Published:Updated:

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

கோட்டோவியங்களில் கோயில்கள்...பிரேமா நாராயணன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

கோட்டோவியங்களில் கோயில்கள்...பிரேமா நாராயணன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

‘`நான் எட்டாவது படிச்சப்போ, எங்கப்பா வாங்கி வரும் கல்கி தீபாவளி மலரில் ஓவியர் ஷில்பியின் கோட்டோவியங்களைப் பார்த் துத் தொடங்கியதுதான், கோயில்களை வரையும் என் ஆர்வம்.  

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

இயல்பாவே நல்லா ஓவியங்கள் வரைவேன் என்றாலும், கோயில்களின்மீதும் கோபுரங்களின்மீதும் ஆர்வம் வந்தது, இறையருள் ஓவியர் சில்பியின் ஓவியங்களைப் பார்த்த பிறகுதான். அவரது ஓவியங்களில், தெய்வச் சிற்பங்களில் திகழும் நுணுக்கமான வேலைப் பாடுகள், அழகு மிளிரும் கோபுரங்கள் என எல்லாவற்றின் மீதும் அப்படி ஓர் ஈர்ப்பு. அவர் வரையுறது மாதிரியே பென்சிலில் வரைஞ்சு பார்ப்பேன். அந்தக் கோட்டோ வியம்தான் என் வாழ்க்கையின் உயிரோட்டமா மாறும்னு அந்த வயசில் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை!’’ - கிளிப்பச்சை கரை கொண்ட ஆழ் நீல நிறப்புடவையை நீவியபடியே, பிரகாசமான புன்னகையுடன் பேசுகிறார் பிரியா நடராஜன். 

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரியாவின் வீட்டுக்குள் நுழைந்தால், தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், பூரி ஜகந்நாதர் கோயில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் என அனைத்துக் கோயில்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். அவை அனைத்தும் பிரியாவின்  `பென்அண்டு இங்க்’ கோட்டோவியத்தில் கண்முன்னே உயிர்பெற்று நிற்கின்றன.

‘`ஓவியத்துக்குனு எந்த கோர்ஸும் படிக்கல. பி.எஸ்சி - நியூட்ரிஷன் அண்டு டயட்டிக்ஸ் பட்டதாரி நான். டிகிரி முடிக்கிறதுக்கு முன்னாடியே கல்யாணம். கல்யாணத்துக்கப்புறம் பிஜி பண்ணினேன். ஆனாலும் நான் படிச்ச துறையில் வேலைக்குப் போறதைவிட, 13 வயதில் நான் வரைய ஆரம்பிச்ச ஓவியம்தான் எனக்கு மனசுக்கு ரொம்ப ஈர்ப்பாகவும் நிறைவாகவும் இருந்தது. கணவர் நடராஜன், ‘உனக்கு எது பிடிக்குதோ அதச்  செய்’னு சொல்லிட்டார். ஆனால், குழந்தை காவ்யா பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாள் வரையாமல் விட்டுட்டேன். அவ கொஞ்சம் வளர்ந்ததும் திரும்பவும் ஆரம்பிச்சிட்டேன்’’ என்று கூறும் பிரியாவுக்கு, கணவர் மட்டுமல்ல மாமியார் மாமனாரும் மிகவும் உற்சாகம் தந்து ஊக்குவிக்கிறார்கள்.  

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

‘‘கொஞ்சநாள் ஓர் ஓவியர் கிட்டே போய் அக்ரிலிக் கலர்ஸ், போஸ்டர் கலர் பெயின்டிங் நுணுக்கங்களை எல்லாம் ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் அவற்றையெல்லாம்விட வெறும் கறுப்பு இங்கில் வரையும் அழகே தனி! ஒவ்வொருமுறை கோயில்க ளுக்குச் சென்றுவரும் போதும், அந்தக் கோபுரங்களையெல்லாம் போட்டோ எடுத்துக்கிட்டும் ரஃப் ஸ்கெட்ச் போட்டுக்கிட்டும் வருவேன். வீட்டுக்கு வந்ததும் நிதானமா வரைவேன்.

அப்படி நான் வரைஞ்ச ஓவியங்களையெல்லாம் சேர்த்து 1994-ல் ஒரு குரூப் ஷோவில் கண்காட்சியாக வைச்சேன். நிறையப் பாராட்டுகள் கிடைத்தன. குறிப்பா, ஆளுயர சைஸ் சார்ட் பேப்பர்ல நான் வரைஞ்சு எடுத்துட்டுப் போயிருந்த தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம், விழாவின் ஹைலைட்டா அமைந்தது. அதுக்கப்புறம் முழுக்க முழுக்கக் கருப்பு - வெள்ளை கோட்டோவியங்களில் என் முழுக் கவனத்தையும் செலுத்தினேன்.  

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

தொடர்ந்து நிறைய கோயில்களுக்குப் போக ஆரம்பிச்சேன். தஞ்சாவூர் போன்ற பழங்காலக் கோயில்கள், கோவா தேவாலயங்கள், மசூதிகள், பண்பாட்டுச் சின்னங்கள்னு எல்லாத்தையும் வரைந்தேன்.

