நமது பாரத பூமியில் எண்ணற்ற பெருமாள் கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள் திவ்யதேசங்கள் என்று போற்றப்படுகின்றன. திவ்ய தேசங்களுக்குப் பெருமையே, அவை ஆழ்வார்களால் பாடபெற்றதுதான். ஆழ்வார்களுக்கு பெருமையே, அவர்கள் தங்கள் திவ்யப்பிரபந்தங்களால் திவ்ய தேசங்களைப் பாடினர் என்பதுதான். ஆக திவ்யதேசங்களும் திவ்யப்பிரபந்தங் களும் பிரிக்க முடியாதவை ஆகும்.

இப்படி இருக்க, எந்தக் கோயிலையும் பாடாத ஒரு பதினோரு பாடல்களைப் பெரியோர் திவ்ய பிரபந்தங்களில் சேர்த்துள்ளனர் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்!

ஆம், பன்னிரு ஆழ்வார்களுள் மதுரகவி ஆழ்வார் திருவாய் மலர்ந்த `கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் திவ்ய பிரபந்தத்தில் எந்தக் கோயிலைப் பற்றியும் அவர் பாடவில்லை. அவ்வளவு ஏன்? எந்தப் பெருமாளைப் பற்றியும் அவர் பாடவே இல்லை.

நாலாயிர திவ்யப்பிரபந்தம் முழுவதும் பகவானையே அன்றோ விஷயமாகக் கொண்டதாக இருக்கவேண்டும்?

அப்படியன்றி, பெருமாளைக் குறித்து எந்தப் பாடலையும் பாடாத ஆழ்வாரின் திருப்பெயரோ, மதுரகவி ஆழ்வார்!

இதுகுறித்த மகத்துவம் என்ன?

பேரொளியைக் கண்டார்!

ஆழ்வார்கள் பதின்மரும் ஆண்டாளும் அருளிய திவ்ய பிரபந்தங்கள் அனைத்தும் எம்பெருமானை விஷயமாகக் கொண்டவை என்பது உண்மைதான். ஆனால், மதுர கவியாழ்வார் ஒருவர் அருளிய பிரபந்தம் ஆழ்வார்களுள் ஒருவரான நம்மாழ்வாரை மட்டுமே விஷயமாகக் கொண்டது.

நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் ஒரே காலத்தில், அடுத்தடுத்த ஊர்களில் வாழ்ந்தவர்கள். நம்மாழ்வாரைவிட வயதில் பெரியவராக இருந்தபோதும் அவருக்குச் சீடராக இருந்து அனைத்துப் பணிவிடைகளும் செய்தவர் மதுரகவிகள்.

நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார் திருநகரிக்கு அருகே உள்ள திருக்கோளூர் எனும் ஊரில் அந்தணக் குலத்தில் சித்திரை மாதம் சித்திரை நாள் பிறந்தவர் மதுரகவிகள். மதுரகவிகள் எப்போதும் பல புண்ணிய பூமிகளுக்கு யாத்திரையாகச் செல்வார். அப்படி ஒரு முறை அவர் வடதேசத்துக்குச் சென்றிருந்தபோது, தமது ஊரான திருக்கோளூரில் உள்ள பெருமாளைத் தொழுவதற்காக அங்கிருந்து தென்திசை நோக்கித் தொழுதார். அப்போது அத்திசையிலிருந்து வரும் ஒரு பேரொளியைக் கண்டார்.

அந்த ஒளி என்னவென்று தெரிந்துகொள்ள ஆவல் கொண்டு, அச்சுடரை நோக்கி நடக்க ஆரம்பித்து நெடுவழி பயணித்து பல ஊர்களைக் கடந்து ஆழ்வார் திருநகரியை வந்தடைந்தார். அச்சோதி, அவ்வூரின் கோயிலில் இருந்த ஒரு புளியமரத்தில் அமர்ந்திருந்த மாறன் (நம்மாழ் வாருக்கு பெற்றோர் இட்ட பெயர்) என்ற பாலகனிடத்தில் இருந்து வந்ததைக் கண்டு வியந்தார்.

