Published:Updated:

திருக்கோயில்கள்... குறியீடுகள்!

திருக்கோயில்கள்... குறியீடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
திருக்கோயில்கள்... குறியீடுகள்!

சக்தி ஸ்பெஷல் ஸ்டோரிபாலுசத்யா - சி.வெற்றிவேல் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

திருக்கோயில்கள்... குறியீடுகள்!

சக்தி ஸ்பெஷல் ஸ்டோரிபாலுசத்யா - சி.வெற்றிவேல் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
திருக்கோயில்கள்... குறியீடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
திருக்கோயில்கள்... குறியீடுகள்!

லய வாசல். கண்மூடி, கரம்கூப்பி, இறையை மனத்துள் நிலைநிறுத்தி வணங்குகிறோம். உள்ளே நுழைகிறோம். கருவறையில் உறையும் கடவுளைத் தரிசித்து வெளியே வரும்வரை, நம்மில் அநேகம் பேருக்கு இருப்பது இறைச் சிந்தனையே. உள்ளமும் உடலும் ஒடுங்க அவனைச் சரணடைவதே பக்தி; நமக்குக் கிடைப்பது அமைதி, பேரானந்தம்.   

திருக்கோயில்கள்... குறியீடுகள்!

கோயிலில் பக்தியே பிரதானம். இருந்தாலும், அதன் அழகு நம்மைச் சொக்கவைக்கும்தானே! பௌர்ணமி இரவில் கல் தரை தரும் `ஜிலீர்’ சுகம், புறாக்களும் கிளிகளும் சிறகசைத்து வட்டமிடும் கோபுரம், வைத்த கண்ணை எடுக்கவிடாத சிற்பங்களின் அழகு... இவற்றையும் ரசித்திருப்போம். இவற்றில், நம்மில் அதிகம் பேர் கவனிக்கத் தவறுவது... `திருக்குறியீடுகள்’.

அர்த்தத்தோடு ஒவ்வொன்றையும் வடிவமைத்தார்கள் நம் முன்னோர். கொடி மரம் தொடங்கி, கோபுரம் வரை ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு தத்துவம் உண்டு. நுழைவாயிலிலோ மண்டபத்திலோ வட்டம், சதுரம், செவ்வகம், ஆடுபுலி ஆட்டம் விளையாடும் கட்டம்... போன்றவை வரையப் பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இவை, சாதாரண வடிவங்களல்ல... குறியீடுகள். இவற்றுக்கு, `திருக்குறியீடுகள்’ என்று பெயர்.

இவற்றில் சில, கோயிலின் மையத்தை நோக்கி மிகச் சரியாக வரையப் பட்டிருக்கும். இப்படியான குறியீடுகளே, கோயில் கட்டுமானத்தின் தொடக்கப் பணியான ‘சங்கு ஸ்தாபனம்.’  

திருக்கோயில்கள்... குறியீடுகள்!

திருக்குறியீடு வரையப்பட்டிருக்கும் கல், கோயில் கட்டுமானத்தில் வைக்கப்பட்ட முதல் கல்லாகக்கூட இருக் கலாம். குறியீடு வடிவங்களில் வட்ட வடிவம் காலத்தையும், சதுரம் இடத்தையும், குறுக்குக்கோடுகள் துல்லியமாகத் திசையையும், செவ்வகம் இயங்கு சக்தியையும் குறிப்பவை. இவை வெறும் கட்டுமானத்துக்காக மட்டும் வரையப்பட்டவை அல்ல; நம் முன்னோர்களின் ஆன்மிக ஞானத்தையும் அறிவியல் தேர்ச்சியையும் உணர்த்துபவை. முதலில், திருக் குறியீடுகள் உணர்த்தும் சில தத்துவங்களை அறிவோம்.

ஓம் - (தீர்க்க பிரணவ மந்திரம்)

ந்திரங்களில் முதன்மையானது தீர்க்க பிரணவ மந்திரமான `ஓம்’... அ, உ, ம் என்ற எழுத்துகளால் ஆனது. ஓம் என்பது இறைவனின் ஒலி. இதை `தீர்க்க பிரணவ மந்திரம்’ என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். `ஓம் எனும் தீர்க்க பிரணவ மந்திரத்தை முறையாக உச்சரித்து, பிரம்மத்தை உணருங்கள்’ என்று வழி காட்டுகிறது யஜூர் வேதம். `புலனடக்கத்துடன், மனதை ஒருநிலைப்படுத்தி, பிராணனைத் தலைக்குள் வாங்கி, யோகத்தில் `ஓம்’ எனும் மந்திரத்தை உச்சரிப்பவர்கள், உடலைவிட்டுப் பிரிந்த பின்னர் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள்’ என்கின்றன ஞானநூல்கள்.

