‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்றால், அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் இருக்கும் திருக்கோயில்கள் எல்லாம் ஆன்மிகம் சார்ந்த ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டும் இல்லாமல், நமது பாரம்பர்யம், கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகிய வற்றைப் பல நூற்றாண்டுகள் கடந்தும் எடுத்துக் கூறும் பொக்கிஷங்களாகவும் திகழ்கின்றன.

போர், வெள்ளம், வறட்சிக் காலங்களில் பாதுகாப்பான காவல் அரணாகவும், மக்களைக் காப்பாற்றும் மையங்களாகவும் திகழ்ந்தவை கோயில்கள்தான். மேலும், மக்கள் நலன் சார்ந்த மருத்துவமனைகளாகவும் கலைகளை வளர்க்கும் மன்றங்களாகவும் அக்கால ஆலயங்கள் அமைந்திருந்தன. குறிப்பாக ஆலயங்களில் மருத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டி ருந்தது. ஆலயங்களிலிருந்த மருத்துவமனைகள், ‘ஆதுலர் சாலை’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

ஆலயங்களில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளைப் பராமரிக்கவும், மருத்துவம் செய்யும் மருத்துவா்களுக்கான ஊதியம் வழங்கவும், ‘வைத்திய விருத்தி’ என்ற பெயரில் நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. மருத்துவா்களில் அறுவை சிகிச்சை நிபுணா்களும் இருந்திருக்கிறார் கள் என்பது கூடுதல் சிறப்புச் செய்தி. அவர்களை ‘சல்லியக்கிரியை செய்பவர்கள்’ என்று அழைத்தனர்.

இப்படி மருத்துவமனையையும் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த ஆலயங்களில் ஒன்றுதான், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் இருக்கும் பழைய சீவரம் என்னும் புராதன திருத்தலத்துக்கு அருகில், பாலாற்றின் மறுகரையில் அமைந்திருக் கிறது ‘திருமுக்கூடல்’ எனும் எழில்மிகு திருத்தலம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு ‘திருமுக்கூடல்’ எனும் திருப்பெயர் ஏற்பட்டுள்ளது.

புண்ணிய நதிகள் பாய்ந்து புனிதம் சேர்க்கும் திருமுக்கூடல் தலத்தில்தான், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன், ‘அப்பன் வெங்கடேசப் பெருமாள்’ என்னும் திருப் பெயருடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

பெருமானின் திருவடியில் பூமாதேவியும் மார்க்கண்டேயரும் அமா்ந்து வழிபடுகின்றனா். திருவேங்கட மலையில் இருக்கும் வேங்கடவனின் தரிசனத்தைக் கண்ட மன நிறைவு இங்கும் ஏற்படு கின்றது. சா்வ அலங்காரத்துடன் ஆஜானுபாகுவாக உள்ள பெருமாளின் தரிசனத்தில் நாம் நம் நிலை மறந்து, பெருமாளுடன் ஐக்கியமாகிவிட்டது போன்ற பரவச உணர்வில் ஆழ்ந்துவிட்டோம்.

திருமுக்கூடல் தல வரலாறு

தொண்டை மண்டல அரசர் ஒருவர், வேங்கடமலையில் அருளும் எம்பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அந்தப் பக்தியின் வெளிப்பாடாக திருமலை தெய்வத்துக்கு ஏராளமான திருப்பணிகளை மனமுவந்து செய்துவந்தார்.

ஒருமுறை திருமலையில் நடைபெறும் திருப்பணிகளைப் பார்வையிடச் சென்றார் மன்னர். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, தொண்டை நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை மன்னன், நாட்டை முற்றுகையிட்டுவிட்டான். மன்னர் நாட்டில் இல்லாத நிலையில், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றனர் அமைச்சர்கள்.

ஒற்றர்கள் மூலம் மன்னருக்குத் தகவல் சென்றது. ஆனாலும், பகையரசன் முற்றுகையிட்டுவிட்ட நிலையில், மன்னர் மட்டும் என்னதான் செய்யமுடியும்?

பெருமாளிடம் பேரன்பும், மாசற்ற பக்தியும் கொண்டிருந்த மன்னர், வேங்கடவனிடமே சரணடைந்தார். மனமுருகப் பிரார்த்தித்தார். பக்தர்களிடம் வாத்சல்யம் கொண்டிருப்பதால், பக்தவத்சலன் என்று போற்றப் பெறும் வேங்கடவன், தன் பக்தனைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்டுவிட்டார். தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும், சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாரையும் களம் காணச் செய்து பகைவர்களை விரட்டி, மன்னரையும் நாட்டையும் காப்பாற்றினார்.

திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார். திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து, தன் வேண்டுதலுக்கு இரங்கி, திருவேங்கடமுடையானே பகையரசனை விரட்டிய அற்புதத்தை குறிப்பால் உணர்ந்தார்.

திருமலை தெய்வத்தின் பெருங்கருணையை எண்ணி வியந்த மன்னர் மெய்சிலிர்த்து, ‘என் அப்பனே!’ என்று பெருங்குரலில் இறைவனை அழைத்து, எம்பெருமானின் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

வைணவ உலகத்தின் ஞானத் தந்தையாகப் போற்றப்படும் நம்மாழ்வாரும் உலகளந்த உத்தமனை, ‘ஆழி எழ, சங்கும் வில்லும் எழ’ எனத் தொடங்கும் பாசுரத்தில் உலகளந்த உத்தமனைப் பாடும்போது ‘அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே!’ என்று எம்பெருமானைப் பாடி நெகிழ்ந்துள்ளார். பெருமானிடத்தில் உள்ள நெருக்கத்தாலும் உள்ளம் உருகும் பக்தியாலும் எம்பெருமானை தந்தையாகப் பாவித்து வழிபட்டார்கள் அடியார்கள். அதனால் பல்லவ மன்னரும் திருமுக்கூடல் பெருமானை ‘அப்பன்’ என்று அன்புமீதூர அழைத்து, பெருமானின் திருவடிகளில் பணிந்து வணங்கினான்.

