தனம் தருவாள்... கல்வி தருவாள்!

தை அமாவாசை திருநாளன்று தன் அடியவருக்காக, அம்பிகை தனது தாடங்கத்தைக் கழற்றி விண்ணில் எறிந்து பூரண நிலவைத் தோன்றச் செய்து அற்புதம் நிகழ்த்திய தலம் திருக்கடவூர். பிரம்மன் வழிபட்ட தலம். எனவே, பிரம்ம மகிஷியான சரஸ்வதிதேவியும் அம்பாளை வழிபட்டு வணங்கிய இடம். ஆக, கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதிக்கே அருளும் பொருட்டு அம்பிகை அபிராமி, கையில் ஜபமாலை தாங்கி அருள் பொழியும் தலம் இது.

ஆபரணங்களில் தோன்றியவள்!

`அபி’ என்றால் மேலான என்று பொருள்; `ராமி’- ரம்மியமானவள். மகாவிஷ்ணுவின் ஆபரணங்களில் இருந்து தோன்றியவள் திருக்கடவூர் அபிராமி. பாற்கடலில் அமிர்தம் பெற்ற தேவர்கள் அதைப் பகிர்ந்துண்ண புண்ணியமானதொரு இடத்தைத் தேடிய போது, அவர்களுக்குச் சிவனார் காட்டித் தந்த தலம்தான் திருக்கடவூர்.

அவர்களுக்கு அமிர்தம் பரிமாறுவதற்குமுன் சிவனாரை வழிபட எண்ணினார் மகாவிஷ்ணு. சிவபெருமானை பூஜிக்க வேண்டுமானால் அம்பிகையும் உடன் இருக்க வேண்டுமே! மஹா விஷ்ணு தாம் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி வைத்துத் தியானிக்கத் தொடங்க, அந்த ஆபரணங்களில் இருந்து தோன்றியவள்தான் அன்னை அபிராமி.

இன்றும் தொடரும் அற்புதம்!

தை அமாவாசை அன்று பெளர்ணமியை வரவழைத்து அபிராமிப் பட்டருக்கு அன்னை அருளிய வைபவம் இன்றும் கொண்டாடப் படுகிறது இவ்வூரில். அன்று இரவு நிகழும் வழிபாட்டின் நிறைவாக அபிராமி அந்தாதிப் பாடல்கள் பாடப்படும். அதன் 79-வது பாடல் முடிந்ததும், கோயிலின் விளக்குகளில் எல்லாம் ஒளி குறையும்படிச் செய்யப்படும். அப்போது கொடி மரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு திரையில், அம்பிகையின் சந்நிதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழுந்து, முழுநிலவாகக் காட்சி தரும். பக்திப் பரவசத்தோடு ஆராதனைகள் தொடரும்!

அரசபோகம் வாய்க்கும்!

அம்பாளுக்கு எல்லா மாதத்துப் பௌர்ணமி சிறப்பு. தவிர, ஆடிப் பூரம், தை அமாவாசை, நவராத்திரி போன்றவையும் சிறப்பான நாள்களாகும். இந்நாள்களில் கீழ்க்காணும் பாடலைப் பாடி அம்பிகையைத் தியானித்து வழிபடுவது விசேஷம்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலைஆரம் - பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

இந்தப் பாடலை பாராயணம் செய்து வந்தால், ஓர் அரசருக்கு நிகரான அத்தனை செல்வங்களையும் அம்பிகை அருள்வாள் என்கிறார் அபிராமிபட்டர்.