`எட்டுக்கரமம்மா ஏழை துயர் தீர்க்கும்
எங்க கோட்டை மாரி பார்வை தானே காக்கும்
கொதிக்கும் அனல்கூட பூவாக மாறும்
கோட்டை மாரி அவ குணம் போல குளிரும்
கோரைப்பல்லு ரெண்டும் கொடியவரைத் தாக்கும்
நீரை நெருப்பாக்கி நேரம் பார்த்து முடிக்கும்...’

மாசிப் பெருவிழாவினையொட்டி அலங்காரத் திருக்கோலம் பூண்டிருந்த அந்த ஆலயத்தை நெருங்கும்போதே, கோட்டை மாரியம்மனின் புகழைச் சொல்லும் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. திண்டுக்கல்லின் காவல்தெய்வமாம் கோட்டை மாரியம்மன் குடியிருக்கும் கோயில்தான் அது.

திண்டுக்கல் மாநகரின் மணிமகுடமாகத் திகழ்வது பத்மகிரி மலையும் அதன்மீது அமைந்த கோட்டையும்தான். இந்தக் கோட்டைப்பகுதியில்தான் கோலாகலமாகக் கோயில் கொண்டு கொலுவீற்றிருக்கிறாள், கோட்டை மாரியம்மன்.

வலது காலை தொங்க விட்டு, இடது காலை மடக்கி, அமர்ந்த கோலத்தில் அருளும் அம்மையின் அறக்கருணையும் மறக் கருணை யும் மகத்துவமானவை! கோரைப்பற்களுடன் திகழும் இந்த அம்பிகை, காளிதேவியின் அம்சமாகவும் போற்றப்படுகிறாள்.

எட்டுத்திருக்கரங்களில் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம், அரிவாள், வில், மணி, குங்குமக் கிண்ணம் போன்றவற்றைத் தாங்கி அமர்ந்திருக்கிறாள் அன்னை. தீயசக்திகளை வேரறுத்து பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் அற்புதக் கோலம் இது என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

மதுரை நாயக்க மன்னர்களால் இந்தக் கோட்டை கட்டப்பட்டதாகவும், பின்னர் ஹைதர் அலி, திப்புசுல்தான் காலத்தில் இந்தக் கோட்டை முக்கியத்துவம் வாய்ந்த போர்ப் படை பயிற்சிக் களமாக இருந்ததாகவும் கூறப் படுகிறது.

திப்புசுல்தான் காலத்தில், இங்கே முகாமிட் டிருந்த அவருடைய படைவீரர்கள் இங்கு போர்ப் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப் படுகிறது. அப்போது, வீரர்களில் ஒருவருக்கு அம்மன் அருள் வந்ததாம். அவர் மூலம் கிடைத்த அம்பிகையின் அருள்வாக்குப்படி, இங்கே கோட்டை மாரியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். ஆரம்பத்தில், மண்ணாலான ஒரு பீடம் மட்டுமே இருந்து. பிற்காலத்தில் பலிபீடமும் சிறிய விக்கிரகமும் அமைத்து வழிபடத் தொடங்கினார்களாம்.

மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியர் காலத் தில் இங்கு ராஜராஜேஸ்வரி கோயில் ஒன்று வழிபாட்டில் இருந்ததாக வரலாறு சொல்கிறது. காலப்போக்கில் அந்தக் கோயில் சிதிலமுற்றுப் போக, இங்கு வந்து அமர்ந்தவள்தான் கோட்டை மாரியம்மன்.

ரேணுகாதேவியின் அம்சமான மாரியம்மன் ஈசனின் வாக்கின்படி மக்களைக் காக்க ஊர்தோறும் அமர்ந்து அருளாட்சி செய்யத் தொடங்கினாள். அப்படி பல தலங்களில் கோயில் கொண்ட மகமாயி, இங்கே படைவீரன் ஒருவன் மூலம் அருள்வாக்குச் சொல்லி, கோட்டையில் மட்டுமல்ல ஊர்மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் கோயில்கொண்டுவிட்டாள்!

பூமியில் அழுந்தி காணப்படும் இந்த அம்ம னின் விக்கிரகத் திருமேனி, தரிக்கும் அடியார் களின் பாவங்களை எல்லாம் நொடிப்பொழுதில் அழிப்பதுடன், புண்ணிய பலன்களை வாரி வழங்க வல்லது என்று சிலிர்ப்புடன் சொல் கிறார்கள் பக்தர்கள். அதுமட்டுமா? குழந்தை வரமருளும் தேவியாகவும் திகழ்கிறாள் கோட்டை மாரியம்மன்.

சரித்திரச் சிறப்பு நிறைந்த இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் கொடிக்கம்பமும், உள்ளே அம்மன் சந்நிதியை அடுத்து தெற்குப் புறத்தில் விநாயகர் சந்நிதியும், வடக்குப்புறத்தில் மதுரை வீரன் சந்நிதியும் அமைந்துள்ளன. கருப்பண்ண சாமி, முனியசாமி, நவகிரக மூர்த்தியர் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உண்டு.

உப்பு - மிளகுக் கொட்டுவது, தீச்சட்டி ஏந்துவது, பூக்குழி இறங்குவது, கரும்புத் தொட்டில் சுமப்பது, மாவிளக்கு வழிபாடு என இங்கு நடைபெறும் எல்லா பிரார்த்தனைகளும் மெய்சிலிர்க்க வைப்பவை.

ஆடி மாத ஞாயிறுகளில் இங்கு 5 லட்சம் பக்தர்கள் திரளுவார்களாம். அதேபோல், மாசித் திருவிழாவும் மிகப் பிரசித்தம். 20 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொண்டு, தன்னை மனதார வேண்டும் பக்தர்களுக்கு, அவர்கள் கேட்டதையெல்லாம் மகிழ்வோடு கொடுப்பாள் கோட்டை மாரி என்பது பக்தர் களது அசைக்கமுடியாத நம்பிக்கை.

இந்த விழாவுக்கான கொடியேற்ற வைபவத் தின்போது, பெண்கள் ஒன்றுகூடி நீர் அபிஷேகம் செய்வது வழக்கம். இதனால் கோட்டை மாரி மனம் குளிர்ந்து எல்லோருக்கும் நன்மை செய்வாள் என்பது ஐதீகம். அதேபோல் மண்டகப்படி விழா, பூக்குழி வைபவம், தசாவதார விழா, ஊஞ்சல் உற்சவம், தெப்போற் சவம் ஆகிய விழா வைபவங்கள் அனைத்தும் அவசியம் தரிசிக்கவேண்டிய அற்புதங்கள்!

இந்த ஆண்டு 15.2.18 அன்று தொடங்கிய மாசித் திருவிழா 6.3.18 வரை நடைபெறுகிறது. நீங்களும் விழாவுக்குச் சென்று வாருங்கள்; கோட்டை மாரியைத் தரிசித்து வேண்டும் வரங்களைப் பெற்று வாருங்கள்!