அன்று முதல் சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டின் மக்களும் மன்னரது வழியைப் பின்பற்றி, திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாளை ‘அப்பன் வெங்கடேசப் பெருமான்’ எனப் போற்றி வணங்குகின்றனா்.

பல்லவா், சோழா், விஜயநகர மற்றும் நாயக்க மன்னா்களின் காலத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இந்தத் தலத்தின் புராதனத்தை எடுத்துக் கூறுகின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து இத்தலத்தின் எம்பெருமான், ‘விஷ்ணு படாரா்’, ‘திருமுக்கூடல் ஆழ்வார்’, ‘திருவேங்கடமுடையான்’ மற்றும் ‘ஸ்ரீவெங்க டேசுவர ஸ்வாமி’ எனப் பல திருநாமங்களில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

பஞ்சமூா்த்திகளின் சங்கமம்!

மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் தலத்தில், பஞ்ச (ஐந்து) தலங்களின் மூா்த்திகளையும் ஒரு சேர தரிசிக்கும் பேற்றினை நமக்கு அருளும் வகையில் ஒரு விழா நடைபெறுகிறது.

தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று தரிசனம் தரும் ‘பரிவேட்டை’ வைபவம் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் காஞ்சி வரதா், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மா், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும் ஒரே நேரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதிப்பா். பல ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பஞ்சமூா்த்திகளின் தரிசனத்தை ஒருசேரப் பெற்று மகிழ்கின்றனா்.

கடன் தீர வழிபாடு!

பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், இங்கு தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீஅனும னையும் பக்தியோடு வழிபடுகின்றனா். இந்தத் தலத்தில் ஸ்ரீஅனுமன் ‘கா்ணகுண்டலம்’ அணிந்து வித்தியாசமாகக் காட்சி தருகின்றார். இங்கு இவருக்கு ‘வடை மாலை’க்கு பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது.

தற்போது இந்தக் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மிகச்சிறப்புடன் பராமரிக்கப்படுகிறது. திருப்பதி சென்று வேங்கடவனை மனம் குளிர தரிசிக்க இயலாத அன்பா்கள், திருமலை தெய்வத்தை தம் மனக்கண் முன் நிறுத்தி திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்யலாம். அதன்மூலம் திருமலை வேங்கடவனை தரிசித்த நிறைவு நமக்கு ஏற்படும்.

ஆயிரம் ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளின் மெளன சாட்சியாக விளங்கும் இந்தத் தலம், பக்தா்கள் வருகையின்றி அமைதியாக உள்ளது. தமிழகத்தை ஆண்ட மன்னா்பெருமக்களின் பெருமைகளையும், மக்கள் நலனை முன்னிறுத்தி அரசாண்ட முறைகளையும் திருமுக்கூடல் தலம் சென்று பார்வையிட்டு, நம் புராதனப் பெருமைகளை உணர வேண்டும். நமது புராதனப் பெருமைகள் மறக்கப்பட்டு வரும் இந்தக் காலக் கட்டத்தில் வருங்கால சந்ததியினரான நம் குழந்தைச் செல்வங்களையும் திருமுக்கூடல் திருத்தலத்துக்கு அழைத்துச் சென்று அரிய இந்த வரலாற்று நிகழ்வுகளை அவா்களுக்கு உணா்த்த வேண்டும்.

எப்படிச் செல்வது?

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள ‘பழைய சீவரம்’ என்னும் தலத்திலிருந்து பாலாற்றைக் கடந்து மறுபுறம் சென்றால் திருமுக்கூடல் தலத்தை அடையலாம்.

கோயில் நடை திறப்பு நேரம்: காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை பிற்பகல் 4.00 மணி முதல் 6.00 மணி வரை

வீரசோழன் ஆதுரசாலை!

இந்தத் திருக்கோயிலில் சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் கல்லூரி, நடனசாலை மற்றும் மருத்துவமனை இருந்ததை கி.பி.1068-ம் ஆண்டின் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியலாம். வீரராஜேந்திர சோழ மன்னன் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, இந்த மருத்துவமனை ‘வீர சோழன் மருத்துவமனை’ என்று அழைக்கப்பட்டதையும், பதினைந்து நபா்கள் இந்த மருத்துவமனையில் தங்கி உள் நோயாளிகளாக (In patient) சிகிச்சை பெறும் வசதியோடு இம்மருத்துவமனை விளங்கியதையும் குறிப்பிடும்போது, நம் தமிழர்களின் மாண்பை எண்ணி வியக்காமல் எப்படி இருக்க முடியும்?

இந்த மருத்துவமனையில் நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவா், அறுவை சிகிச்சை செய்பவா், மருந்து சேகரிப்பவா், பெண் செவிலியா்கள், மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விவரம், அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் உணவு குறித்தும் கோயிலின் கிழக்குப் பிராகாரத்தில் இருக்கும் மிக நீண்ட கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கோயிலின் ஒரு பகுதியான ‘ஜனநாத மண்டபம்’ என்னும் இடத்தில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்திருக்கிறது.