  ஸ்ரீ சக்கரம்


ருவமற்றது மந்திரம். உருவமற்ற மந்திரத்திலிருந்து உருவாவது யந்திரம். சூட்சமம் என்பதும் யந்திரமே. யந்திரத்தில் முதன்மையானது ஸ்ரீசக்கரம். முப்பரிமாணமுடைய மகா மேருவின் உச்சியில் பறக்கும் ஒரு பறவையின் கண்களுக்கு மேருவின் வடிவம் எப்படித் தெரிகிறதோ, அப்படியான உருவவியல் கணித முறைப்படி சித்திரித்துக் காட்டப்படும் இருபரிமாண வடிவம்தான் ஸ்ரீசக்கரம்.  

திருக்கோயில்கள்... குறியீடுகள்!

அருள்மிகு காஞ்சி காமாட்சியம்மன், திருவொற் றியூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், தஞ்சை பாஸ்கர ராஜபுரம், கன்னிவாடி ராஜ காளியம்மன் போன்ற கோயில்களில் ஸ்ரீசக்கரம் வழிபடப்படுகிறது. இது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களின் தன்மை, நிறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. `பிரமாண்டம் எனப்படும் அண்டத்திலுள்ள அனைத்துமே பிண்டத்திலும் உள்ளது’ எனும் தத்துவம்தான் ஸ்ரீசக்கரம்.

பழங்கால ஸ்ரீசக்கரத்தின் கோட்டுருவங்களை சேலம் மாவட்டம் ஊத்துமலையிலும், திருவானைக்காவில் அருள்மிகு ஜம்புநாதரின் ஆலய மேற்கு ராஜ கோபுர உத்தரத்தின் கீழ்த் தாரியிலும், திருவரங்கத் திருக்கோயிலில் தென் திசை ராஜகோபுரத்து உத்தரத்தின் கீழ்த் தாரியிலும், `காதறுத்தான் மண்டபம்’ என மக்களால் குறிப்பிடப்படும் மண்டபத்தின் இடிபாடுகளுக்கு இடையில் காணப்படும் மண்டப மேற்கூரையிலும் காணலாம்.

சக்கர வியூகக் குறியீடும் வழிபாட்டுச் சடங்கும்

ருத்தரிக்கும் முறையைப் பற்றி இந்தக் குறியீடு விளக்குகிறது. பொதுவாக இது, கிழக்குப்பார்த்து அமைந்திருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணை இந்தச் சக்கரவியூக யந்திரத்துக்கு முன்பாக உட்காரவைத்து, மந்திரங்களைச் சொல்லி, ‘ஊமைப் புலி எறிதல்’ எனும் ( செந்நிற அன்னம் சமர்ப்பிக்கும் நிகழ்வு) சடங்கு நடை பெறும். இதனால் அந்தப் பெண்ணுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கான மந்திரம் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  

திருக்கோயில்கள்... குறியீடுகள்!

குழந்தை கருத்தரிப்பதற்கான குறியீடுகளைக் கோயில்களின முன்மண்டபங்களிலும், சுகப் பிரசவம் நடப்பதற்கான குறியீடுகளை ஊருக்கு வெளியில் சற்று ஒதுங்கிய இடத்தில் கற்பாறைகளிலும் பொறித்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர். திருச்சி குழுமணி பகுதியில் அமைந்திருக்கும் வரசித்தி விநாயகர் கோயிலில் ஒரு சக்கரவியூகக் குறியீடு காணப்படுகிறது.

சுகப்பிரசவம் அருளும் யந்திரம்... 

சில கோயில்களில் இந்த யந்திரக் குறியீடு வட்ட வடிவில் பாறையில் பொறிக்கப்பட்டிருக் கிறது. கருத்தரித்திருக்கும் பெண்களுக்குச் சுகப் பிரசவம் நடப்பதற்காக, திருவிழா காலத்தில் இங்கே பூஜை செய்யப்படும். இந்தப் பாறையின் முன்பும் ஊமைப்புலி உடைத்தல் சடங்கு நடை பெற்றது உண்டு என்கிறார்கள்.

