Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மார்ச் 27 முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மார்ச் 27 முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்மேஷம்

ரா
சிக்குள் சுக்கிரன் நுழைந்திருப்பதால் சோர்வு நீங்கி, புத்துணர்வு பிறக்கும். திடீர் யோகமும் எதிர்பாராத பணவரவும் உண்டு. உங்களது ரசனைக்கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். வாகனப் பழுதுகள் நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் உண்டு. ஆபரணங்கள் சேர்க்கையுண்டு. புதன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால், பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து அன்பு பாராட்டுவார்கள்.

மனதுக்கு இதமான செய்திகள் வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குரு சாதகமாக இல்லாததால், எவரையும் எதற்காகவும் பரிந்துரை செய்யவேண்டாம். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் லாபம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவோடு நடந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. சக ஊழியர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். கலைத் துறையினர், தங்களுடைய திறமை களை வெளிப்படுத்த போராட வேண்டியிருக்கும்.

திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

பு
தனும், சூரியனும் 11-ம் வீட்டில் நிற்பதால், சுபநிகழ்ச்சிகளில் மதிக்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். உங்கள்மீது வருத்தத்தில் இருந்த பெற்றோர், இனி உங்களைப் புரிந்துகொள்வார்கள். சிலருக்கு, புதிய நட்பு வாய்க்கும்; அதனால் ஆதாயமும் உண்டு. ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பயணங்கள் சிறப்பாக அமையும். அஷ்டமத்துச்சனி தொடர்வதால், அவ்வப்போது வீண் பிரச்னைகள் தலைதூக்கக்கூடும். ஆகவே, அடுத்தவர்கள் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். சுக்கிரன் 12-ம் வீட்டில் நுழைந்திருப் பதால், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள்.

குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளாதீர்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். வியாபாரத்தில், எதிர்பார்த்தபடி பற்று-வரவு உயரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களது ஆலோசனைக்கு மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும்.

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நேரம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்மிதுனம்

சூ
ரியனும், புதனும் வலுவாக இருப்பதால், இதுவரையிலும் தள்ளிப்போய்க் கொண்டிருந்த சவாலான பல விஷயங்களைச் சாமர்த்தியமான பேச்சால் உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்குப் புது வேலை அமையும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். மகனை விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். சிலர், புது வீடு கட்டி குடிபுகுவார்கள்.

சுக்கிரன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் சில அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் மீது வீண் பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் தருணம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

பு
தன் சாதகமாக இருப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பெற்றோரின் உடல் நலம் சீராகும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், தந்தைக்குக் கை-கால் வலி வந்துபோகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். 6-ம் வீட்டில் சனி வலுவாக இருப்பதால், பிரபலங்களின் உதவிகள் கிடைக்கும்.

அரசு காரியங்கள் வெற்றியடையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தி யமாக விற்றுத் தீர்ப்பீர்கள். கூட்டுத்தொழில் செழிக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்களுடன் இருந்துவந்த மோதல்கள் விலகும். கலைத் துறையினர் வீண் வதந்திகளிலிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது.

தன்னம்பிக்கையால் வெல்லும் வேளை இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்சிம்மம்

 சூ
ரியனும் புதனும் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் திடீர்ப் பணவரவு உண்டு. வெளியூர்ப் பயணங்களும் அவற்றால் ஆதாயமும் உண்டாகும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.  அதன்மூலம், இதுவரையிலும் தடைப்பட்டிருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 9-ம் வீட்டுக்குச் செல்வதால் புகழ், கௌரவம் உயரும். பழுதான ஆடியோ, வீடியோ சாதனங்களை மாற்றுவீர்கள். சிலருக்கு, அயல்நாடு செல்வதற்கு விசா கிடைக்கும்.

4-ம் வீட்டில் நீடிக்கும் குருவால் வீண் அலைச்சல் உண்டாகும். 5-ம் வீட்டில் செவ்வாய் மற்றும் சனி பகவான் நிற்பதால், அவ்வப்போது பிள்ளைகள் பற்றிய கவலைகள் வந்துபோகும். சகோதரர்களால் செலவுகளும் அலைச்சல்களும் அதிகரிக்கும். வீடு-மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்குவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி, ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு வேண்டாம்; அவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள்.

கடின உழைப்பால் சாதித்துக் காட்டும் நேரம் இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

ரா
சிநாதன் புதன் ராசியைப் பார்ப்பதால் அரசால் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வி.ஐ.பி-க்களால் ஆதாயம் அடைவீர்கள். சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், திடீர்ப் பணவரவு உண்டு. திருமணம், கோயில் விசேஷங்கள் ஆகியவற்றை முன்னின்று நடத்துவீர்கள். சிலருக்குப் புதிய வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக்கடன் கிடைக்கும். புதிதாக வெள்ளிப் பாத்திரங்கள் வாங்குவீர்கள்.