ஆனால், அப்பாலகன் கண் திறக்காமலும் கை-கால்களை அசைக்காமலும் இருந்ததைக் கண்டு, ஏதோ சில வழிகளால் அச்சிறுவனை கண் திறக்கவைத்தார். மாறன் அப்போது மதுரகவி ஆழ்வார் கேட்ட சில கேள்விகளுக்கு வேதாந்தங்களின் அடிப்படையில் உடனடியா கப் பதில் சொல்ல, மாறனின் ஞான வைபவத்தைக் கண்டு அப்போதே அவருக்கு சீடராகிவிட்டார் மதுரகவிகள்.

எப்படி ராமாயணத்தில் சத்துருக்னன் ராமனை நோக்காமல் பரதனுக்கே பணிவிடை கள் செய்து வந்தானோ, அதே போல் வாழ்ந்து, தொடர்ந்து நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி முதலான பிரபந்தங்களை ஏடுபடுத்தினார் மதுரகவிகள். நம்மாழ்வாரையே தெய்வமாகக் கொண்டு ‘கண்ணிநுண்சிறுத்தாம்பு’ என்கிற சிறு பிரபந்தத்தையும் அருளிச்செய்யலானார்.

நாலாயிர திவ்யப் பிரபந்தங்களுக்குள் மதுர கவி ஆழ்வார் அருளிச்செய்த ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எப்படிச் சேர்ந்தது என்ற கேள்வி எழுந்ததை முன்னமே பார்த்தோம். இதற்குப் பதிலை வைணவ சம்பிரதாயத்தின் ஒப்பற்ற ஆசார்யரான மணவாள மாமுனிகள் தம்முடைய உபதேசரத்தினமாலை எனும் பிரபந்தத்தில் அருளிச்செய்துள்ளார்.

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை - ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து.

‘தாற்பரியம் தேர்ந்து அருளிச்செயல் நடுவே ஆரியர்கள் சேர்வித்தார் என்று மணவாள மாமுனிகள் அருளிச் செய்திருக்கிறார்.

அதாவது, கண்ணிநுண் சிறுத்தாம்பின் தாத்பர்யத்தை அறிந்துகொண்ட நாதமுனிகள் என்கிற ஆசார்யர் (இவரும் நம்மாழ்வாருடைய சீடர்), அது எம்பெருமானைப் பற்றிய தாக அல்லாமல், நம்மாழ்வாரைப் பற்றியதாக இருந்த போதும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தினுள் சேர்த்தார் என்ற பொருள் கிடைக்கிறது.

நாதமுனிகளும் நாலாயிர திவ்ய பிரபந்தமும்

நாதமுனிகள் என்பவர், நம்மாழ்வார் காலத்துக்குப் பிற்பட்டவர். அவர் சிதம்பரம் அருகில் உள்ள வீரநாராயணபுரம் (காட்டு மன்னார்கோயில்) என்கிற ஊரில் பிறந்தவர். அவர் காலத்தில் நம்மாழ்வாருடைய பிரபந்தங் களும் மற்றையாழ்வார்கள் அருளிச்செய்தப் பிரபந்தங்களும் மறைந்து போயிருந்தன.

ஒரு முறை, அவ்வூருக்கு திருநாராயணபுரத்தில் இருந்து வந்த இரு வைணவர்கள், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் இருந்து ‘ஆராவமுதே’ என்று தொடங்கும் ஒரு பத்துப் பாடல்களை பாடினர்.

அவற்றின் இனிமையைக் கண்ட நாதமுனி கள் “குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரம்” என்ற ஈற்றுப்பாடலின் சந்தையைக் கவனித்து, அவர்களிடத்தில் ஆயிரம் பாடல்களையும் தமக்கு கற்றுத்தருமாறு வேண்டினார்.

