Published:Updated:

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!
பிரீமியம் ஸ்டோரி
பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: கே.கார்த்திகேயன் - தே.அசோக்குமார்

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: கே.கார்த்திகேயன் - தே.அசோக்குமார்

Published:Updated:
பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!
பிரீமியம் ஸ்டோரி
பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

‘கடவுள் நமக்குள்ளேயே  இருக்கிறார்’ என்பது இந்து மதம் கூறும் உன்னதத் தத்துவம். நாம் உள்ளுக்குள் கடந்து சென்றால் கடவுளின் தரிசனம் பெறலாம் என்பதை உணர்த்தும் தத்துவம் அது.  

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

நமக்குள் நாம் சென்று கடவுளை தரிசிப்பதென்றால், முதலில் நம் மனம் பக்குவப்பட வேண்டும். எனவே, நமக்குள் இருக்கும் கடவுளை தரிசிப்பதற்கு முன்பாக, நமக்கு உருவ வழிபாடு அவசியமாகிறது. அதனால்தான், நமக்குள் இருக்கும் இறைவனே அர்ச்சா மூர்த்தியாக எண்ணற்ற பல தலங்களில் எழுந்தருளியிருக்கிறார். அதிலும் நம் புண்ணிய பாரதத்தில் புனிதத் தலங்களுக்குக் குறைவேயில்லை.அத்தகைய புனிதத் தலங்களில் ஒன்று நாகமங்களா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செளம்ய கேசவர்!

த்தலத்தில் அருளும் பெருமாளின் திருநாமம் அருள்மிகு சௌம்ய கேசவர். பெரும்பாலும் பெருமாள் தம் வலக் கரத்தில் சுதர்சனமும் இடக் கரத்தில் சங்கும் திகழும். ஆனால், இந்தத் தலத்தில் பெருமாள் வலக் கரத்தில் சங்கும் இடக் கரத்தில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். சகல விதமான நாக தோஷங்களையும், மந்திர பிரயோகத்துடன் ஏவும் அஸ்திரங்களின் மந்திர சக்திகளையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் சங்கு அது.   

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவி - பூமிதேவி பிராட்டியர் இருப்பதாக ஐதீகம். பெருமாளின் நாபிக் கமலத்தில் பிரம்மனுக் குப் பதிலாக ஆதிசேஷன் காட்சி தருகிறார். எனவே, இத்தலத்து பெருமாளை சேவித்தால், சர்ப்ப தோஷங்கள் மட்டுமல்லாமல், சகலவிதமான தோஷங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

திருத்தலமும் திருக்கதையும்

காபாரதத்தில் கர்ணனுக்குக் கிடைத்த வலிமை மிக்க அஸ்திரம் நாகாஸ்திரம். அதைக் கொண்டுதான் அர்ஜுனனை வீழ்த்த வேண்டும் என்பது கர்ணனின் எண்ணம். கண்ணனுக்கும் அது தெரியும். எனவே குந்தியை அனுப்பி, ஒருமுறைக்கு மேல் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் பிரயோகிக்கக்கூடாது என்று வரம் பெற்று வரச் செய்தார்.  

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

`எனினும், எதிரணியில் இருக்கும் பீஷ்மர், துரோணர் போன்ற மகாரதர்கள், மந்திர பிரயோகம் செய்து ஏவும் அஸ்திரங்கள் பாண்ட வர்களை அழித்துவிட்டால் என்னசெய்வது?’ என்று சிந்தித்தார் பகவான். ஒரு கணம்தான். அடுத்த நொடியே உலகத்திலுள்ள அனைத்து நாகங்களின் சக்தியையும், அஸ்திரங்களின் மந்திர ஆற்றல்களையும், அனைத்து விதமான தோஷங்களையும் தன்னிடம் கவர்ந்து, பாஞ்சஜன்யம் என்ற பெயர் கொண்ட தம்முடைய சங்கினுள் அடக்கிக்கொண்டார். அதையே வலக்கரத்தில் ஏந்திய திருக் கோலத்தில் இங்கே அருள்பாலிக்கிறார்.

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

புவனேஸ்வரி மண்டபம்

ருவறைக்கு முன்புள்ள மண்டபம் புவனேஸ்வரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நாகங்கள், மந்திரங்கள் போன்ற அனைத்து தோஷங்களும் பகவான் கிருஷ்ணரின் பாஞ்சஜன்யம் என்ற சங்குக்குள் அடங்கியிருப்பதை உணர்த்துவது போல், மண்டப விதானத்தின் நடுவில் பாஞ்சஜன்யம் என்னும் சங்கும், அதற்குக் கட்டுப்பட்டு சுருண்டிருக்கும் ஒரு நாகமும், சுற்றிலும் 108 சங்குகள் மற்றும் தாமரை மொட்டுகள் என்று, நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது. தோஷ நிவர்த்திக்காக வேண்டிக்கொள்பவர்கள் இந்த மண்டபத்தில்தான் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

நாகர்களுக்கு நெய்தீபம்

ருவறைக்கு வெளியே வலது மூலையில், சாளக்கிராமத்தினாலான இரண்டு நாகர் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.  