4-ம் வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருப்பதால், உங்களைப் பற்றிய விமர்சனங்கள் எழும். எனினும் அதற்காக வருத்தபட வேண்டாம். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. குரு 3-ம் வீட்டில் நிற்பதால், காரியத்தடைகளும், மன உளைச்சலும் வரக்கூடும்.  சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களைச் சுமுகமாகக் கையாளுங்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் தள்ளிப்போகும்.

வேலைச்சுமை அதிகரிக்கும் தருணம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்துலாம்

சூ
ரியன் 6 - ம் வீட்டில் வலுவாக இருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். மூத்த சகோதரர் வகையில் நன்மை உண்டு. ஆனால், புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், தந்தையின் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. இதுவரை 6-ம் வீட்டிலிருந்து பலவிதமான அவஸ்தைகளை அளித்துவந்த சுக்கிரன், இப்போது 7-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குடும்பத்தில் அமைதி திரும்பும். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் தளரும்.

2-ம் வீட்டில் குரு வலுவாக இருப்பதால், முடியுமா முடியாதா என்றிருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத் தில் அலைச்சல் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத் துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் இருக்கும்.

காரிய ஸித்தியும் அதனால் மகிழ்ச்சியும் நிறைந்த காலம் இது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

கே
து வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். சாதுக்கள், ஆன்மிகப் பெரியோரைச் சந்திப்பீர்கள்.

சுக்கிரன் 6-ம் வீட்டில் நுழைந்திருப்பதால், உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.  கணவன்-மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களும், அதனால் மனஸ்தாபமும் ஏற்படலாம். ஆகவே, இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும்; பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால், வாகனத்தில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும் கவனம் தேவை. ஜென்ம குருவால் தேவையற்ற மன உளைச்சல், காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். எனினும், வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில், தலைமையின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களைத் தேடி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.

சமயோசித புத்தியால் சாதிக்கும் நேரம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்தனுசு

பு
தன் 4 -ம் வீட்டில் நிற்பதால், தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால், அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். தந்தையின் உடல்நலம் சீராகும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். சுக்கிரன் பூர்வ புண்ணிய வீடான 5-ம் வீட்டில் நுழைந்திருப்பதால், மன அமைதி கிடைக்கும். வீடு கட்டுவதற்கு, நீங்கள் எதிர்பார்த்தபடி வங்கிக்கடன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும்.

குரு 12-ம் வீட்டில்  மறைந்திருப்பதால், யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வசூலாகாமலிருந்த பாக்கிகள் வசூலாகும். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றி அமைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். மேலதிகாரி பாராட்டும்படியாக நடந்துகொள்வீர்கள். கலைத் துறையினருக்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

வெற்றிக்கனியைப் பறிக்கும் வேளை இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

சூ
ரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிள்ளைகளின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும்.  வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நட்புவட்டம்  விரிவடையும். சுக்கிரன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். நல்ல வரன் அமையும்.

தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். செவ்வாயும், சனியும் 12-ம் வீட்டில்  மறைவதால், சகோதரர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும், எடுத்துவைக்க முடியாதபடி செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களால் ஆதாயம் அடைவார்கள்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் தருணம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன்கும்பம்

சு
க்கிரன் 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வருங்காலத்தை மனதில்கொண்டு முக்கியத் திட்டங்களைத் திட்டுவீர்கள். பழுதடைந்த வாகனத்தைச் சீர்செய்வீர்கள். வராது என்றிருந்த பணம் வந்துசேரும். கணவன், மனைவிக்கிடையே இதுவரையிலும் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும்; அந்நியோன்யம் உண்டாகும். சூரியன் 2-ம் வீட்டில் தொடர்வதால், சிலநேரங்களில் கண் வலியும் ஒற்றைத் தலைவலியும் வந்து நீங்கும். 10-ம் வீட்டில் குரு தொடர்வதால், எவருக்கும் எதன்பொருட்டும் வாக்குறுதி தர வேண்டாம்.

வியாபாரம் எதிர்பார்த்தபடி சூடுபிடிக்கும். அவ்வப்போது மாறிவரும் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடுகளைச் செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவேண்டிய காலம் இது. அனைத்து விஷயங்களிலும் முனைப்புடன் செயல்படவேண்டும். முக்கியப் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவேண்டாம். அடிக்கடி விடுப்பில் செல்வதையும் தவிர்க்கவும். சிலருக்கு, உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வசதி-வாய்ப்புகள் உயரும்.

தன்னடக்கத்தால் தடைகளைத் தாண்டும் நேரம் இது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

செ
வ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால், புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சூரியன் ராசியிலேயே நிற்பதால் முன்கோபம், வீண் வாக்குவாதம், சிறுசிறு நெருப்புக் காயங்கள் வரக்கூடும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். சுக்கிரன் 2-ம் வீட்டில் அமர்வதால் தோற்றப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குருவும் சாதகமாக இருப்பதால் புதிய சிந்தனைகள் மேலோங்கும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களால் சின்னச்சின்ன சங்கடங்கள் வந்து போகும். உத்தியோகத்தில், சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். முக்கியப் பொறுப்புகள் தேடிவரும். கலைஞர்கள், சிறிய வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

அமைதி காக்கவேண்டிய வேளை இது.