஹம்ஸோநாம ஸதாசிவ:). ஒவ்வொரு மனிதனும் மூச்சு விடும் தறுவாயில் ‘ஹம்ஸ’ என்ற ஒலி எழும்புகிறது. மூச்சை உள்ளிழுத்து விடும் தறுவாயில், காற்றின் ஒலி ‘ஹம்ஸ’ என்று இருப்ப தாக யோக சாஸ்திரம் கூறுகிறது. ‘ஹன ஹிம்ஸா கத்யோ’ என்ற தாதுவில் இருந்து வெளி வந்தது ஹம்ஸ சப்தம். அதற்கு ‘சென்று கொண்டே இருப்பவன்’ என்று பொருள். துறவி சென்று கொண்டே இருப்பவர். அவரை `பரமஹம்ஸர்’ என்று சொல்லலாம்.

? சமீபத்தில் சில சுபநிகழ்ச்சிகள் அஷ்டமி தினத் திலேயே நாள் குறிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். நல்ல விஷயங்களுக்கு அஷ்டமி திருநாளைத் தேர்ந் தெடுக்கலாமா?

- சீ.பரமேசுவர பாண்டியன், காரைக்குடி


பதினைந்து திதிகளும், ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

நந்தா: பிரதமை, சஷ்டி, ஏகாதசி.

பத்ரா: துவிதியை, சப்தமி, துவாதசி.

ஜயா: திரிதியை, அஷ்டமி, திரயோதசி

ரிக்தா: சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி.

பூர்ணா: பஞ்சமி, தசமி, பூர்ணிமா.

சில முகூர்த்தங்களுக்கு அஷ்டமி திதியைச் சேர்ப்பதில்லை. ‘ஜயா பிரிவில் தென்படும் திருதியையும், திரயோதசியும் முகூர்த்தங்களில் இடம் பிடித்திருப்பதால், அஷ்டமியும் சேர்க்கப் படுவதில் தவறில்லை’ என்று முகூர்த்தப் பதவி நூல் விளக்குகிறது. ‘இஷ்டா கிருஷ்ணாஷ்ட மீன்ந்தோ’ என்று ஆரம்பிக்கும் செய்யுளின்படி, தேய்பிறை அஷ்டமியில் திருமணம் செய்யலாம் என்கிறார்கள் கேரள தேசத்தவர்கள். அஷ்டமி, துவாதசி போன்றவை பேச்சுவார்த்தையில் வெற்றி பெறப் பயன்படுகின்றன. அவர்கள் வெற்றி பெறுவதால் அதை நிராகரிப்பதற்கில்லை.  

கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?

அம்பாள் பூஜைக்கு அஷ்டமி சிறப்பு என்பர். (சதுர்தச்யாம் அஷ்டம்யாம் வா விசேஷத:) கொல்கத்தா- காளி பூஜையில் அஷ்டமிக்கு சிறப்பு உண்டு. துர்கா, லட்சுமி, சரஸ்வதி பூஜையில் (நவ ராத்திரியில்) நடுநாயகமாக விளங்குவது அஷ்டமி. இங்கு வெற்றி தேடித் தருவதில் அஷ்டமிக்குப் பங்கு இருக்கிறது.

முகூர்த்தப் பொதுப் பட்டியலில் அஷ்டமி இடம் பெறாததால், அது விலக்கத்தக்கது என்ற தோற்றம் பரவிவிட்டது. ஜன்மாஷ்டமி, அசோகாஷ்டமி போன்ற விரதங்கள் அஷ்டமிக்குப் பெருமை சேர்க்கின்றன. திதிகளுக்கு வெற்றி- தோல்வி என்ற பாகுபாடு இல்லை. பயணத்துக்கு திரிதியை மற்றும் சஷ்டி சுபம். சஷ்டி கலகத்தை உண்டு பண்ணும் (சஷ்ட்யாம் கலகபந்தனம்). எனினும், முகூர்த்தத்துக்கு சஷ்டி சுபம். ஆகை யால் வெற்றியைத் தரும் என்று சொல்ல வேண்டும்.  

கேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா?

நல்ல நாள்- கெட்ட நாள் என்று நிர்ணயிப்பது திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தின் கூட்டணியே. திதி- செல்வச் செழிப்பை அளிக்கும். வாரம்- வாழ்க்கையின் நீட்டிப்பு. நட்சத்திரம்- தவறுகளை மன்னிக்கும். யோகம்- பிணியை அகற்றும். கரணம்- வெற்றி தரும் என்று பலன் சொல்வதுண்டு. ஐந்தில் ஒன்றை மட்டும் வைத்து முடிவுக்கு வரக் கூடாது. ‘அஷ்டமியில் தொடங்கும் காரியத்துக்கு வெற்றி கிடைக்காது!’ என்று அஷ்டமியின் பலனை மட்டுமே நடை முறைப்படுத்துவது தவறு.

