Published:Updated:

சகலமும் சாயி!

சகலமும் சாயி!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி!

சகலமும் சாயி!

சகலமும் சாயி!

சகலமும் சாயி!

Published:Updated:
சகலமும் சாயி!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி!

`பக்தர்களுக்காகத் துடிக்கும் பாபாவின் இதயம் !'

- என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை -

நா
ன் என் மனைவி மற்றும் மகன் மூவரும் 2005-ம் ஆண்டு குடும்பத்துடன் ஷீர்டிக்குச் சென்றோம். மகனுக்கு அப்போது பத்து வயது. ஷீர்டியை நாங்கள் நெருங்குவதற்குள் மகனுக்கு நல்ல காய்ச்சல். காலையிலிருந்து அவன்  எதுவுமே சாப்பிடவில்லை. ஒரே குமட்டல், வாந்தியாக இருந்தது. வயிற்றில் எதுவும் தங்கவில்லை. மிகவும்  சோர்ந்துவிட்டான். பயணித்துக்கொண்டிருந்த எங்களுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. பாபாவை தரிசிக்க வந்த நேரம் இப்படியாகிவிட்டதே என மிகவும் கவலையாக இருந்தது. கைவசம் மாத்திரை எதுவும் இல்லை. பாபாவை மனதார வேண்டிக்கொண்டோம். 

சகலமும் சாயி!

நாங்கள் சென்ற பேருந்து ஓரிடத்தில் நின்றது. எங்களிடம் பெரியவர் ஒருவர் வந்து, ‘`அதோ அந்தக் கடையில் விற்கப்படும் உலர்ந்த திராட்சையை வாங்கி இவனுக்குத் தாருங்கள்’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து போய்விட்டார்.

திராட்சையை வாங்கி வந்து இரண்டிரண்டாக அவனுக்குத் தந்தேன். அதுவரை, ‘எதையுமே வேண்டாம்’ என்று சொன்னவன் திராட்சையை விரும்பிச் சாப்பிட்டான். குமட்டல் நின்றுவிட்டது. திராட்சையைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுத்  தூங்கிவிட்டான். ஷீர்டி சென்றதும் நேராக தரிசனத்துக்குப் போனோம். கண்களைத் திறந்து அவன் பாபாவைப் பார்த்து வணங்கினான். என்ன ஆச்சர்யம்... அந்தக் கணம் முதல், அவனுக்குள் ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டது. அவனுக்குக் காய்ச்சல் குறைய ஆரம்பித்தது. கேன்டீனில் பால் தந்தனர். அதைப் பருகினான். பாபாவின் ‘உதிபிரசாத’த்தை நெற்றியிலிட்டுக் கொண்டு வாயிலும் போட்டு சிறிதளவு சாப்பிட்டவுடன் காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் போனது. அதன் பிறகு அங்கிருந்த உணவு விடுதியில் இட்லி சாப்பிட்டான். பழையபடி தெளிந்துவிட்டான்.

மனதார வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்ற, சமாதியடைந்த பின்னும் பாபாவின் இதயம் தன் பக்தர்களுக்காக இன்னும் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது. தன் பக்தர்களைத் தேடிச்சென்று பார்க்கிறார். அடைக்கலம் தேடி வருபவர்களிடம் உரையாடுகிறார். அவர்களின் துயர் துடைக்கும் அற்புதங்களை நடத்துகிறார் பாபா. இது சத்தியம். இன்றும் எங்கள் இல்லத்தில் பாபா பிரசாதம் உலர் திராட்சைதான்!

`பாபாவின் அருளே துணை!'

- கனகா, சென்னை -

ன்னை நாடி வரும் பக்தர்கள் வாழ்வில் பாபா நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம்! அதுபோன்ற அதிசயங்கள் அவரவர் வாழ்வில் நிகழும்போதுதான் அவற்றின் மகிமையை முழுமையாக உணர முடியும். என் வாழ்வில் நடந்ததைச் சொல்கிறேன்.  

சகலமும் சாயி!

சென்னை, ஈஞ்சம்பாக்கம் பாபா கோயிலுக்குப் போயிருந்தேன். மகனுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று பாபாவிடம் பிரார்த்தித்துவிட்டு கோயில் வளாகத்தில் வந்தமர்ந்தேன். அங்கு சிவப்பு நிறத்தில் புடைவை கட்டியிருந்த ஓர் அம்மா என்னைப் பார்த்து, ‘இங்கு வா’ என்று அழைத்தார். ‘உன் மகனுக்கு விரைவில் கல்யாணம் நடக்கும்’ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துசென்றார். சில நாள்களில் நானும் மகனும் ஷீர்டிக்குச் சென்று வந்தோம். பாபாவின் அருளால் என் மகனுக்கு ஹாங்காங்கில் வேலை கிடைத்தது. அதற்கடுத்தாற்போல் திருமணமும் நிறைவாக நடந்து முடிந்தது. சில மாதங்கள் கழித்து, என் மருமகளின் பிரசவத்துக்குத் துணையாக இருப்பதற்காக நான் ஹாங்காங் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

`‘ஹாங்காங்கில் சீன மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ தான் பேச முடியும். மருத்துவமனைகளில் எல்லா நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதால், டாக்டர்கள் தொடங்கி, தாதிப்பெண் வரை எல்லோரும் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள்.  உனக்கோ   ஆங்கிலம் தெரியாதே என்ன செய்வாய்?’’ என்று கேட்டார்கள் உறவினர்கள்.

`‘எனக்கு எப்போதும் பாபாதான் தாய், தந்தை. அவர் என்னைப் பார்த்துக்கொள்வார்'' என்று கூறிவிட்டு தைரியமாக ஹாங்காங் கிளம்பிப் போனேன். வளைகாப்பு நிகழ்ச்சியும் நன்றாகவே நடந்தேறியது. அங்கே, நான் தனியாகவே எல்லா இடத்துக்கும் போய்வந்து சமாளித்தேன். ஒரு நாள் இரவு பாபா என் கனவில் வந்து, ‘`கவலைப்படாதே. உனக்குப் பேரன் பிறப்பான். என்னுடைய பெயரை வை'’ என்று கூறி மறைந்தார். அதே போல், மருத்துவமனையிலிருந்து 11.30 மணிக்கு போன் வந்தது, ‘பேரன் பிறந்துவிட்டான்’ என்று. எல்லாம் பாபாவின் அருளால்தான் முடிந்தது.

குழந்தையையும் மருமகளையும் சென்னைக்கு அழைத்து வந்தேன். பாபா பற்றிச் சொல்லி மாளாத அளவு பரிகாசம் செய்தவர்கள் எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். இதெல்லாம் பாபாவின் அளப்பறியா கருணையால்தான் நடந்தது.