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

இந்த நாகர் திருவுருவங்களுக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

கருட ஸ்தம்பம்

ஸ்ரீ
ஜெகதேவராயர் என்ற ஹொய்சாள மன்னரால் கட்டப் பட்ட இந்தத் திருக் கோயில், நுட்பமான வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது.   

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

கோயிலின் கோபுரத் துக்கு முன்பாக கருட ஸ்தம்பம் அமைந்திருக் கிறது. தாம் கர்நாடக தேசத்தில் தங்கியிருந்த போது, பல முறை நாக மங்களா கோயிலுக்கு விஜயம் செய்து பெரு மாளை சேவித்த ஸ்ரீராமாநுஜரே இந்தக் கருட ஸ்தம்பத்தை நிர்மாணித்தாராம்.

யுகாதி மற்றும் மகா சிவராத்திரியன்று கருட ஸ்தம்பத்தின் உச்சியில் தீபம் ஏற்றும் வைபவம் நிகழும்.  தீபம் உச்சியை அடையும் வரை அணைவதேயில்லை என்பது அற்புதமான விஷயம் என்கிறார்கள் பக்தர்கள்.

அறுகோண வடிவில் கருவறை

பெ
ருமாளின் கருவறை, அறுகோண வடிவில், ஒவ்வொரு கோணத்தின் மூலையிலும் மந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டு, அளவற்ற ஆற்றல் கொண்டு விளங்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் விசேஷம் என்று சொல்கிறார்கள். 

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!மூலவரின் கருவறைக்கு வலப் புறத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் ருக்மிணி, சத்யபாமா சமேதராகக் காட்சி தருகிறார். இடப்புறத்தில் ஆதிசேஷன்மீது அமர்ந்த கோலத்தில், அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் சாந்தம் தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார்.

ஐந்து தலங்களில் ஒன்று

ஸ்ரீ
ராமாநுஜரின் முதல் சீடரான முதலியாண்டான், குருதேவரின் உத்தரவின்படி கர்நாடகத்தில் பணி செய்த ஐந்து நாராயணத் தலங்களுள் நாகமங்களா ஆலயமும் ஒன்று.

மற்றவை: கீர்த்தி நாராயணர் (தலக் காட்), நம்பி நாராயணர் (தொண் டனூர்), கேசவ நாராயணர் (பேளூர்), வீர நாராயணர் (கதக்) ஆலயங்கள்.

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!

பஞ்ச லட்சுமி தலம்

- திருநாராயணன் -


இந்தத் தலத்துக்கு வந்து  பெருமாளை சேவிப்பவர்களுக்கு, நாகதோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கி, சர்வ மங்கலங்களும் உண்டாகும். ஆகவேதான் இந்த க்ஷேத்திரத் துக்கு நாகமங்களா என்று பெயர்.

யுகாதி, சித்ரா பௌர்ணமி திருநாள்களில் காலையில் சுமார் மூன்றரை நிமிடங்கள் தனது கிரணங்களால் பெருமாளின் திருவடிகளைத் தழுவி சேவிக் கிறார் சூரியபகவான். 

பஞ்ச லட்சுமிதிருத்தலம் நாகமங்களா!தோஷங்களால் பாதிக்கப் பட்ட அன்பர்கள், முதல்நாள் கோயிலுக்கு வந்து சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பிறகு அவர்களுக்காக ஒரு மண்டல காலம் பூஜை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை, செவ்வாய் தோஷம், எதிரிகள் மற்றும் கடன்களால் தொல்லை போன்ற பல பிரச்னைகளுக்கும் சுவாமியின் திருவருளால் தீர்வு கிடைக்கும் அற்புதமான க்ஷேத்திரம் இது.

இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக ஸ்ரீசௌம்யகேசவரும், ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீலக்ஷ்மிபிராட்டியுடன் ஸ்ரீநரசிம்மரும் காட்சி தருகிறார்கள். இதையொட்டியே இந்தத் திருத்தலம் `பஞ்ச லக்ஷ்மி க்ஷேத்திரம்’ என்று ஞானநூல்களால் போற்றப்படுகிறது.

‘பஞ்சகன்ய ஸ்மரேநித்யம் சர்வ பாப விமோசனம்’ என்று சொல்வார்கள். அதாவது அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ஆகியோரை தியானித்தால் பாவங்கள் நீங்கும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். இங்கே வந்து பெருமாளை வழிபடுவதுடன், இங்கு அருள்பாலிக்கும் ஐந்து பிராட்டிமார்களையும் தரிசிப்பதால், பாவங்கள் நீங்குவதுடன், சகல சௌபாக்கியங்களும் பெருகும்.

பக்தர்கள் கவனத்துக்கு...

விழாக்கள்:
யுகாதி கருடசேவை, ரதசப்தமி, மகா சிவராத்திரியன்று லட்ச தீபம் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் பகல் 1.30 மணி வரை; மாலை 4.30 முதல் 9 மணி வரை.

எங்கே இருக்கிறது?:
கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது நாகமங்களா.

தங்கும் வசதி: நாகமங்களாவிலேயே சாதாரண மற்றும் குளிர் சாதன வசதி கொண்ட விடுதிகள் உள்ளன.

அருகிலுள்ள தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்: மேல்கோட்டை,  தொண்டனூர், ஸ்ரீரங்கப்பட்டிணம், கஞ்சாம்.