? வீட்டில் விளக்கில் ஊற்றும் எண்ணெய் மீதமாகி விட்டால், அதை மீண்டும் விளக்கேற்றுவதற்குப் பயன் படுத்தலாமா?

- சங்கரி கிருஷ்ணன், தூத்துக்குடி


இயற்கை அளித்த பொருள்களை வீணாக்குவது தவறு. அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதே சரி. எண்ணெய்க்கு ‘பர்யுஷாதம்’ (பயன்படுத்திய மாசு) கிடையாது. எனவே, அதைத் திரும்பவும் பயன்படுத்தலாம். முதல் நாள் எண்ணெயில் பொரித்த வறுவல்களை மறுநாள் பயன்படுத்துவது உண்டு. அதேநேரம், எண்ணெயில் கசடு மண்டி, தூய்மை இழந்திருந்தால் மாற்றிவிட வேண்டும்.

? வீட்டில் சுந்தர காண்டம் படிக்க விரும்புகிறேன். அதற்கான நியதிகள் வழிமுறைகள் என்னென்ன?

- கே.எம்.சண்முகநாதன், திருச்சி


வாழ்நாள் முழுவதும் நித்ய பாராயணமாக சுந்தர காண்டத்தைப் பயன்படுத்தலாம். ராமா யணத்தின் சிறப்பு திருப்புமுனையை அறிமுகம் செய்தவர் ஆஞ்சநேயர். ராமனின் நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் இருப்பார். ராமாயணச் சொற்பொழிவில் அவருக்காக ஓர் இருக்கையை ஏற்படுத்தி இருப்பார்கள் (யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ரதத்ர க்ருதமஸ்தகாஞ் சலிம். பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நம த ராஷஸாந்தகம்).

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் தவிக்கும் மனித இனத்துக்கு, சுந்தர காண்டப் பாராயணம் வழிகாட்டும். திக்குத் தெரியாமல் தவிக்கும் பக்தன், சரியான திசையில் செல்வதற்கு சுந்தர காண்டப் பாராயணம் உதவும். தற்காலச் சூழலுக்கு உகந்த பாராயணம் அது.

நாள் ஒன்றுக்கு ஏழு சர்க்கங்களாக பாகுபடுத்திப் பாராயணம் செய்யலாம் ‘ஸப்தஸர்க்க பாராயணம்’ என்று சிறப்பாகக் கூறுவார்கள். பல அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் இன்றைய தலைமுறையினருக்குக் கால அவகாசம் கிடைப்பது அரிது. ஆகையால் விருப்பப்படி கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொண்டு சிறிய சிறிய பகுதியாகவும் பாராயணம் செய்யலாம்.

? `இந்த வருடம் திருமண நாளை நட்சத்திரப்படி கொண்டாடுவோம்’ என்கிறாள் என் மனைவி. அப்படிச் செய்யலாமா அல்லது ஆங்கில மாத தேதிப்படி கொண்டாடுவதா?

- கு.செந்தில்குமார், கோவை-4


வேத காலத்திலிருந்து வருடம், மாதம், திதி, நட்சத்திரம் - ஆகியவற்றைக் கடைப்பிடித்து வருகிறோம். பழக்கப்பட்ட ஒன்றை விட்டுவிட்டு, புதியதை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? தெளிவான ஒன்றை விட்டுவிட்டு, மற்றொன்றைப் பின்பற்றுவது தேவையற்றது

நமது திருமணத்துக்கும் அதை நிகழ்த்தும் காலத்துக்கும் தனிப் பெருமை உண்டு. திருமண நாளை தமிழ் மாதத் தேதி- நட்சத்திரத்தின்படி கொண்டாடுவதே பொருந்தும். பிறரை மகிழ்விக்க நாம் திருமண நாளைக் கொண்டாடுவதில்லை. நமது மகிழ்ச்சியைப் புதுப்பிக்கவே கொண்டாடு கிறோம். அந்தக் கொண்டாட்டம் நமது பண்பாட் டுடன் இணைந்து செயல்பட்டால், அதற்குத் தனிப் பெருமை உண்டு.

- பதில்கள் தொடரும்...