Published:Updated:

சப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி

சப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி
பிரீமியம் ஸ்டோரி
சப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி

பேரும் புகழும் தரும் புனர்பூசம்!தொகுப்பு: மு. இராகவன் - படங்கள்: க. சதீஷ்குமார்

சப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி

பேரும் புகழும் தரும் புனர்பூசம்!தொகுப்பு: மு. இராகவன் - படங்கள்: க. சதீஷ்குமார்

Published:Updated:
சப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி
பிரீமியம் ஸ்டோரி
சப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி

யோத்தி- ராமபிரானின் அவதார திருத்தலம். திரேதா யுகத்தில் கோசல தேசத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர். ராம பக்தர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்கத் துடிக்கும் க்ஷேத்திரம்.

உத்திரபிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தி முதலாக தமிழகத்தின் ஆறு தலங்களைச் சேர்த்து சப்தராம திருத்தலங்களாகச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். ராமநவமி சிறப்பு தரிசனமாக, தமிழகத்தின் அந்தத் திருத்தல மகிமைகள் இந்த இதழில்...  

சப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி

காவிஷ்ணு வாமனராக அவதரித்து மகாபலியிடம் மூன்றடிகள் யாசித்து, திரிவிக்ரமனாகி மண்ணையும் விண்ணையும் அளந்த பிறகு, மூன்றாவது அடியை மகாபலியின் சிரத்தில் வைத்து அவரைப் பாதாள லோகத்துக்கு அனுப்பிய திருக்கதையை அறிவோம்.

அப்படி, அவர், இரண்டாவது அடியை எடுத்துவைக்கும் கோலத்தைக் காஞ்சி ஸ்ரீஉலகளந்த பெருமாள் கோயிலிலும், 3-வது அடிக்கு இடம் எங்கே என்று கேட்கும் கோலத்தைத் திருக்கோவிலூரிலும் தரிசிக்கலாம். பகவான், முதலடியை அளக்கத் தமது இடது திருவடியைத் தூக்கியநிலையில் அருளும் தலம்தான் சீர்காழியில் அமைந்துள்ள திருக் காழிச்சீராம விண்ணகரம். விஸ்வாமித்திரரின் வேண்டுகோளை ஏற்று அவரது யாகத்தைப் பாதுகாக்க ராம-லட்சுமணர்கள் எழுந்தருளிய இடம் இது என்பது கூடுதல் சிறப்பு.

அதேபோல், இலங்கைக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் ராமன் மூன்று நாள்கள் தங்கியிருந்தார் என்பர். தெற்கு நோக்கிய சந்நிதியில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள்.  

சப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி

‘‘இங்கு வந்து பெருமாளைத் தரிசித்து வழிபட்டால் நீண்ட ஆயுள், வேலையில் முன்னேற்றம், உயர் பதவி ஆகியன வாய்க்கும். அனைத்துக்கும் மேலாக மறுபிறப்பில்லாத முக்தியும் கிடைக்கும். தொடர்ந்து ஒன்பது வெள்ளிக் கிழமைகள் கோயிலுக்கு வந்து  தாயாரை வழிபட்டால், வறுமைகள் நீங்கும்; சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறிய பின்னர், தாயாருக்குப் பட்டுப் புடைவை சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள் பக்தர்கள்’’ என்கிறார் கோயிலின் பத்ரிநாராயண பட்டாசார்யர்.

புனர்பூசம் நட்சத்திர நாளில் இந்தக் கோயிலுக்கு வந்து, ராமபிரானுக்குத் திருமஞ்சனமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் குழந்தை பாக்கியம்  கிடைப்பதுடன், திருமணத் தடையும் அகலும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

திருமங்கையாழ்வார், நாதமுனிகள், உடையவர், மணவாள மாமுனிகள் ஆகியோர் போற்றிச் சிறப்பித்த திருத்தலம்.கோயிலின் தல விருட்சம் பலா மரம். இக்கோயில், பரம்பரை ஆதீனம் கோயில் கந்தாடை சண்டமாருதம் தொட்டை யாசார்ய மகாசார்ய வம்சத்தினரால் நிர்வாகம் செய்யப்படுகிறது.

‘‘ராமநவமி பிரம்மோற்சவம், அனுமன் ஜயந்தி, நவராத் திரி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும். தெற்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் தலத்து ராமரை வாழ்வில் ஒருமுறையேனும் வந்து வணங்கினால் எல்லா வளங்களையும் பெறலாம்’’ என்றார் சந்தான பட்டாசார்யார்.

நாமும் வரும் ராமநவமியன்று காழிச்சீராம விண்ணகரத்து ஸ்ரீராமனைத் தரிசித்து வழிபட்டு வரம்பெற்று வருவோம்.

எப்படிச் செல்வது?: சிதம்பரத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது சீர்காழி. ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு.

நடை திறந்திருக்கும் நேரம்: 
காலை 7.30 முதல் 11.30 மணி வரை; மாலை 5.00 முதல் 8.30 வரை.