ஆனால், அவர்கள் தங்களுக்கு அந்த பத்துப் பாடல்கள் மட்டுமே தெரியும் என்று கூறிச் சென்றுவிட்டனர். அதே ஈற்றுப் பாடலில் `குருகூர்ச்சடகோபன் சொன்ன’ என்ற சந்தையை உணர்ந்த நாதமுனிகள், அந்தக் குருகூருக்குச் (ஆழ்வார் திருநகரி) சென்றால் ஆயிரம் பாடல்களையும் பெற்றுவிடலாம் என்றெண்ணி குருகூருக்கு விடைகொண்டார்.

ஆனால், அவ்வூரிலும் ஒருவருக்கும் அந்தப் பாடல்களைப் பற்றி ஏதும் தெரியவில்லை. அதனால், நாதமுனிகள் மிகவும் வருத்தமுற்று இருக்கையில், அவ்வூரில் வாழ்ந்து வந்த மதுரகவிதாசர் என்ற ஒரு முதியவர் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

அதாவது தங்கள் மூதாதையரில் ஒருவரான மதுரகவிகள் இயற்றிய கண்ணிநுண்சிறுத்தாம்பு எனும் பிரபந்தத்தை, நம்மாழ்வார் அமர்ந் திருந்த புளியமரத்தடியில் நின்று கொண்டு 12,000 முறை பக்தியுடன் ஓதினால், நம்மாழ்வார் தாமே தோன்றி திருவாய்மொழி ஆயிரம் பாடல்களையும் அருள்வார் என்று அவருடைய பெரியவர்கள் சொன்னதை நாதமுனிகளிடம் பகிர்ந்துகொண்டார்.

அதைக்கேட்ட நாதமுனிகளும் எப்படியா வது அந்த ஆயிரம் பாடல்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற உறுதி பூண்டு கண்ணி நுண்சிறுத்தாம்பு பிரபந்தத்தை இடைவிடாமல் 12,000 முறை ஓதி முடித்தார். அவருடைய தவத்துக்கு மெச்சி நம்மாழ்வாரும் அவர் முன் தோன்றி தாம் அருளிய திருவாய்மொழி மற்றும் மற்றையாழ்வார்கள் அருளிய அனைத்துப் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்கு யோக தசையில் அருளினார்.

நாலாயிரம் பாசுரங்களும் மறைந்திருந்த போதும், கண்ணிநுண்சிறுத் தாம்பு மறையாமல் இருந்தமை, அதனை 12,000 முறை நாதமுனிகள் ஜபித்தபடியாலேயே நம்மாழ்வார் நாதமுனிகள் முன் தோன்றி நாலாயிரம் பாசுரங்களையும் வழங்கியமை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே, நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பை நாலாயிரத்தில் சேர்த்தார்.

அற்புதமான கண்ணிநுண் சிறுத்தாம்பிலிருந்து ஒரு பாசுரத்தை அனுபவிப்போம்!

பெருமாயன் என்னப்பன்...

நம்மாழ்வாரிடத்தில் ஈடுபாடு கொண்டு திகழ்ந்த மதுரகவிகள், தமது பிரபந்தத்தைத் தொடங்கும்போது, `கண்ணிநுண்சிறுத்தாம்பினால்கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன் என்னப்பன்’ என்று நம்மாழ்வார் ஈடுபட்ட அதே வெண்ணெய்க் களவு கண்ட சரித்திரத்தை குறித்தே தொடங்கினார்.

ஏனெனில், எம்பெருமானுடைய மற்ற அவதாரங்களை விட்டு, கிருஷ்ணாவதாரத்திலும் மற்ற சரித்திரங்களை விட்டு, நம்மாழ்வார் மிகவும் ஈடுபட்டிருந்த கண்ணபிரானுடைய வெண்ணெய்க் களவு கண்ட சரித்திரத்தையே எடுத்துக் கழிக்கத்தான்.

கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே

பகவானையே பலபடியாக அனுபவித்த ஆழ்வார்களும், இவ்வளவு ஈரச்சொற்களால் கண்ணபிரான் வெண்ணெய்க் களவு கண்டு, அதற்கு அகப்பட்டுக்கொண்டு சிறுத் தாம்பினால் கட்டுண்டதை அனுபவிக்கவில்லை என்றே சொல்லலாம்.

சரி! கண்ணபிரானை ‘என்னப்பன்’ என்றது எதற்காக?

என் அப்பன் என்றால் எனக்கு உபகாரம் செய்பவன் என்றன்றோ பொருள். இவர் தமக்கு உபகாரகராக நினைத்திருப்பது நம்மாழ்வாரையன்றோ? கண்ணனை உபகாரகன் என்று கூறியது ஏன்?

இந்தக் கேள்விக்கு நஞ்சீயர் என்கிற ஆசார்யர் ஓர் உதாரணத் தைக் காட்டி மிக அழகாக விளக்கம் தருகிறார்.

ஒருவன் மற்றொரு ஊருக்குப் போகவேண்டும் என்று புறப் படுகிறான். வழியில் பயணக் களைப்புக் காரணமாக ஒதுங்கு வதற்கு ஏதேனும் இடம் கிடைக் குமா என்று பார்க்கிறான்.

அப்போது நீரும் நிழலும் உள்ள நல்ல இடம் ஒன்றைக் காண் கிறான். இளைப்பாற இதுவே நல்ல இடம் என்று அங்கேயே தங்குகிறான். அப்படி அவன் அங்கே தங்கியபடியால் அதுவே அவன் போய்ச்சேரவேண்டிய ஊர் என்றாகிவிடுமா?

அதுபோலவே மதுரகவி களுக்கும் போய்ச் சேரவேண்டிய இடம் நம்மாழ்வாராக இருந்தாலும் இடையில் பகவானை என்னப்பன் என்றதில் தவறேதுமில்லை என்கிறார் நஞ்சீயர்.

இங்கு ‘என்னப்பனில்’ என்பதற்கு, `என்னப்பனான கண்ணனைக் காட்டிலும்’ என்ப துவே பொருள்.

ஆனால், சென்ற நூற்றாண் டில் காஞ்சியில் வாழ்ந்த உ.வே. மஹாவித்வான் பிரதிவாதிபயங்கரம் அண்ணங் கராசார்ய ஸ்வாமி, மிகவும் நயம்பட ஒரு பொருள் உரைக்கிறார்.

மதுரகவியாழ்வார் பாசுரம் பாடத் தொடங்கும்போது நம்மாழ்வாரைக் கூறாமல் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்’ என்று கண்ணபிரானைக் கூறவே கண்ணபிரான் அவர் முன் வந்து நின்றானாம்.

அவனை ‘என்னப்ப’ என்றதும் அவருக்கு அருகில் வர ஆரம்பித் தானாம். உடனே மதுரகவிகள் ‘நான் உன்னை அழைக்கவில்லை, நில்’ என்றாராம்... என்று மிகவும் சுவையா கச் சொல்லுவார் அவர்!

எவ்வளவுதான் கண்ணனுடைய நாமம் இனிமையாக இருந்தாலும் அதைச் சொல்வதைவிடவும் நம்மாழ் வாருடைய நாமத்தை சொல்வதுதான் தமக்கு அமுதம் போல மிகமிக இனிமை யாக உள்ளது என்று தெரிவிக்கிறார் மதுரகவிகள்.

இதேபோல் அந்தப் பிரபந்தம் முழுவதும் நம்மாழ்வாரைக் குறித்தே தம்முடைய பெயருக்கு ஏற்றதைப்போல் இனிமையான பாடல்களைப் பாடி முடித்தார் மதுரகவிகள்.

தாமிரபரணியின் தண்ணீரைக் காய்ச்சினால்...

