காலத்தால் தொன்மையானதும் புராணப் பெருமைகள் கொண்டதுமான திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் *பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் சிறப்பம்சம் ஒன்பதாம் நாளன்று (28.2.18) இரவில் நடைபெறும் `மகிழடி சேவை’ விழாதான்.

கயிலையில் தம்பிரான் தோழராக இருந்த ஆலால சுந்தரர், அங்கே நந்தவனத்தில் கமலினி, அனிந்திதை ஆகிய தேவப் பெண்களிடம் மோகம் கொண்ட கதையையும், அதன் காரணமாக ஆலால சுந்தரர் பூமியில் சுந்தரமூர்த்தி நாயனராக அவதரித்த கதையையும் அறிந்திருப்பீர்கள். கமலினி திருவாரூரில் பரவை நாச்சியாராகப் பிறந்திருக்க, அவரை சுந்தரர் மணந்துகொண்டார். பின்னர், திருத்தல யாத்திரை புறப்பட்ட சுந்தரர், திருவொற்றியூருக்கு வந்தார்.

அங்கே கோயிலின் அருகிலேயே கன்னி மாடத்தில் தங்கியிருந்து தியாகராஜப் பெருமானுக்கு திருத்தொண்டு ஆற்றிவந்த சங்கிலி நாச்சியாரைக் கண்ட சுந்தரர், அந்தப் பெண்ணே தேவமங்கை அனிந்திதை என்பதை அறிந்துகொண்டார். அவரை மணந்துகொள்ள ஈசனிடம் சென்று வழி கேட்டார். தோழமைக்குக் கட்டுப்பட்ட தியாகராஜப் பெருமானும் சங்கிலி நாச்சியாரின் கனவில் சென்று சுந்தரரின் விருப்பத்தினைச் சொல்லி மணந்துகொள்ளுமாறு ஆணையிட்டார். சங்கிலிநாச்சியாரோ, ‘ஏற்கெனவே மணமான சுந்தரரை எப்படி மணப்பது? என்னை விட்டு நீங்கிவிட மாட்டாரா?’ என்று ஐயம் கொண்டார். ‘திருவொற்றியூர் எல்லையை விட்டு நீங்க மாட்டேன் என்று என் முன்பு சத்தியம் வாங்கிக்கொள்’ என்று தீர்வு சொன்னார் சிவனார். அதன்படியே சங்கிலியாரும் சுந்தரரிடம் சத்தியம் செய்யும்படி கேட்டார். சுந்தரர் சிவனாரிடம் ஓடோடி வந்தார். ‘‘தலம்தோறும் சென்று தங்களைப் பாடும் இந்த அடியவன், இங்கேயே தங்க இயலுமா? அது எனது பிறப்பின் நோக்கத்தையே சிதைத்து விடுமே! அதனால், நான் சத்தியம் செய்யும் தருணத்தில் தாங்கள் கருவறையை விட்டு நீங்கி ஸ்தல விருட்சமான மகிழ மரத்துக்குச் சென்றுவிட வேண்டும். மற்றபடி சங்கிலியாரை ஏமாற்றும் நோக்கம் ஒன்றுமில்லை’’ என்று விண்ணப்பித்தார். அதற்கு ஒப்புக்கொண்ட சிவனார், அடுத்து என்ன செய்தார் தெரியுமா? சங்கிலியாரிடம் சென்று, “நீ சுந்தரனை மகிழ மரத்தடிக்கு அழைத்து வந்து சத்தியம் பெற்றுக்கொள்’ என்று கூறி தமது திருவிளையாடலைத் தொடங்கிவைத்தார்.

அப்படியே செய்தார் சங்கிலியார். சுந்தரரும் வேறுவழியின்றி ‘திருவொற்றியூர் எல்லையை விட்டும், உன்னை விட்டும் என்றும் பிரியேன்’ என்று வாக்குத் தந்து, மகிழ மரத்தை மும்முறை வலம் வந்து சங்கிலியாரை மணந்துகொண்டார்.

ஈசனுக்கே தங்களது வாழ்வினை தத்தம் செய்துகொண்ட அவர்களின் திருமணத்தின் சாட்சியாக அந்த மகிழமரம் இன்றும் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. சுந்தரர், சங்கிலி நாச்சியாரின் திருமணத்தையும், அதைத் தொடர்ந்து சிவபெருமான் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்யும் மகிழடி சேவையை யும் தரிசிப்பது பெரும் கொடுப்பினை. திருமண வரம் வேண்டும் அன்பர்கள் இந்த வைபவத்தைத் தரிசித்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பெரியோர் வாக்கு.

- மு.ஹரிகாமராஜ்,

படம் : எஸ்.ரவிகுமார்