Published:Updated:

பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!

பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!
பிரீமியம் ஸ்டோரி
பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!

பி.சந்த்ரமெளலி

பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!

பி.சந்த்ரமெளலி

Published:Updated:
பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!
பிரீமியம் ஸ்டோரி
பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!

‘மயிலையே கயிலை; கயிலையே மயிலை’ எனப் போற்றப்படும் மயிலையில், பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாக நடக்கும். 

பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!

திருஞானசம்பந்தரின் வாக்கிலிருந்தே இதை நாம் அறியலாம். இறந்துபோய்ச் சாம்பலும் எலும்புமாக மாறிய பெண்ணை, மீண்டும் உயிருடன் கொண்டு வந்த அதிசயத்தை மயிலையில் நிகழ்த்தினார் திருஞானசம்பந்தர்.

மயிலையில் வாழ்ந்தவர் சிவநேசர்.  சிவபக்தியில் தலைசிறந்தவரான அவர், தன் மகளான பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்று தீர்மானித்திருந்தார்.

ஒரு நாள் பூம்பாவை, மலர் பறிக்கும்போது பாம்பு தீண்டி இறந்தாள். அவளுக்கு ஈமக்கிரியைகளைச் செய்த சிவநேசர், (மகளின்) சாம்பலையும் எலும்புகளையும் ஒரு குடத்தில் போட்டு, கன்னிமாடத்தில் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். சிறிது நாள்களுக்குப் பின் திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்தார். அவரை பக்தியோடு வரவேற்றார் சிவநேசர். பூம்பாவை பற்றிய தகவல்கள் திருஞானசம்பந்தருக்குச் சொல்லப் பட்டன.

பூம்பாவையின் எலும்புகள் இருந்த குடத்தைத் தன் முன்னே கொண்டு வரச்சொன்னார் திருஞானசம்பந்தர். அதன் முன்பாக, ‘மட்டிட்ட புன்னையங்கானல்’ என்று தொடங்கிப் பதிகம் ஒன்று பாடினார். அப்போது அங்கு ஊரே கூடியிருந்தது. 

பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!

அதன் பலனாக, பூம்பாவை மீண்டும் உயிருடன் வெளிப்பட்டாள். அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஏழு வயதில் பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை, பன்னிரண்டு வயதுப் பெண்ணாகத் தென்பட்டாள்.  திருஞானசம்பந்தர் பாடிய அந்தப் பதிகத்தில் சொல்லியபடியே இன்றும் மயிலையில் விழாக்கள் நடந்துவருவதை இப்போதும் நாம் காணலாம்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திர நாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.


பங்குனி மாதத்தில் மயிலையில் நடைபெறும் விழாக்களைச் சொல்கிறது இந்தப் பாடல். வாருங்கள்! அந்த வைபவங்களை விரிவாகக் கண்டு வளம்பெறலாம்.

கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா இந்த ஆண்டு (2018, மார்ச் 22) பங்குனி 8-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மூன்றாம் நாள் (மார்ச் 24) அதிகாரநந்திப் பெருவிழா. ஐந்தாம் நாள் (மார்ச் 26) வெள்ளி ரிஷப வாகனப் பெருவிழா. ஏழாம் நாள் (மார்ச் 28) திருத்தேர் விழா.

எட்டாம் நாள் மிகவும் விசேஷம்.  அறுபத்துமூவர் பெருவிழா (மார்ச் 29) அன்று மயிலை முழுவதுமே விழாக் கோலமாக இருக்கும்.

கொளுத்தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் பக்தர்கள் பெருமளவில் குவிந்திருப்பார்கள். பக்தர்களுக்காக ஆங்காங்கே நீர்மோரும் பானகமும் வழங்குவார்கள்.

இறைவனை (இன்னொரு விதமாகச் சொன்னால்- உண்மையான ஆனந்தத்தை, நிலையான அமைதியை) அடைய, ஜாதி-மத வேறுபாடுகள் தேவையே இல்லை என்பதை விளக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டு, அறுபத்துமூவரை தரிசிப்பது பெரும்புண்ணியம்.  ஒன்பதாம் நாள் (மார்ச் 30) பிட்சாடனர் விழா. பத்தாம் திருநாள் (மார்ச் 31) திருக்கல்யாண மங்கல நிகழ்ச்சி.

மயிலையில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவில் கலந்துகொண்டு, அருள்மிகு கற்பகாம்பிகை உடன் உறை கபாலீஸ்வரர் அருளை அனைவரும் பெறுவோம்!

பங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!

பங்குனி உத்திர மகிமைகள்!

சி
வன்-சக்தி, முருகர்-தெய்வயானை, ஆண்டாள் - ரங்கமன்னார் ஆகியோரின் தெய்வத் திருமணங்கள் நடந்த திருநாள் பங்குனி உத்திரம். ராமன் - சீதை, லட்சுமணர் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - ஸ்ருதகீர்த்தி கரம் பிடித்த நாளும் இதுவே. இந்தத் திருநாளுக்கு இன்னும் பல மகிமைகள் உண்டு.

தர்ம சாஸ்தாவின் அவதாரம் நிகழ்ந்த பெருமையும் இந்த நாளுக்கு உண்டு. மகாலக்ஷ்மி பங்குனி உத்திர நாளில் விரதமிருந்துதான் திருமாலின் திருமார்பில் இடம் பிடித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதைப்போலவே கலைமகளும் நான்முகனின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள் என்றும் கூறுகிறது.

அசுரர்களின் தொல்லையால் இந்திராணியைப் பிரிந்திருந்த இந்திரன் மீண்டும் சேர்ந்த நாள் இந்த நாளே. அவர்களுக்குத் திருமணமான நாளும் இதுவே.

லோபாமுத்திரை அகத்தியரை மணந்துகொண்டதும், ரதி - மன்மதன் திருமணமும், சாஸ்தா பூரணை, புஷ்கலையை மணந்துகொண்டதும் பங்குனி உத்திர நாளில்தான். பார்க்கவ மஹரிஷியின் திருமகளாக தாயார் மகாலட்சுமி பார்கவியாக பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான்.

சந்திரபகவான் ரோகினி உள்ளிட்ட 27 நட்சத்திர மங்கையரையும் மணந்த நாள் பங்குனி உத்திரம். அதனாலேயே உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் பங்குனி உத்திர நாளில் பூரண கலையுடன் கன்னி ராசியில் இருந்து களங்கமின்றிக் காட்சி தருவான். அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு மேன்மையுறும்.

வில்லுக்கு ஒரு விஜயன் என்று போற்றப்படும் அர்ஜுனர் பிறந்த நாளும் இதுதான். இச்சா சக்தியின் அம்சமான வள்ளிப்பிராட்டியின் அவதார தினமும் பங்குனி உத்திர நாள்தான்.

ஈசனாலே அம்மா என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற நாளும் இதுவே.

பெரும்பாலான தெய்வங்களின் திருமணம் இந்த நாளில் நடை பெற்றதால் இந்த நாளில் திருமணமாகாத பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் நல்ல வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- மு.ஹரி காமராஜ்