Published:Updated:

நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

Published:Updated:
நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

துரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்குப் பிறகு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்ள மதுரைக்குச் சென்ற நாரதர் இன்னும் வரவில்லையே என்ற யோசனையுடன், வாசலையே பார்த்துக்கொண்டிருந்தோம்.  

நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

நம்மை அதிகம் காத்திருக்க வைக்காமல், சற்று நேரத்துக்கெல்லாம் நாரதர் நம் அறையில் பிரசன்னமானார்.

வியர்க்க விறுவிறுக்க வந்தவருக்கு மோர் கொடுத்து ஆசுவாசப்படுத்திவிட்டு, அவர் சொல்லப் போகும் செய்திகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தோம்.

‘‘மதுரை மக்களின் வருத்தமும் கோபமும் கொஞ்சமும் தணியவில்லை’’ என்ற முன்னறிவிப்புடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலவரங்களை விவரிக்கத் தொடங்கினார்.

‘‘கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் சுற்றியுள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டு, பெரும் சேதத்தை உண்டாக்கியது. பொதுமக்களும், தீயணைப்புத்துறையினரும் கடுமையாகப் போராடித்தான் தீயை அணைக்க முடிந்தது. கோயில் நிர்வாகத்தின் மீது பக்தர்களும் பொதுமக்களும் கடும் கோபத்தில் உள்ளனர்’’ என்ற நாரதர், அது தொடர்பாகப் பல வழக்குகள் உயர்நீதிமன்ற  மதுரைக்  கிளையிலும் தொடுக்கப்பட்டதாகக் கூறினார்.

‘‘தற்போது செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் பற்றி விசாரித்தீர்களா?’’   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

‘‘விசாரிக்காமல் இருப்பேனா? மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பார்வையிட வந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஆறு மாதத்தில் மண்டபம் சீர் செய்யப்பட்டுவிடும் என்று கூறிச் சென்றிருக்கிறார். அதற்கான வேலைகளும் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள மண்டபத்தில், 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள மண்டபப் பகுதியில் உள்ள கட்டடம் இடிந்துவிடாமல் இருக்க, இரும்பு முட்டு கொடுத்து வைத் துள்ளனர். மிச்சம் இருக்கும் பகுதியையும் இரும்பு முட்டுக் கொடுத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்தபிறகே மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணி தொடங்க உள்ளதாம்.

தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ஓர் ஆய்வுக் குழுவை அமைத்திருக்கிறார். அந்தக் குழுவினர் பிப்ரவரி 8 மற்றும் 18-ம் தேதிகளில் ஆய்வு செய்து, சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருப் பவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மண்டப இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட தூண்களைத் தொல்பொருள் துறையினர் ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தூண்சிற்பங்களும் உரிய முறையில்  பாதுகாக்கப்பட்டுள்ளனவாம்’’ என்ற நாரதரிடம் அடுத்த கேள்வியை முன்வைத் தோம்: ‘‘இப்போது எத்தனை பேர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்?’’

‘‘மிகக் குறைவான நபர்களே பணியில் ஈடுபட் டுள்ளனர்'' என்றவர் மேலும் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``தற்போது, சீரமைப்புக்காக 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால், முன்னதாகவே ரூ.10 லட்சம் செலவு செய்து முறைப்படி பராமரித் திருந்தால், இப்படியொரு விபத்தே ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். கோயில் நிர்வாகம் மிகவும் அலட்சியத்துடன் செயல் படுவதாக அதிகாரிகள் மட்டத்திலேயே பேச்சு அடிபடுவதையும் காணமுடிகிறது.

தற்போது பொதுப்பணித் துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். அதுகுறித்தும் அதிருப்தியைப் பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள்!''

‘‘ஆய்வுப்பணி குறித்து என்ன அதிருப்தி?''

``ஆய்வுக்குழுவில் கோயில் இணை ஆணையரும், கருமுத்து கண்ணனும் இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி, கோயில் தீ விபத்துக்கு அவர்களும் தான் காரணம். அப்படியிருக்க, அவர்களை ஆய்வுக் குழுவில் சேர்த்ததே பக்தர்களின் அதிருப்திக்குக் காரணம்!''  

நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...

‘‘சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரியிடம் பேசினீர்களா?’’

‘‘கோயில் பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். ‘இடிபாடுகளைச் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. ஆய்வுக்குழுவினரின் அறிவுறுத்தல்படி அனைத்துப் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தொழிலாளர் களுக்குத் தேவையான பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. மண்டபப் பகுதிகளை போட்டோ, வீடியோ மற்றும் ஓவியங்களில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மண்டபத்தின் அனைத்து அம்சங் களும் ஆவணப்படுத்தப்படும். அனைத்துப் பாதுகாப்பு விஷயங்களையும் கவனத்தில் கொண்டுதான் செயல்பட்டு வருகிறோம்’ என்று தெரிவித்தார்’’ என்ற நாரதர் சமூக ஆர்வலர்களது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘சமூக ஆர்வலர் காளமேகம் என்பவரிடம் பேசினோம். ‘கோயிலில் ஏற்பட்ட விபத்து வருத் தத்துக்குரிய விஷயம்தான். ஆனால், அதையே நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது. விரைவில் சித்திரைத் திருவிழா வரவிருக்கிறது. அதுகுறித்த முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டும்.  மற்றபடி, கோயில்பணியாளர்களிடம் விசாரித்த வரையில், பணிகள் விரைவாக நடந்துவருவதாகவே சொல்கிறார்கள்' என்றார். இவர் இப்படியென்றால் பேராசிரியர் அம்பை மணிவண்ணன் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துக்கொண்டார்'' என்ற நாரதர், அவர் கூறியதை விவரித்தார்.

`‘கோயில் என்பது வியாபாரம் செய்யும் இடம் கிடையாது. கடைகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்த்திருக்கலாம். கோயில் வருமானத்துக்காகக் கடைகளுக்கு இடம் கொடுத்திருந்தாலும், எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பிளாஸ்டிக் பொருள்கள் விற்கத் தடை விதித்திருக்க வேண்டும். இப்படி பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதேநேரம், அங்கே வியாபாரம் செய்துவந்த வியாபாரிகளின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான் மணிவண்ணனின் கருத்தாக இருக்கிறது'' என்று கூறிமுடித்த நாரதர், அடுத்து வியாபாரிகளின் கருத்தையும் விளக்கினார். 

‘‘வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துப்பாண்டி யிடம் பேசினோம். ‘வியாபாரிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் யாரும் கடை திறக்கவேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டனர். இது, சில நாள்களுக்கு மட்டும் தான் என்று நினைத்தோம். ஆனால், பிறகு கடைகளைத் திறக்கவே கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.

2010-ல் எங்களுக்காக ஒதுக்கப் பட்ட குன்னத் தூர் சத்திரத்தில் கடைகள் வைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தோம்.  ஆனால், தற்போது வரை அங்கே கடைகள் கட்டி எங்களுக்கு வழங்க வில்லை. அங்கு, கட்டடம் கட்டி முடிக்கும் வரை, வேறு எங்காவது இடம் கொடுக்கும்படியும் கேட்டோம். இதுதொடர்பாகப் பலமுறை அமைச் சர்களுக்கு மனு கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை’ என்று வருத்தத்துடன் கூறினார்’ என்று நாரதர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, அவருடைய போனில் மெசேஜ் டோன் ஒலிக்கவும், எடுத்துப் பார்த்துவிட்டு விவரம் எதுவும் சொல்லாமலே அந்தர்தியானமாகிவிட்டார்.

- உலா தொடரும்...

படங்கள்: ஈ.ஜே.நந்தக்குமார்