இந்த யந்திரம் பெரிய கருப்பூரிலிருக்கிறது. சுகப்பிரசவத்துக்கான இந்த யந்திரத்தை, அமெரிக்காவின் `ஹோப்பி’ என்னும் பழங்குடி  மக்களும் வழிபட்டதாக, அமெரிக்க ஆய்வு அறிஞர் ஃபிராங் வாட்டர், ‘தி புக் ஆஃப் ஹோப்பி’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் இந்த யந்திரத்தை தாபுத் (தாயும் சேயும்) என்று குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திரனின் சாபத்தால் பூமிக்கு வந்த ஊர்வசி, சித்தர்களிடம் சித்த நெறிகளைக் கற்றுக்கொண்டு, தன்னுடைய பஞ்சரத்தினத்தில் சிசுவின் வளர்ச் சியைப் பற்றி விவரித்திருப்பதாக ‘சித்தர்கள் கண்ட மானுட ரகசியம்’ என்ற நூல் கூறுகிறதாம்; ஊர்வசி கூறியவற்றின் வடிவம்தான் இந்த யந்திரங்கள் என்றும் சொல்கிறார்கள்.

ஆடு- புலி ஆட்டக் கட்டம் !

து, ஏதோ பொழுதுபோக்குக்காக வரையப் பட்ட ஆடுபுலி ஆட்டத்துக்கான கட்டம் அல்ல. இந்தக் கட்டங்களிலும் மிகப் பெரிய தத்துவம் உண்டு. பத்துக் கோடுகள், பதினாறு பாகங்களுடன் பறவைபோல் தோற்றமளிக்கும் இந்தக் குறியீட்டில், 10 கோடுகள் என்பது மனிதர்களின் பத்துப் பிராணன்களையும், 16 பாகங்கள் மனிதர்களுடைய அங்கங்களையும் குறிக்கின்றன. இந்த விவரம், அம்பாளின் ‘சக்தி மஹிம்ன ஸ்தோத்திர’த்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டத்தில் மூன்று புலிகளும் 15 ஆடுகளும் இடம்பெறும். மூன்று புலிகள் மனிதர்களின் சத்வ, ரஜஸ், தமோ ஆகிய மூன்று குணங்களைக் குறிக்கும். 15 ஆடுகள் மனிதர்களின் ஐந்து ஞானேந்திரியங்களையும், ஐந்து கர்மேந்திரங்களையும், பஞ்ச பூதங்களையும் குறிக்கின்றன. 16-வதாக இருப்பது மனம்.  

திருக்கோயில்கள்... குறியீடுகள்!

மனிதர்களின் 15 இந்திரியங்களும் சேர்ந்து, மூன்று குணங்களை அடக்க வேண்டும். அப்படி அடக்கும்போது, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் சத்வத்துள் ஒடுங்கும். சத்வம் சித்தத்துள் அடங்கும். அந்த நிலைதான் பேரானந்தம் என்னும் ‘சத்சித் ஆனந்த’ நிலை. இந்தத் தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் ஆடு, புலி ஆட்டத்துக்கான குறியீடுகள் பொறிக்கப்பட்டிருகின்றன. திருப்பைஞ்ஞீலி தலத்திலுள்ள கோயிலில் இந்தக் கட்டம் காணப்படுகிறது.

ஒரு சதுரத்தில் மூன்று வட்டங்கள், அதனுள் பின்னிப் பிணைந்த இரண்டு முக்கோணங்கள், அதற்குள் ஓர் அறுகோணம், அதன் மையத்தில் ஒரு புள்ளி எனத் திகழும் ஒரு குறியீடு உண்டு.

