Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!

குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!
பிரீமியம் ஸ்டோரி
குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!

ஜுரம் நீக்கும் பிள்ளையாருக்கு டாக்டர் ஜெயம் கண்ணன்

குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!

ஜுரம் நீக்கும் பிள்ளையாருக்கு டாக்டர் ஜெயம் கண்ணன்

Published:Updated:
குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!
பிரீமியம் ஸ்டோரி
குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!

ம்முடைய குறைதீர்க்கும் கோயில்கள் தொடரின் நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்.  இதுவரை பலவிதமான உடல் பிரச்னைகள், ஆரோக்கியக் குறைபாடுகளை நீக்கும் தெய்வங்கள் குறித்தும், பிரார்த்தனைத் தலங்கள் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.  

குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!

நிறைவான இத்தருணத்தில் நாம் தரிசிக்கப் போகும் தெய்வம், கோயில் நகரமாம் குடந்தையில் அருள்பாலிக்கும் ஜுரகர விநாயகர். பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு என்று எக்கச்சக்கமான காய்ச்சல்கள் பரவி, மக்களின் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், காய்ச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும் தெய்வத்தையே நிறைவாகப் பார்க்கப்போகிறோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!

கும்பகோணத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கோயில்களில், மிகப் பிரசித்தி பெற்றதும் பிரமாண்டமானதுமான கோயில்களுள் ஒன்று நாகேஸ்வரன் கோயில்.  அந்தக் கோயிலுக்குள் கொலு விருப்பவர்தான் ஜுரகர விநாயகர். அது மட்டுமல்ல; நம் தமிழகத்தின் பெரும்பாலான ஆலயங்களைப்போல, இந்தக் கோயிலிலும் ஏகப்பட்ட அதிசயங்களும் ஏராளமான அற்புதங்களும் நிறைந்துள்ளன. கோயிலின் மூத்த அர்ச்சகர் கிருஷ்ணகுமார் சிவாசார்யரிடம் பேசினோம்.

‘‘சுமார் 1500 வருஷம் பழைமையான கோயில் இது. சூரியனே வந்து வழிபட்ட தலம். அதற்கு சாட்சியாக, ஆண்டுதோறும் சித்திரை 11, 12, 13 ஆகிய 3 நாள்களிலும் ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே வரும் சூரியக்கதிர்கள், கொடிமரம் தாண்டி நேரடியாக சுவாமி மேல் விழுகின்றன. அம்மூன்று நாள்களும் காலை 6 மணியிலிருந்து 6.10க்குள், மூலவர் நாகேஸ்வரனை சூரியன் வழிபடுவது கண் கொள்ளாக் காட்சி. சூரியன் பூஜை செய்த தலம் என்பதால், கோயிலின் உள்பிராகாரத்தில், வடபுறத்தில் சூரியனுக்கு இங்கே தனிச் சந்நிதி உள்ளது. அச்சந்நிதியைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் இருப்பவர்தான் ஜுரகர விநாயகர். 

குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!

இந்தக் கோயிலின் முக்கியமான சிறப்பம்சங்களுள் ஒன்று, ஜுரகர விநாயகர். சூரியன் என்றாலே வெப்பம்தானே! அப்படிப்பட்ட உஷ்ணாதிபதியின் கோஷ்டத்தில் இருப்பதால்,  அந்த உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தி பெற்றவராக இருக்கிறார் இந்த விநாயகர். வெப்ப சம்பந்தமான காய்ச்சல், கண் நோய்கள் மற்றும் அனைத்து உஷ்ண நோய்களையும் நீக்கி அருளுகிறார். 

குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!



உஷ்ண சம்பந்தமான நோய்கள் நீங்குவதற்கு, இங்கே வந்து ஜுரகர விநாயகருக்கு அபிஷேகம் செய்து, மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்யும் போது மட்டுமே மிளகு ரசம் சாதம், துவையல் நைவேத்தியம். மற்ற நாள்களில் சாதாரண நைவேத்தியமே படைக்கப்படுகிறது. இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது.

சமீபத்தில் டெங்கு ஜுரம் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த வேளையில், இந்தக் கோயிலில் ஜுரகர விநாயகரை வணங்கிச் சென்ற மக்கள் கூட்டம் ஏராளம். பலருக்கும் ஜுரம் குணமாகிய சம்பவத்தை நாங்களே நேரில் கண்டோம். அது மட்டுமல்ல; டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்த சமயத்தில், இங்கே நாங்களே கஷாயம் தயாரித்து, ஜுர நிவர்த்திக்காக விநாயகருக்குப் படைத்துவிட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகித்தோம். ஒரு மண்டலம் (48 நாள்கள்)  கஷாயம் படைத்து வழிபட்டு, விநியோகித்தோம்” என்றார். 

குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்!

நாகேஸ்வரன் கோயில் மிகப் பிரமாண்டமானது. அதன் சிறப்புகளைச் சொல்ல ஆரம்பித்தால், ஒவ்வொன்றாக விவரித்துக்கொண்டே போகலாம். அவற்றுள் முக்கியமானது, பிரளயகால ருத்ரர் சந்நிதி. அதைப் பற்றியும் விளக்கினார் சிவாசார்யர்.

‘‘பிரளயகால ருத்ரர் என்பவர் சிவனுடைய அம்சம். சிவனின் 64 மூர்த்தங்களில் ஒன்று. யமனுடைய அதிதேவதை.  எனவே, யம பயங்கள், யம உபாதைகள் தீர்வதற்கு இச் சந்நிதியில் பூஜை செய்யலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் யம கண்டத்தில் பூஜை செய்ய வேண்டும். இந்தச் சந்நிதியின் இன்னொரு சிறப்பாக, யமகிங்கரர்களின் உருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அம்மி, குழவி, உலக்கை, உரல் போன்று ஒவ்வொரு பொருளைத் தலையில் வைத்துக்கொண்டு நிற்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இதற்கு அருகிலேயே இருக்கும் இந்திராக்ஷி என்ற அம்பாள், கடன் பிரச்னை மற்றும் தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவள்.

கோயிலின் மூலவராக வீற்றிருக்கும் பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரருக்கு சிவராத்திரி அன்று நடைபெறும் நான்கு கால பூஜைகளில், முதல் கால பூஜை ஆதிசேஷனே வந்து செய்வதாக நம்பிக்கை. எனவே, சர்ப்பதோஷம் நீங்குவதற்கும், குழந்தை பாக்கியம், திருமணப்பேறு கிடைப்பதற்கும், ராகு கேது தோஷம் நீங்குவதற்கும் இங்கே பரிகாரம் செய்யப்படுகிறது. மேற்சொன்ன தோஷங்கள் இருப்பவர்கள், ஆயில்ய நட்சத்திர தினத்தில் பூஜை செய்வது நன்று. கடுமையான தோஷம் உள்ளவர்கள் ஹோமம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் கணபதியைத் தொழுது, உலக மக்கள் அனைவரும் உடல்நலம் பெற்று, பூரண ஆரோக்கியத்துடன், மன அமைதியுடன் வாழவேண்டுமென்று வேண்டி வணங்கி விடைபெறுகிறேன். வாழ்க நலத்துடன்!

(நிறைவுற்றது)

தொகுப்பு: பிரேமா நாராயணன்

படங்கள்: க.சதீஷ்குமார்