மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா?’

நாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா?’
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா?’

நாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா?’

தழ் முடிக்கும் பரபரப்பிலிருந்த நாம், நாரதரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். சற்றைக்கெல்லாம் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர். வந்தவருக்கு வெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்தோம்.   

நாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா?’

 மோரைப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாரதர், ‘`அப்பப்பா..! இப்பவே வெயில் இப்படிச் சுட்டெரிக்கிறதே. திருச்செந்தூருக்கு செந்திலாண்டவரை தரிசிக்க வரும் பக்தர்கள் எப்படித்தான் இந்த வெயிலைச் சமாளிக்கிறார்களோ?’’ என்றார்.

‘`ஏன், கோயிலில் மண்டபம் எதுவும் இல்லையா?’’

‘`சில மாதங்களுக்கு முன்பு வள்ளிக்குகைக்கு எதிரிலிருந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டதும், பாதுகாப்பு கருதி கோயிலைச் சுற்றியிருந்த பிராகார மண்டபங்கள் இடிக்கப்பட்டு, வெறிச்சோடி காணப்படுகிறது.

கடைகளையும் அப்புறப்படுத்தி விட்டனர். சுற்றிலும் கல்மண்டபம் அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள்தான் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை’’ என்றார்.      ‘‘அதற்கான முன்னேற்பாடுகளாவது தொடங்கப்பட்டுள்ளனவா?’’ ‘‘அறநிலையத் துறையின் மதுரை கட்டுமான நிர்வாகப் பொறியாளர் தலைமையில், பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்து விட்டுச் சென்றிருக்கிறார்களாம். சுற்றிலும் கல்மண்டபம் அமைப்பதற்கான முதல்கட்ட ஆய்வு முடிந்துள்ளது என்கிறார்கள். 

நாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா?’இது இப்படியென்றால், சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்கென்று உள்ள சஷ்டி மண்டபத்தின் நிலை வேறுவிதமாக உள்ளது’’ ‘‘ஏன், சஷ்டி மண்டபத்தில் என்ன பிரச்னை?’’
‘‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்? சஷ்டி மண்டபத்தின் மேற்கூரையில் பல இடங்களில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டு, மோசமான நிலையில்தான் இருக்கிறது. சஷ்டி விரத நாள்களில் மட்டுமல்லாமல், மற்ற நாள்களிலும் பக்தர்கள் இங்கே தங்கி ஓய்வெடுப்பார்கள்.

சஷ்டி விரதக் காலங்களில் உற்சவருக்கு அபிஷேகம் நடப்பதுகூட இந்த மண்டபத்தில் தான். தற்போது இந்த மண்டபத்தில் உட்காரக்கூட பக்தர்கள் பயப்படுகிறார்கள்’’ என்ற நாரதர், அடுத்துச் சொன்ன செய்தி பகீர் ரகம்.
‘‘பக்தர்கள் தங்கும் விடுதியில் குளியலறை மற்றும் கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் பைப் மூலமாக நேரடியாகக் கடலில் விடும் அவலம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைக் கண்டித்து உள்ளூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், தற்காலிகமாக இரண்டு, மூன்று நாள்களுக்குக் கழிவு நீரைக் கடலில் விடுவதை நிறுத்திவைப்பார்களாம்.

பிறகு, மறுபடியும் பழையபடியே கடலில் கலக்கவிடும் அவலம் தொடருமாம். இதனால், விவரம் அறிந்த பக்தர்கள் கடலில் குளிப்பதற்கு முகம் சுளிக்கின்றனர்’’ என்றார். ‘‘சரி, துலாபார முறைகேடு பற்றி கோயில் நிர்வாகத் தரப்பில் விசாரித்துச் சொல்வதாகச் சொன்னீரே...’’என்று நாரதருக்கு நினைவுப்படுத்தினோம். ‘`ஆமாம் விசாரித்தேன். இதுபற்றி கோயில் இணை ஆணையரை நேரில் சந்தித்துப் பேசினோம். ‘துலாபாரத்தில் பக்தர்கள் எடைக்கு எடையாகக் கொடுக்கும் பொருள்களுக்கான விவரத்தை ரசீதுகள் மற்றும் பதிவு நோட்டுகளில் எழுதி, இரண்டிலும் உள்துறைக் கண்காணிப்பாளரிடம் கையெழுத்து வாங்கவேண்டும்.

ரசீது போடும் ஊழியர் துலாபாரம் நடக்கும் இடத்தில் இருப்பார். உள்துறை அலுவலகம் கோயிலின் உள்பிராகாரத்தில் உள்ளது. கூட்ட நேரங்களில் உள்ளே செல்வதில் சிரமம் இருக்கும். அதனால் தான், பக்தர்களை சற்றுநேரம் காத்திருக்கச் சொல்லவேண்டிய நிலை. ஆனால், பக்தர்கள் பொறுமையில்லாமல் கிளம்பிவிடுகிறார்கள். அதனால், சில நேரங்களில் துலாபாரத்தில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை, பதிவேட்டில் பதியப்படாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது’ என்றார் இணை ஆணையர். அத்துடன், ‘கடந்த 2016 ஜூலை முதல் 2017 ஜூலை வரை துலாபாரத்தில் பெறப்பட்ட பொருள்களை முறையாகப் பதிவேட்டில் ஏற்றாமல் முறைகேடு செய்த ஊழியர்களைக் கண்டுபிடித்து, இருவருக்கும் தலா ரூ.4 லட்சம் அபராதம் விதித்ததுடன், ஒருவரை விடுதியிலும் மற்றவரை அலுவலகத்தில் பணிமாற்றம் செய்திருக்கிறோம்’ என்றும் பகிர்ந்து கொண்டார்’’ என்ற நாரதரிடம், ‘‘முறைகேடுகளைக் கண்டுபிடித்து அபராதம் விதிப்பது இருக்கட்டும். முறைகேடுகள் நடக்காமல் இருப்பதற்கு ஏதும் ஏற்பாடு செய்திருக்கிறார்களா?’’

 ‘‘அதுபற்றியும் கேட்டேன். அதற்கு அவர், ‘இதுவரை பக்தர்களுக்கு, உள்துறைக் கணக்குக்கு, தணிக்கைக் கணக்குக்கு என்று மூன்று ரசீதுகள் கொண்ட ரசீது நோட்டுக்குப் பதிலாக, ஒரே ரசீது கொண்ட `ரசீது நோட்டு’ அச்சடித்து வழங்கயிருக்கிறோம். மேலும், எந்த ஊழியர் மீது புகார் சொல்லவேண்டுமென்றாலும், பக்தர்கள் நேரடியாகக் கோயில் அலுவலகத்துக்கு வந்து சொல்லலாம்’  என்று கூறினார்’’ என்றார் நாரதர்.

‘‘கோடைக்காலம் வரப்போகிறதே. பக்தர்கள் வெயிலில் மிகவும் சிரமப்படு வார்களே... அவரிடம் மண்டப கட்டுமானப்பணிகள் குறித்துக் கேட்டீரா?’’ ‘‘மண்டபம் பற்றிக் கேட்டதற்கு, ‘சுற்றுப் பிராகார மண்டபம் கருங்கல்லினால் கட்டப்படுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. அதற்கான வரைபடம் தயாரிக்கும் பணி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரைபடம் ரெடியானதும், சென்னையிலிருக்கும் ஆணையருக்கு அது அனுப்பப்பட்டு, அவருடைய ஒப்புதல் கிடைத்ததும் மண்டபம் கட்டும் பணி தொடங்கப்படும்’ என்று கூறினார்’’ என்ற நாரதர், தமக்கு வந்த வாட்ஸப் தகவல் ஒன்றை நமக்குக் காட்டினார்.

`நெல்லை மாவட்டம், செங்கோட்டை வட்டம், பண்பொழியில் அமைந் துள்ளது திருமலைக்கோயில். திருமலைக்குமார சுவாமியாக முருகன் அருளும் இந்தக் கோயிலில் பணியாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்குப் பதிலாக இதுவரை புதிய ஊழியர்களை நியமிக்கவில்லை. தற்போது 25-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.’ இதுதான் அந்தத் தகவல்  ‘‘எனில், அடுத்துப் பண்பொழிலுக்குப் பயணமா?’’ என்று நாம் கேட்க, ‘‘ஆமாம்! டிக்கெட் புக்கிங் செய்ய ஏற்பாடு செய்யும்’’ என்று ஆணையிட்டுவிட்டு நம் பதிலுக்குக் காத்திருக்காமல் புறப்பட்டுவிட்டார் நாரதர்.

- உலா தொடரும்...

படம்: ஏ.சிதம்பரம்