இதில் சதுரம், பிரபஞ்சவெளியைக் குறிப்பது. மூன்று வட்டங்கள், மூன்று காலங்களையும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூன்று கிரந்தங் களையும், அக்னி, சூரியன், சந்திரன் ஆகியோரையும் குறிப்பிடுகிறது. பின்னிப் பிணைந்த இரண்டு முக்கோணங்கள் ஆக்ஞா சக்கரமான மனதைக் குறிக்கிறது. நடுவிலுள்ள அறுகோணம் குருபீடம் - அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது. பரவெளியாகிய காயத்ரி பீடம் ஆன்ம ஞானத்தைக் குறிக்கிறது. பரவெளியின் மையத்தில் உள்ள பிந்து, பிரம்மத்தை உணர்த்தும். புலனடக்கத்துடன் மனதை ஒருமைப்படுத்த உதவும் இந்த யந்திரம் மன நோய்களையும் தீர்க்கவல்லது.

திருக்குறியீடுகள் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் செய்துவருபவர் திருச்சி தி.லெ.சு.ச. போஸ். அவரிடம் குறியீடுகளின் மகத்துவம் குறித்துக் கேட்டோம்.

``எந்தக் காலக்கட்டத்தில் ஆதி மனிதன், தான் வாழும் சுற்றம், சூழ்நிலை, பிறப்பு - இறப்பு, துன்பம்-இன்பம் ஆகிய இரட்டைகளுக்கான காரண காரியங்களையும், தனது பிறப்பின் ரகசியத்தையும், சென்றடைய வேண்டிய இலக்கை யும் அறிந்துணர்ந்தானோ, தான் அறிந்தவற்றைத் தம் சந்ததியரும் அறிய வேண்டுமென எண்ணினானோ, அந்தக் காலகட்டம்தான் குறியீடுகள் வழக்கத்துக்கு வந்த காலம் எனலாம்.

எனினும் கணிதவியல் ரீதியில், பச்சை நிறப் பாறை ஓவியங்களின் காலக்கணக்குடன் ஒப்பிடுவ தானால், குறியீடுகளின் காலம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக இருக்கலாம்.

ஐ.ஐ.டி-கரக்பூர் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சுவஸ்திக் குறியீடு 11ஆயிரம் ஆண்டு களுக்கும் முற்பட்டது என்பது தெரியவருகிறது.

பெரும்பாலும் குறியீடுகள் குடைவரைக் கோயில்களிலும், கருங்கற்களால் கட்டப்பட்ட திருமுற்றங்களிலும், கோயில்களிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. கோயில்  கோபுரங் களின் நிலைக்கால்படிகள், உத்தரத்தின் கீழ்தாரி ஆகியவற்றிலும், கோயில்களின் அங்கமான திருச் சுற்றுகள், மகா மண்டபங்கள், அர்த்த மண்டபங்கள், கற்தூண்கள், கர்ப்பகிரகத்தின் முன்புறமுள்ள கற்தளங்களின் மேல்பரப்பு ஆகிய பகுதிகளிலும் குறியீடுகள் புடைப்புச் சிற்பங்களாகவும் கோட்டுரு வங்களாகவும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

குறியீடுகள் சித்தர்கள், ஞானிகள், முனிவர்க ளாலும் அவர்களது வழிகாட்டுதல் பேரில் சிற்பக் கலைஞர்களாலும் கோட்டுருவங்களாகப் பொறிக் கப்பட்டும், படைப்புச் சிற்பங்களா வடிவமைக்கவும் பட்டவை. திருச்சி-திருவானைக்கா கோயிலின் கீழ்த்திசையில் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட கோபுரத்தின் நிலைக்கால் படியில் பொறிக்கப் பட்டிருக்கும் ஆத்மஜோதி குறியீட்டைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின. இறைவனும் இறைவியும் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரத்தின் விமானக் கலசங்களை நோக்கி எனது கரங்கள் குவிந்தன.

தென்னாப்பிரிக்க ஆய்வாளரான ரோப் மில்லனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறியீடு  `ஓம்’ குறியீடு. அதேபோல், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பாலசாக்கி எனும் செந்நிற மலைத்தொடரில் ஜாக் ஆண்டூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட `ஓம்’ குறியீட்டை 2006-ம் ஆண்டில் நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது, எனது கொடுப்பினையே!

`குறியீடுகளின் உட்கருத்துக்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்போது, அவற்றின் முக்கியத் துவமும் வெளிப்படும். அதன் உட்கருத்துகள் புரியாமல் போகும்போது குறியீடுகளின் முக்கியத் துவங்களும் பயனில்லாமல் மறைந்துபோகும்' எனச் சுவாமி சுவாஹானந்தரின் நூல் குறிப்பு சொல்கிறது. அதுதான் உண்மை.

