Published:Updated:

கலகலப் பக்கம்!

கலகலப் பக்கம்!

கலகலப் பக்கம்!

கலகலப் பக்கம்!

Published:Updated:
கலகலப் பக்கம்!
கலகலப் பக்கம்!

ம்ம ஆள் ஒருத்தர் பயங்கரமான வடைப் பிரியர். அவரது வாழ்க்கை லட்சியமே விதவிதமான வடைகளை வகை வகையாக ருசித்து, ரசித்துச் சாப்பிடுவதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இந்த ஓட்டலில் இந்த நேரத்துக்கு இந்த வடை போடுவான்; இன்ன நண்பர் வீட்டில் புதினா போட்ட மசால் வடை பிரமாதமாக இருக்கும். சங்கீத சீசனில், இன்ன சபாவுக்குப் போனால், கவிதை மாதிரி தயிர் வடை கிடைக்கும்’ என்றெல்லாம் வடை ஞானம் உள்ளவர்.

அவரது வடை மோகத்துக்குத் தடாலென தடை ஒன்று வந்தது. கிட்னி பகுதியில் வலிப் பதுபோல இருந்தது; மெடிக்கல் செக்கப்புக்குச் சென்றார். பரிசோதித்த டாக்டர், நண்பரின் தலையில் ஓர் இடியைப் போட்டார். ''பருப்பு வகையறாக்களில் புரோட்டீன் சத்து இருந்தா லும், ஓவராகச் சேர்த்தால், கிட்னியைப் பாதிக் கும்'' என்று எச்சரித்தார்.  

##~##
மெடிக்கல் செக்கப்புக்கு செல்லும்போது, மனைவியை அழைத்துச்செல்வது மகா பிசகு. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கிற கதைதான்!

வடைக்குத் தடை போட்டுவிட்டாள் நண்பரின் தர்ம பத்தினி. ரகசியக் 'கண்’காணிப்பு, 'காது’காணிப்பு, மூக்கு, வாய்காணிப்பு எல்லாம் தொடர்ந்தன!

நண்பர் பிரியத்துடன் சடை நாய் ஒன்றை வளர்த்து வந்தார். வடை நாய் என்றும் சொல்லலாம். காரணம், அதுவும், வடைப் பிரிய நாய்தான்!

தினமும் நாயை ஸ்பெஷல் சோப்பு போட்டுக் குளிப்பாட்டுவார். வாக்கிங் செல்லும்போது, கூடவே நாயையும் அழைத்துச் செல்வார்; வீடு வந்ததும், அதன் கால்களைக் கழுவிவிடுவார். கணவரின் இத்தனைப் பொறுப்பு உணர்ச்சி, மனைவியை ரொம்பவே கவர்ந்தது.

ஒருநாள், நண்பர் வெளியூர் போயிருந்தார். நாய் தனியே வாக்கிங் போய்விட்டு (ஊர் சுற்றிவிட்டு), எட்டு மணி வாக்கில் வீடு திரும்பியது. அதன் வாயில் எதையோ கவ்விக்கொண்டிருந்தது. எஜமானியம்மா, அதை அருகில் அழைக்க, கிட்டே வந்த நாய், அவள் முன் தான் கவ்வி வந்த பொட்டலத்தைப் போட்டது. பிரித்துப் பார்த்தாள். அதனுள்... முழு மசால் வடை!

வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, கடையிலிருந்து வடை வாங்கி வர, நாயை அருமையாகப் பழக்கி வைத்திருந்தார் மனிதர்!  'அடப்பாவி மனுசா! உன் மசால் வடை ஆசை, இத்தனைக் கேவலமானதா?!’ என்று இடிந்துபோனாள் மனைவி. 'ஒரு நாய்க்கு வாழ்க்கைப்பட்டதற்கு வெட்கப்படுகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுப் பிறந்தகம் சென்றவள்தான்; இன்றுவரை திரும்பினதாகத் தகவல் இல்லை.

நண்பரின் மசால் வடை ஆசை, மனைவியையே பிரித்துவிட்டது.

கீதையில் பகவான், அர்ஜுனனுக்குச் சொல்கிறார்... ''ஹே, அர்ஜுனா! மனம் என்பது அடக்குவதற்கு அரியது. அது நிலை யற்றது. அதில் சந்தேகமில்லை. ஆனால், பயிற்சியாலும் வைராக் கியத்தாலும் அதை அடக்க முடியும்!''

அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேனது கௌந்தேய வைராக்யேணச க்ருஹ்யதே

நண்பர் தன் நாய்க்குப் பயிற்சி கொடுத்துப் பழக்கியதற்குப் பதிலாக, தன் நாவுக்கும் மனசுக்கும் பயிற்சி கொடுத்துப் பழக்கியிருந்தால் பிரச்னையே இல்லையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism