Published:Updated:

‘மனதுக்கு மாமருந்து!’

‘மனதுக்கு மாமருந்து!’
பிரீமியம் ஸ்டோரி
‘மனதுக்கு மாமருந்து!’

‘மனதுக்கு மாமருந்து!’

‘மனதுக்கு மாமருந்து!’

‘மனதுக்கு மாமருந்து!’

Published:Updated:
‘மனதுக்கு மாமருந்து!’
பிரீமியம் ஸ்டோரி
‘மனதுக்கு மாமருந்து!’
‘மனதுக்கு மாமருந்து!’

திரு விளக்கு பூஜை, புற இருளை மட்டுமின்றி நம் அகமாகிய உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அஞ்ஞான இருளையும் விரட்டி, மெய்ஞ்ஞான ஒளியேற்றும் அற்புத வழிபாடு என்பது பெரியோர் வாக்கு.  

அவ்வகையில், உலக நன்மைக்காகவும் நம் வாசகியரின் குடும்பங்கள் சகல வளங்களோடு செழித்தோங்க வேண்டியும், புராணச் சிறப்புமிக்க பல திருக்கோயில்களில் சக்தி விகடன் சார்பில் திருவிளக்குப் பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்று வந்ததை அறிவீர்கள்.  

‘மனதுக்கு மாமருந்து!’

அதன்படியே கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி,  வெள்ளிக்கிழமை அன்று, புதுச்சேரி மாநகரில் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயி லில், சக்தி விகடனும் ‘ஸ்ரீ’ தீபம் ஆயில் நிறுவனமும் இணைந்து நடத்திய திருவிளக்குப் பூஜை மிக அற்புதமாக நடந்தேறியது.

திருவிளக்குப் பூஜையை ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனின் மனைவி விமலா லட்சுமி நாராயணனன் விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ‘‘பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் துயரங்களிலிருந்து விடுபட திருவிளக்கு பூஜையே சிறந்த வழிபாடு” என்று திருவிளக்குப் பூஜையின் சிறப்புகளை விவரித்து வழிபாட்டை நடத்திவைத்தார் அரசு குருக்கள்.

‘‘திருவிளக்குப் பூஜை வெறும் வழிபாடு மட்டுமல்ல, மன அழுத்தங்களைப் போக்கும் அருமருந்தும்கூட. மன அமைதியைத் தரும் திருவிளக்குப் பூஜையை சக்தி விகடன் அடிக்கடி நடத்தவேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார் பவழநகர் வாசகி சுஜாதா. 

‘மனதுக்கு மாமருந்து!’

“வேதபுரீஸ்வரர் கோயிலில் இப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் சக்தி விகடனின் விளக்குபூஜை நடைபெறப்போகிறது என்ற அறிவிப்பைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம் எனக்கு. மிக அற்புதமான வாய்ப்பாயிச்சே! செஞ்சி, திருவண்ணாமலையில் இருக்கும் என் சகோதரிகளுக்காகவும் முன்பதிவு செய்து, அவர்களையும் வரவழைத்துவிட்டேன்.

 என் இளைய மகளுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தீராத வயிற்றுவலி இருந்தது. என்ன மருத்துவம் செய்தும் பலனில்லை. சில வருடங்களுக்கு முன் புதுச்சேரி லாஸ்பேட்டையில் நடந்த விளக்குப் பூஜையில் கலந்துகொண்டு என் மகளுக்காக வேண்டிக்கொண்டேன். இப்போது மகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தொடர்ந்து அவள் நல்லபடியா ஆரோக்கியத்தோடு தீர்க்காயுளோடு வாழணும்னு வேண்டிக்கிட்டேன்’’ என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் லாஸ்பேட்டையைச் சேர்ந்த சுமதி.

இவரைப்போன்றே இன்னும்பல வாசகியரும் தங்களது நன்றி பாராட்டுதலையும் வேண்டுதல் களையும் பகிர்ந்துகொண்டனர். அனைவரது வேண்டுதல்களையும் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மையும், ஐயன் ஸ்ரீவேதபுரீஸ்வரரும் நிச்சயம் நிறைவேற்று வார்கள். அம்மையப்பனின் அருளொளியால் வாசகியரின் இல்லங்களில் நிம்மதி நிறையட்டும்!

- ஜெ.முருகன், படங்கள்: சி.தேவராஜன்