குறியீடுகளின் சிறப்பை உணர்ந்து அதை எதிர்காலச் சந்ததியினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது நம் கடமை. எந்த நாடு தனது வரலாற் றையும் பாரம்பர்யத்தையும் மறந்துவிடுகிறதோ அது தன்னையே மறந்துவிடும். நாம் என்ன செய்கிறோம் என்பதற்கு மட்டும் பொறுப்பாளிகள் அல்ல; எதையெல்லாம் செய்யாமல்விட்டுச் செல்கிறோமோ அதற்கும் நாமே பொறுப்பாளிகள்...’’ என்கிறார். நிதர்சனமான வார்த்தைகள்!

சில முக்கியக் குறியீடுகள்!

ன்றுக்குமேல்  ஒன்று என்று மூன்று செவ்வகங்களில் நான்கு அல்லது எட்டுத் திசைகளை நோக்கிய கோடுகள் அல்லது புள்ளிகள்கொண்ட கோட்டுருவங்களும் குறியீடுகளாகக் கோயில்களில் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். இதில் `பிந்து' என்னும் புள்ளி, 4 அல்லது 8 திசைகளை நோக்கியிருக்கும் கோடுகள், 3 செவ்வகங்கள் அல்லது வட்டங்கள் ஒன்றுக்குமேல் ஒன்றாக இருக்கும். இவற்றில் புவியின் திசைகளை நோக்கும் கோடுகள் மட்டுமே அமைந்திருப்பது
பொதுவானது.  சிலவற்றில் ஜோதி பிழம்பு கோடுகளும் தென்படும்.

இவற்றுள் வட்டம் காலத்தையும், சதுரம் இடத்தையும், செவ்வகம்  இயங்கு சக்தியையும், கூட்டல் குறியீட்டிலுள்ள செங்குத்துக் கோடு நிலையான காரணத்தையும், படுக்கைக் கோடு சலனமான காரியத்தையும் குறிப்பிடுபவை. இரண்டு கோடுகள் வெட்டும் மையம்தான், ‘பிந்து’ என்னும் புள்ளி. 

சிவ சக்தியாக - சிவ பார்வதி இருவரும் ஓருருவில் பேரொளியாகப் பிரகாசிப்பதால், மற்றவை பிரகாசிப்பதில்லை என்பதே நடுவில் உள்ள புள்ளி உணர்த்தும் தத்துவம்

முக்கோணம்

மு
க்கோணம், இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள நிலையான உறவைச் சுட்டிக்காட்டும் ஒரு பொதுவான வடிவம். அந்த வடிவமே, உயிர், இறைவன், உலகம் எனும் திரிபதார்த்தம். மேல் நோக்கிய முக்கோணத்தின் உச்சி, அன்புக்காகவே அன்பு செய்தலை உணர்த்தும். கீழே உள்ள இரண்டு கோணங்களில் முதலாவது கோணம் - பயமற்ற தன்மையையும், அதன் எதிர்ப்புற முள்ள கோணம் - எதையும் எதிர்பாராத அன்பின் தூய தன்மையையும் குறிக்கின்றன.

மங்களகரமான சின்னங்கள்

ங்களகரமான சின்னங்கள் பதினாறு. அவை, `மங்களம் பதினாறு’ எனும் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படு கின்றன. அவை... கவரி, நிறைகுடம், கண்ணாடி, கோட்டி (வீட்டு வாசல் அல்லது கோபுர வாயில்), முரசு, விளக்கு, கொடி, இணைக்கயல், வாள், குடை, ஆலவட்டம், சங்கம், தவிசு (பீடம்), திரு (திருமகள்), செங்கோல், ஓமாலிகை (நறும்புனலில் இடும் மணப்பொருள்).

திரிபுடி ஞானம் 

கோ
யில் கோபுரங்களின் நிலைக்கால் படிகள், உத்திரங்கள், கோபுரத்தின் மேற்கூரை போன்ற இடங்களில் சதுர வடிவிலும், செவ்வக வடிவிலும் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்தக் குறியீடுகள் அறிபவன், அறிவு, அறிவிப்பவன் என்னும் உலக ஞானத்தை உள்ளடக்கிய ‘திரிபுடி ஞான’த்தைக் குறிப்பிடுபவை.