Published:Updated:

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!
பிரீமியம் ஸ்டோரி
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

பி.ஆண்டனிராஜ் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

பி.ஆண்டனிராஜ் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!
பிரீமியம் ஸ்டோரி
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

ண்பொருநை தாமிரபரணி தவழ்ந்தோடிப் புனிதம் சேர்க்கும் நெல்லை மாவட்டத்தை, `சாஸ்தாவின் பூமி' என்று சொல்லுமளவுக்கு எண்ணற்ற சாஸ்தா கோயில்கள் அமைந் திருக்கின்றன. அவற்றில் ஒன்று அருள்மிகு வன்னிய செண்பக சாஸ்தா திருக்கோயில். நெல்லை-தென்காசி சாலையில் உள்ள ஆலங்குளத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் சென்னை, மதுரை போன்ற பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தேடிவந்து வழிபடும் தெய்வம், ஸ்ரீவன்னிய செண்பக சாஸ்தா.

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

வல்லரக்கன் எனும் அசுரன் ஒருவன், சிவபெருமானைக் குறித்துக் கடும் தவமியற்றினான். தவத்தின் பயனாக சிவ பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரிடம், தனக்கு   அளவற்ற ஆற்றல் வேண்டும் என்றும், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் பஸ்பமாகிவிட வேண்டும் என்றும், தனக்கு எவராலும் அழிவு ஏற்படக்கூடாது என்றும் வரங்கள்   பெற்றான். தொடர்ந்து, தனக்கு வரமருளிய சிவபெருமான் உறையும் கயிலை மலைக்கே தீ வைத்துவிட்டான். தேவர்கள் ஓடி ஒளிந்தார்கள். சிவனாரும் அங்கிருந்து அகன்று காட்டுக்குச் சென்று, செவ்வரளிச் செடி ஒன்றில், சிவலிங்க வடிவில் அரும்பாக மாறிவிட்டார். 

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

அரக்கன் அழிவதற்கான காலம் நெருங்கியது. கிருஷ்ணர் மோகினி வடிவம் எடுத்து அரக்கனிடம் வந்தார். மோகினியை அடைய விரும்பிய அரக்கன், அவள் கூறியபடியே தன் தலையில் தானே கையை வைத்தான். வரத்தின் விளைவால் எரிந்து சாம்பலானான்.

அரக்கனை அழித்துத் திரும்பிய மோகினி வடிவத்திலிருந்த கிருஷ்ணரைக் கண்ட சிவனார், அவரைத் தழுவி மகிழ, சாஸ்தா அவதரித்தார். ஆலங்குளம் எனும் தலத்தில், செண்பகக் குளத்தின் கரையில் - வன்னிய மரத்தடியில் பிறந்த சாஸ்தாவை, அப்பகுதி மக்கள், `வன்னிய செண்பக சாஸ்தா' என்ற திருப்பெயரில் வழிபடுகிறார்கள்.  

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

வன்னிய சாஸ்தாவைக் குலதெய்வமாகக் கொண்ட குடும்பத்தினர், புதிய தொழில் தொடங்குவதிலிருந்து, கல்யாணம், முடியிறக்கிக் காது குத்துதல் போன்ற அனைத்து சுப காரியங் களையும், சாஸ்தாவை வழிபட்ட பின்னரே தொடங்குகிறார்கள். அதேபோல், ஆண்டுதோறும் வரி செலுத்தித் திருவிழாவைச் சிறப்பாக நடத்து கிறார்கள்.

குழந்தை இல்லாத தம்பதியர் இந்தக் கோயிலுக்கு வந்து சாஸ்தாவை வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இந்தப் பகுதியிலுள்ள மக்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது. கோயிலைச் சுற்றிலுமிருக்கும் விவசாயிகள், விதை விதைப்பதற்கு முன்பு விதைகளைக் கொண்டு வந்து வைத்து வழிபட்டுவிட்டுச் சென்றால், விளைச்சல் அபரிமிதமாகப் பெருகும் என்றும்  நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

காணாமற்போன பொருள்கூட சாஸ்தாவின் அருளால் கிடைத்துவிடும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. கோயிலுக்கு வந்து சாஸ்தாவை வழிபட்டு, பிரசாதமாகக் கொடுக்கும் விபூதியை நெற்றியில் இட்டுக்கொள்வதுடன், சிறிது வாயில் போட்டுக் கொண்டு தீர்த்தம் குடித்தால் எப்படிப்பட்ட தீராத நோயும்கூட நீங்கிவிடும் என்பது ஐதீகம்.  

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷம். அன்று பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து சாஸ்தாவை வழிபடுகின்றனர். கோயிலில் விநாயகர், அம்மன், சுடலை மாடன் என்று பல தெய்வங்கள் இருந்தாலும், சாஸ்தாவே பிரதான தெய்வம்.கோயிலில் சில நூறு வருடங்களைக் கடந்த அரச மரமும் வேப்ப மரமும் பின்னிப் பிணைந்து தலவிருட்சமாக உள்ளது. தினமும் காலை, மாலை ஆகிய வேளைகளில் அபிஷேக அலங்காரங் களுடன் ஆராதனை நடைபெறுகிறது.

வைகாசி மாதம் விமரிசையாக இக்கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. கடைசி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் திருவிழா நடைபெறும். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகக் கொடியேற்றிக் காப்புக் கட்டும் வைபவம் நடைபெறும். ஆலங்குளம், குருவன்கோட்டை, கல்லூத்து, மதுரை, சென்னை என்று பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து கலந்துகொள்வார்கள்.  

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்!

காப்புக் கட்டும் நிகழ்ச்சியின்போது பால்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். காப்புக் கட்டிய பக்தர்கள் ஒரு வாரம் கடுமையாக விரதம் அனுஷ்டிக்கின்றனர். திருவிழாவின் தொடக்க நாளில், தாமிரபரணி, வைகை, கருப்பந்துறை, குற்றாலம், திருச்செந்தூர், ஆலங்குளம் ஆகிய ஊர்களிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் மகா தீபாராதனை நடைபெறும்.

சனிக்கிழமை பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்குப் பாலபிஷேகத்துடன் மஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களாலும் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்குக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாலையில் விளக்கு பூஜை நடைபெறும். 

இரவு 9 மணிக்கு முளைப்பாரி எடுத்தலும், நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு சந்தனக் காப்புடன் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். அப்போது பக்தர்கள் சாஸ்தாவுக்குத் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி நன்றி செலுத்துவார்கள்.

ஞாயிற்றுக்கிழமையன்று சுவாமிக்குப் பல திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெறும். வேண்டிக்கொண்ட பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவார்கள்.  தொடர்ந்து சிவனணைந்த பெருமாளுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். உச்சி கால பூஜைக்குப் பிறகு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டதும் திருவிழா நிறைவு பெறுகிறது. 

பல ஊர்களிலிருந்து வரும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் கலந்துகொள்ளும், `செண்பக சாஸ்தா திருவிழா' ஒற்றுமையை வலுப்படுத்தும் விழா என்றே சொல்லலாம்.