இப்படியே காலம் செல்கையில், நம்மாழ்வார் இயற்கை எய்தினார். மிகவும் கலங்கி வருத்தப்பட்டார் மதுரகவிகள். தம் குருவான நம்மாழ்வாரை ஒரு விக்ரஹ வடிவில் வைத்து ஆராதனைகள் செய்ய ஆசைப் பட்டார். இந்த நிலையில், அவரது கனவில் தோன்றிய நம்மாழ்வார், ஆழ்வார்திருநகரியில் ஓடும் தாமிர பரணியின் தண்ணீரை எடுத்துக் காய்ச்சினால், தாம் ஒரு விக்ரஹ வடிவில் வருவதாகத் தெரிவித்து மறைந்தார். மதுரகவிகளும் அப்படியே செய்ய, ஒரு விக்ரஹம் கிடைத்தது. ஆனால், அந்த விக்ரஹம் ஆழ்வாரைப் போல் இல்லாமல் த்ரிதண்டத்தோடு கூடி இருந்ததால், மீண்டும் கவலையுற்றார் மதுரகவிகள்.

நம்மாழ்வார் மறுபடியும் அவர் கனவில் தோன்றி, அவர் பவிஷ்யதாசார்யர்(பின்னாளில் தோன்றப் போகும் குரு - ஸ்ரீராமாநுஜர்) என்றும், அவரே தான் தாம் திருவாய்மொழியில் `பொலிக பொலிக பொலிக கலியும் கெடும் கண்டுகொண்மின்!’ என்று சொன்னபடி, கலியுகத்தில் மிகப்பெரிய குருவாகத் திகழப்போகிறார் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், ‘அவரால் உலகத்தில் பலர் நல்வழிக்கு ஆளாகப்போகின்றனர்’ என்றும், அந்த விக்ரஹத்தை தம்மைப்போலவே நினைத்து ஆராதிக்கவேண்டும் என்றும் கூறியருளினார். மேலும், மறுபடியும் தாமிர பரணியின் நீரைக் காய்ச்சினால் தாமே விக்ரஹ வடிவில் வருவதாகவும் கூறி மறைந்தார்.

மதுரகவிகளும் அப்படியே செய்ய, நம்மாழ்வார் விக்ரஹ வடிவில் தோன்றினார். அந்த இரு விக்ரஹங் களையும் மதுரகவிகள் தம்காலம் வரை ஆராதித்து வந்தார்.

இன்றைக்கு, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக் கோயிலில் நாம் கண்டு மகிழும் நம்மாழ்வாரும் ராமாநுஜரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மதுரகவிகளுக்கு கிடைத்த விக்ரஹங்கள்தான்.

ஆக, இன்று நமக்கு நாலாயிர திவ்யப்பிரபந்தம் கிடைத்ததற்கும், ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார் மற்றும் ராமாநுஜர் விக்ரஹங்கள் கிடைப் பதற்கும் முழுகாரணம் மதுரகவிகளே என்றால் அது மிகை ஆகாது. மதுரகவிகளை தியானித்தும் அவர் வணங்கிய நம்மாழ்வாரை தியானித்துக் கொண்டும் அவர் வணங்கிய திருமகள்கேள்வனை தியானித்துக் கொண்டும் நம்முடைய காலத்தைக் கடத்துவோமாக!

மாட்டுப்பெண் என்றால்...

மருமகளை `மாட்டுப்பெண்’ என்று அழைக்கும் சம்பிரதாயம் உண்டு. இந்தப் பெயர் எப்படி வந்தது?

‘மானாட்டுப் பெண்’ என்பதையே அப்படிச் சொல்கிறார்கள். அதாவது மணம் செய்து அழைத்து வந்த பெண் என்பது பொருள். ‘மருமகளாகக் கொண்டு மானாட்டுப் புறம் செய்யுங்கொலோ’ என்பது பெரியாழ்வார் வாக்கு.