Published:Updated:

விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!

Published:Updated:
விழாக்கள் விசேஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள் விசேஷங்கள்!

வேல்மாறல் பாராயண வைபவம்

தி
ருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டார் தீர்த்தக் காவடிக் குழுவினர், வருடம்தோறும் ஈரோடு பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக் காவடி எடுத்துச் சென்று, பழநி பாலதண்டாயுதபாணிக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்து வருகின்றனர். இவ்வருடம் (9.4.18 அன்று) பழநி பாலதண்டாயுதபாணிக்கு 91-வது ஆண்டு காவிரி தீர்த்த அபிஷேகம் நடந்தது. 

விழாக்கள் விசேஷங்கள்!

அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெருந்துறை சக்தி திருமண மண்டபத்தில் (1.4.18) குன்றுதோராடல் வழிபாட்டுக்குழு சார்பில் வேல்மாறல் பாராயண பூஜை சிறப்பாக நடந்தது. சென்னையைச் சேர்ந்த ‘திருப்புகழ் அமுதன்’ வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் மற்றும் பவ்யா ஹரி ஆகியோர்,  தங்கள் குழுவினருடன் சேர்ந்து வேல்மாறல் பாராயணம் செய்தனர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழாக்கள் விசேஷங்கள்!

தொடர்ந்து 12 மணியளவில் வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பாதயாத்திரைக் குழுவினரின் காவடிக்கும், 120 தீர்த்தக் கலசங்களுக்கும் பூஜை நடைபெற்றது. நிறைவாக பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் நடைபெற்றது. 

விழாக்கள் விசேஷங்கள்!



- நவீன், படங்கள்: கே.தனசேகரன்

வருஷாபிஷேகம்

சே
லம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகிலுள்ள கோவிந்தம்பாளையத்தில், நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அவர்கள் கேட்கும் வரத்தை உடனே கொடுத்து அருள்புரிகிறார் கற்பக விநாயகர்.

சுமார் 500 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம் இது. சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்களைச் சேர்ந்த மக்கள், நெல் விதைப்பதில் துவங்கி, திருமணம், குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது என்று எந்த ஒரு நல்ல நிகழ்வுக்கும், இந்தக் கோயிலுக்கு வந்து கற்பக விநாயகரை வணங்கிவிட்டுத்தான் காரியத்தில் இறங்குவார்கள்.  

விழாக்கள் விசேஷங்கள்!

சில வருடங்களுக்கு முன்னர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வருடந்தோறும் வருஷாபிஷேக வைபவம் நடைபெற்று வருகிறது. 

விழாக்கள் விசேஷங்கள்!



இந்த வருட வருஷாபிஷேகம் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கற்பக விநாயகரின் திருவருள் பெற்றுச் சென்றனர்.

சித்திரைத் திருவிழா!

சே
க்கிழார் பெருமானால் கட்டப்பட்டதும், ‘வடதிருநாகேஸ்வரம்’ என்று பிரசித்திப் பெற்றதுமான குன்றத்தூர் அருள்மிகு நாகேஸ்வர சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வரும் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

விழாக்கள் விசேஷங்கள்!

விழாவின் முக்கிய வைபவமான தேர்த் திருவிழா, ஏப்ரல் மாதம் 26-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்று காலை 5.21 முதல் 5.50-க்குள் மேஷ லக்கினத்தில் நாகேஸ்வர ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருளி, திருவீதியுலா வைபவம் நடைபெறவிருக்கிறது. பக்தர்கள் கலந்துகொண்டு, இறையருள் பெறலாம். 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism