எளியவர்களை ஒருபோதும் எள்ளிநகையாடக் கூடாது. மீறி இகழ்ந்து பேசினால், இகழ்பவர்களே துன்பத்துக்கு ஆளாவார்கள். இதை, பாதுகா பட்டாபிஷேகக் கதை நிரூபிக்கும் என்று அறிவுறுத்தும் வாரியார் சுவாமிகள், அதுபற்றிய கதையையும் விளக்கியுள்ளார். அந்தக் கதை....

வைகுண்டத்தில் ஒரு நாள் திருமால் பாம்பணைக்கு அருகில் பாதுகைகளை விட்டுச் சென்றிருந்தார். அங்கேயே பாம்பணையின் மீது பகவானின் திருமுடி (கிரீடம்), சங்கு, சக்கரம் ஆகிய மூன்றும் இருந்தன.

தான் இருந்த அதே அறையில் பாதுகை களும் இருப்பதைக் கண்டு திருமுடிக்குப் பொறுக்கவில்லை. பாதுகைகளைப் பார்த்து ``தாழ்ந்தவனாகிய நீங்கள் படுக்கை அறைக்கு வரலாமா?’’ என்று சீற்றத்துடன் கேட்டது.பாதுகைகள் அப்பாவியாய்ப் பதில் சொல்லின: ‘‘நானாக இங்கே வரவில்லை. பகவான்தான் என்னை இங்கே விட்டுச் சென்றிருக்கிறார்’’

‘‘இருக்கட்டுமே! அவர் விட்டுச் சென்றிருந்தாலும் நீ இங்கிருக்கலாமா? உடனடியாக வெளியேறியிருக்க வேண்டாமா?’’ என்றது திருமுடி. பாதுகைகள் அப்போதும் கோபம் கொள்ளவில்லை. அமைதியாகப் பதில் சொல்லின: ‘‘எங்களை ஏன் இகழ்கிறீர்கள். பகவானையே பாதாதிகேசமாகத்தான் தரிசிக்கச் சொல்வார்கள் பெரியோர்கள். அப்படி, திருவடியைத் தரிசித்து சரணடையும் பக்தர்கள் எங்களையே முதலில் காண்பார்கள். மட்டுமின்றி, பக்தர்கள் தங்களை ‘அடியேன்’ என்று அழைத்துக்கொள்வார்களே தவிர, ‘முடியேன்’ என்று சொல்வதில்லையே!’’

இதைக் கேட்ட சங்கும், சக்கரமும் கோபம் கொண்டன. அவை திருமுடியின் பக்கம் சேர்ந்து கொண்டு பாதுகைகளை இகழ்ந்தன. பாவம் பாதுகைகள் அழ ஆரம்பித்துவிட்டன.

அனைத்தையும் அறிந்த பகவான் பாதுகைகளுக்கு ஆறுதல் சொன்னார். ‘‘கவலைப்படாதீர்கள். ராமாவதாரத்தில் உங்களுக்கு ஏற்றம் கிடைக்கும். இகழ்ந்தவர்களே உங்களைப் போற்றுவார்கள்!’’ என்றார். அப்படியே நடந்தது. ராமாவதாரத்தில் ராமனாகப் பிறந்த பகவான் தமது திருமுடியைத் துறந்து கானகம் சென்றார். சங்கும் சக்கரமும் பரத சத்ருக்னனாகப் பிறந்தன. பகவானின் பாதுகைகளைப் பெற்றுவந்து அரியணையில் அமர்த்தி, பரதன் ஆட்சிசெய்த திருக்கதை நமக்குத் தெரியும்தானே!

- வே.இராமலக்ஷ்மி, திருநெல்வேலி