கடவுள் அருளால் ‘பெர்ஸ்பெக்டிவ்’ எனப்படும் ‘பரப் பார்வை’ ஓவியங்கள், எனக்கு நல்லாவே வரைய வந்தன. எவ்வளவு சின்ன சைஸ் போட்டோவைக் கொடுத்தாலும், அதைப் பெரிய டைமன்ஷனில் என்னால் வரைய முடியும். ஸ்கேல் மற்றும் ஜியோமெட்ரி உபகரணங்கள் எதையும் பயன்படுத்துறதில்லை. அதேபோலக் கோட்டோவியங்கள் வரையுறதுக்கு, எத்தனை நவீனமான பேனாக்கள் வந்தாலும், `இந்தியன் இங்க்'-ஐத் தொட்டு வரையறதில் இருக்கும் அழகும் ஆழமும் வேறு எதிலும் வர்றதில்லை’’ என்கிறார் பூரிப்போடு. 

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

‘`அப்போதெல்லாம் காலரிகள் கிடையாது. விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில்தான் என் படங்களைக்கொண்டுபோய்க் கொடுப்பேன். ‘ஃபாரினிலிருந்து வர்றவங்களுக்கு இந்த டைப் ஆர்ட்தான் பிடிக்குது’னு சொல்லி அவங்க நிறைய ஆர்டர் கொடுப்பாங்க. என்னோட கோபுரக் கோட் டோவியங்களைப் பார்த்துட்டு, ‘கோயிலில் இருக்கும் ஃபீல் கிடைக்குது’ன்னு  நிறையபேர் சொல்லியிருக்காங்க. கோட்டோவியங்கள் வரையறதுக்குப் பொறுமையும் கவனமும் அவசியம். ஒரு கோடு தப்பாப் போட்டாக்கூட அதை அழிக்க முடியாது’’ என்ற பிரியா தனது  ஓவியங்களைக் காண்பித்தார்.

மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தைப் பார்க்கும் போது, நாமே அந்தப் படிகளில் சென்று உட்கார்ந்துவிடத் தோன்றுகிறது. அந்த அளவுக்குத் தத்ரூபமாகத் திகழ்கிறது. இப்படியான நேர்த்தி, அனைத்து ஓவியங்களிலுமே மிளிர்கின்றன.  

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

‘‘இதுவரை நூற்றுக்கணக்கான கோயில்களையும் கோபுரங்களையும் வரைஞ்சிருக்கேன். ஆனாலும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் என் மனசுக்கு நெருக்கமானவை. அவற்றின் அழகும் பிரம்மாண்டமும் என் கண் களிலும் மனசிலும் பதிஞ்சுபோனவை! எந்த ஷோன்னாலும் எல்லாப் படங் களையும் பார்த்துட்டுக் கடைசியா பெரிய கோயில் படம்தான் கேட்பாங்க. அந்தளவுக்குப் பிரியான்னா பிரகதீஸ்வரர் கோயில்தான் அடையாளம்’’ என்ற பிரியாவை இடைமறித்துக் கேட்டோம்.

‘`அடுத்து என்ன..?”

‘`வட இந்தியாவில், போக முடியாத சில கோயில்களுக்கெல்லாம் போய், வித்தியாசமான அந்தக் கட்டடக் கலை யையும் அழகையும் என் கோட்டோவி யத்தில் கொண்டுவரணும். மகிழ்ச்சி யான குடும்பச் சூழல் இருந்தால் எதுவுமே சாத்தியம்தான். எனக்கு அமைஞ்ச மாதிரி பெற்றோர், கணவர், புகுந்த வீடுனு எல்லாருமே சப்போர்ட் டிவ்வா, சந்தோஷமா அமைஞ்சா எந்தப் பெண்ணுமே சாதிக்க முடியும்’’ என்கிறார் நிறைவான புன்னகையுடன் அந்த ஓவிய தாரகை!

‘பெரிய கோயிலே எனது அடையாளம்!’

சிறப்புக் குழந்தைகளுக்கு ‘ஆர்ட் தெரபி’!

பி
ரியா நடராஜனின் வலைதளத்தைப் பார்த்து, அயல்நாட்டினர்  பலரும் கோயில் மற்றும் சிற்பங்களை வரைந்து தரச்சொல்லி அவரிடம் கேட்கிறார்கள். சிலர் அவர்களின் சொந்த ஊர்க் கோயிலை போட்டோ எடுத்து அனுப்பி, அதைக் கோட்டோவியமாய் வரைந்து தரக் கேட்கிறார்களாம். 20 வருடங்களாகக் குழந்தைகளுக்காக ‘லிட்டில் ஸ்டூடியோ’ என்ற பெயரில் ஆர்ட் ஸ்கூல் ஒன்றை நடத்துகிறார் பிரியா. அவர்களின் படைப்புகளை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கண்காட்சியாகவும் வைக்கிறார். கூடிய விரைவில் இல்லத்தரசிகளுக்காகவும் வகுப்புகளைத் தொடங்கவிருப்பதாகச் சொல்பவர், சிறப்புப் பள்ளி ஒன்றில் சிறப்புக் குழந்தைகளுக்காக ‘ஆர்ட் தெரபி’ வகுப்புகளும் எடுக்கிறார்.

வின்யாஸா கேலரியில், தன்னுடைய சிறந்த 85 படைப்புகளுடன் பிரியா நடத்திய கண்காட்சிக்குத் தோட்டாதரணி, அச்சுதன் போன்ற பிரபல கலைஞர்கள் வந்து பாராட்டியதைப் பெருமையுடன் குறிப்பிடுபவர், மகா பெரியவர், ரமணர், சாய்பாபா, பாண்டிச்சேரி அன்னை, சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்களின் போர்ட்ரெய்ட்களையும் மிக அழகாக வரைந்துள்ளார்.