மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?

கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?

கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?

? ஆரத்தி எடுப்பது ஏன்? மருத்துவமனையில் குழந்தை பிறந்து, வீட்டுக்கு வரும் தாய்க்கும் குழந்தைக்கும் தீட்டு கழியாத நிலையிலும் ஆரத்தி எடுக்கிறோம். அதேபோல் திருமணம், சஷ்டியப்த பூர்த்தி முடிந்து வரும் தம்பதிக்கும் ஆரத்தி எடுக்கிறோம். இது சரியா?

- கீர்த்தனா, தூத்துக்குடி 

கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?

ஆரத்தி என்பது திருஷ்டி கழிப்பதுபோல்தான். மனிதர்களுக்கு மட்டும்தான் ஆரத்தி எடுக்கவேண்டும் என்பதில்லை. சகல ஜீவராசி களுக்கும் ஆரத்தி எடுக்கலாம். பிறந்த குழந்தைக்கு தீட்டு போன்ற தோஷம் எதுவுமில்லை. மேலும், பிறந்த குழந்தையை கிருமிகள் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு ஆரத்தி எடுக்கலாம். அதில் எந்தத் தவறுமில்லை.

திருமணம் முடித்து வரும் தம்பதிக்கு ஆரத்தி எடுப்பது அவர்க ளுக்கு ஏற்பட்டிருக்கும் திருஷ்டியைப் போக்குவதற்காகத்தான். ஆரத்தி எடுக்கும்போது மஞ்சளையும் சுண்ணாம்பையும்தான் பயன்படுத்த வேண்டும். சுண்ணாம்புக்கும் மஞ்சளுக்கும் திருஷ்டிகளைப் போக்கும் ஆற்றல் உண்டு. மஞ்சள்  கிடைக்காத பட்சத்தில், குங்குமத்திலும் மஞ்சள் இருப்பதால், குங்குமத்தைப் பயன்படுத்தலாம்.

?  பொதுவாக சந்தியா காலத்தில் உணவு உண்ணக்கூடாது என்று சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம்?

- கே.ராமன், செங்கல்பட்டு


நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு சாஸ்திரங்களில் பல விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலத்தை சந்தியா காலம் அல்லது பிரதோஷ காலம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. தெய்வ உபதேசம் பெற்ற மகரிஷிகளுக்கு முக்காலமும் தெரியும். எனவே, அவர்கள் வகுத்துக் கொடுத்திருக்கும் விதிகளில் ஆழ்ந்த அர்த்தமிருக்கும்.  

கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?

பொதுவாகவே ஒவ்வொரு நாளும் சந்தியா காலம் என்னும் பிரதோஷ வேளையில், இறைவ ழிபாட்டில் ஈடுபடுவது நமக்கு மட்டுமல்ல, நம் சந்ததிக்கும் அளவற்ற நன்மைகளை ஏற்படுத்தும். எனவே, அந்த வேளையில் நாம் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்தவேண்டும் என்பதற்காகத்தான் உண்பது மட்டுமல்ல, வேறு எந்தச் செயலையும் செய்யவேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

? நான் திருமணம் நடைபெறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதற்காக, திருவிடந்தை கோயிலுக்குச் சென்று வந்தேன். வரும் வழியில் கோயிலில் கொடுத்த மாலை தவறிவிட்டது. நான் என்ன செய்வது?

- சி.மாலதி, திருத்தணி


மாலை தவறிவிட்டது பற்றி கவலைப்பட வேண்டாம். ‘தலைக்கு வந்தது தலைப்பாகை யோடு போயிற்று’ என்பதுபோல், உங்களைப் பிடித்திருந்த தோஷம் நீங்கிவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்களால் உடனே கோயிலுக்குப் போகமுடிந்தால், போய் ஒரு மாலையை வாங்கி, சுவாமியின் திருவடிகளில் சமர்ப்பித்து வாங்கிக்கொள்ளுங்கள். 

கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?

நீங்கள் தொலைவிலிருந்து உடனே போக முடியவில்லையென்றால், ஒரு மாலையை வாங்கிக்கொண்டு, உங்கள் ஊரிலேயே இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளின் திருவடிகளில் சமர்ப்பித்து வாங்கிக்கொள்ளுங்கள். திருமணம் முடிந்த பிறகு வேண்டிக்கொண்ட கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டு வாருங்கள். மாலை தொலைந்தது பற்றி கவலை வேண்டாம். விரைவில் உங்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

? திருஷ்டி கழிப்பதற்கு ஏற்ற நாள் எது, எந்த முறையில் திருஷ்டி கழிக்கவேண்டும்?

- வி.மகாலட்சுமி, காரைக்குடி


திருஷ்டி கழிப்பதற்கு ஏற்றவை ஞாயிறு, அமாவாசை ஆகிய நாள்களாகும். ‘திருஷ்’ என்றால், பார்த்தல் என்று பொருள். நம்முடைய வசதி வாய்ப்புகளை, மற்றவர்கள் பொறாமையுடன் பார்க்கும்போது நமக்கு திருஷ்டி ஏற்படுகிறது. திருஷ்டியின் விளைவாக நமக்குப் பல வகைகளிலும்  இடையூறு ஏற்படுகிறது.

எனவே, நாம் திருஷ்டியைப் போக்க சுற்றிப்போடுகிறோம். கற்பூரம், பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சைப்பழம் போன்றவற்றைக் கொண்டு திருஷ்டி சுற்றி, வீதியோரத்தில் உடைக்கிறோம். வீட்டிலிருப்பவர்கள் உப்பை கையில் எடுத்துக்கொண்டு திருஷ்டி சுற்றிவிட்டு, அந்த உப்பை தண்ணீரில் போட்டுவிடலாம்.

கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?



?  வீட்டுப் பூஜையறையில் நடராஜர், குழலிசைக்கும் கிருஷ்ணர், சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்வதுபோல் இருக்கும் ஆஞ்சநேயர் படங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்கிறார்களே, இது சரியா?

- எம்.சேதுராமன், காரைக்குடி


கடவுள் உருவமற்றவர். அவரே நம் பொருட்டு உருவமாகவும், ரூபாரூபமாகவும் காட்சி தருகிறார். சிவலிங்க வடிவம் என்பது ரூபாரூப வடிவம். சிவபெருமான் உருவமாகவும் இல்லாமல், அருவமாகவும் இல்லாமல் ரூபாரூபமாகக் காட்சி தரும் வடிவம்தான் சிவலிங்க வடிவம். அவரே நடராஜராக உருவமேற்று நமக்குக் காட்சி தந்து அருள்புரிகிறார்.  நடராஜர் பிரபஞ்ச இயக்கத்தின் வடிவம். அவர் பிரபஞ்சக் கூத்தாடி. அவருடைய படத்தை வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம்.

குழலிசைக்கும் கிருஷ்ணர் படத்தையும் வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாம். கிருஷ்ணர் குழலிசைக்கும்போது பசுக்களெல்லாம் அவரைத் தேடி வரும். கிருஷ்ணரின் புல்லாங்குழலில் இருக்கும் துவாரங்களைப் போலவே நம்முடைய உடலிலும் ஒன்பது துவாரங்கள் உள்ளன. கிருஷ்ணர் இசைக்கும் குழலின் இசை நம் மனதில் உள்ள சஞ்சலங்களை அகற்றிவிடும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். 

கேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?



‘சரீரம் ஆத்யம் கலு தர்ம சாதனம்’ என்பது மகாகவி காளிதாசனின் வாக்கு. நம் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் தர்மம் செய்யவும், அதன் மூலம் வாழ்க் கையின் பலனை அடையவும் முடியும். எனவே, குழலிசைக்கும் கிருஷ்ணரின் படத்தையும் வைத்து வழிபடலாம். சஞ்சீவிமலையை தூக்கிக்கொண்டு வரும் ஆஞ்சநேயர் படத்தைக் கூட வீட்டில் வைத்து வழிபடலாம். சஞ்சீவி மலை என்பது பல மூலிகைகளால் நிறைந்தது. உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்படிச் செய்வது. மேலும் ஆஞ்சநேயர் வாயு புத்திரர். காரியங்கள் வெற்றிகரமாக முடிவதற்கு அருள் செய்பவர். ஆகவே, ஆஞ்சநேயரின் எந்த படத்தையும் வீட்டில் வைத்து வழிபடலாம். அதனால் நன்மையே ஏற்படும்.

? கடன்களால் நான் மிகவும் கஷ்டப்படு கிறேன். கடன்களிலிருந்து மீள்வதற்கு,  வீட்டிலிருந்தபடியே செய்யும்படியான எளிய பரிகாரங்கள் இருக்கின்றனவா?

- க.முருகைய்யா, திருநெல்வேலி-2


கவலையே வேண்டாம். காலையில் 6 மணிக்குள் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறை யில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி, சுவாமியை வழிபடுங்கள். அதேபோல் மாலை சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக அதாவது மாலை 6 மணியளவில் செய்யுங்கள்.

இப்படிச் செய்வதுடன், காலை சூரிய உதயத்தின்போதோ, மாலை சூரிய அஸ்தமனத்தின்போதோ தூங்கிக்கொண்டி ருக்கக் கூடாது. தண்ணீரை வீணாக்கக்கூடாது. காரணம் தண்ணீருக்கு அதிபதியான வருணன், குபேரனைப் போலவே செல்வத்துக்கும் அதிபதி என்பதால், தண்ணீரை வீணாக்கக்கூடாது. தானியங்களையும் வீணாக்கக்கூடாது.

இப்படி எளிய முறைகளைக் கடைப்பி டித்தாலே போதும், கொஞ்சம் கொஞ்சமாக கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். எவ்வளவு பெரிய பங்களாவை எவ்வளவு பெரிய பூட்டு போட்டு பூட்டியிருந்தாலும், அதைத் திறப்பதற்கு ஒரு சிறிய சாவியே போதும் என்பதைப்போல், இந்த சிறிய எளிய பரிகாரங்களைச் செய்து வந்தாலே, நீங்கள் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபட்டுவிடலாம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே! இந்த இதழ் முதல் ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி  கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002