Election bannerElection banner
Published:Updated:

`உங்க அரசியலை வெளியே வெச்சிக்கோங்க!' - ஆர் .எஸ்.எஸ்ஸுக்கு எதிராக தேவசம் போர்டு அமைச்சர் ஆவேசம்

`சபரிமலை புண்ணிய பூமியை கலவர பூமியாக்க முயற்சிக்கக் கூடாது. உங்கள் அரசியலை வெளியே வைத்துக்கொள்ளுங்கள்' என பா.ஜ.க-வினருக்கு எதிராக கேரள தேவசம் போர்டு அமைச்சர் காட்டமாகப் பேசினார் 

`உங்க அரசியலை வெளியே வெச்சிக்கோங்க!' -  ஆர் .எஸ்.எஸ்ஸுக்கு எதிராக தேவசம் போர்டு அமைச்சர் ஆவேசம்

தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், "கடந்த சில நாள்களாக அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் நிலக்கல்லிலும், பம்பையிலும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பிரச்னை செய்தார்கள். பெண்கள் மீதும், பெண் செய்தியாளர்கள் மீதும், அரசுப் பணியாளர்கள், அரசு பஸ்கள் மீதும் நடத்திய தாக்குதல்களை அனுமதிக்க முடியாது. நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் இன்று நடந்த பிரச்னைகளை உலகமே பார்த்தது. இவ்வளவு பிரச்னைக்கும் மத்தியில் அமைதியைத் தேடி சபரிமலை வருபவர்களுக்கு, பயத்தைக் கிளப்பினார்கள். எனவே, ஆர் எஸ்.எஸ் இந்த பிரச்னையிலிருந்து பின்வாங்க வேண்டும். சுப்ரீம்கோர்ட் விதியை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.

சபரிமலை புண்ணிய பூமியை கலவர பூமியாக்க முயற்சிக்கக் கூடாது. உங்கள் அரசியலை வெளியே வைத்துக்கொள்ளுங்கள். வரும் 19-ம் தேதி மறு சீரமைப்பு செய்ய வேண்டுமா என்பதுகுறித்து தீர்மானிப்போம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு