Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)

திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)

ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சுவாமிகள்சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)

ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சுவாமிகள்சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)

தெய்வமே தனக்குக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட சிவசிதம்பரம் பிள்ளை, தான் எது செய்வதாக இருந்தாலும், குழந்தை யிடம் கேட்டுவிட்டே செய்தார். இனி அந்தக் குழந்தையை ‘ஸ்ரீஸ்வாமிகள்’ எனும் பெயரிலேயே பார்க்கலாம்.  

திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)

ஒருநாள் சிவசிதம்பரம் பிள்ளை, சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்று கேட்டபோது, அதற்குத் தடை விதித்த  ஸ்ரீஸ்வாமிகள், காரணத்தையும் கூறினார். அவர் கூறிய காரணம் பிள்ளையை அதிர்ச்சியடையச் செய்தது.

“நாளை மதியம் இரண்டு மணியளவில், உங்கள் தாயார் உலகத்தைவிட்டே போகப் போகிறார்!” என்றார் ஸ்ரீஸ்வாமி கள். சிவசிதம்பரம் பிள்ளை ஒரு விநாடி திடுக்கிட்டாலும் , “என் தாயார் தேக ஆரோக்கியத்தோடு நன்றாகத்தானே இருக்கிறார். எந்தக் காரணமும் இல்லையே! பிறகு எப்படி..?” எனக் கேட்டார்.

“புரை ஏறும்; விக்கல் வரும். அதன் காரணமாகப் போய்விடுவார்” எனப் பதில் சொன்னார் ஸ்ரீஸ்வாமிகள். அதன் பிறகு தந்தை போவாரா? பயணத்தை நிறுத்தினார். மறுநாள், ஸ்ரீஸ்வாமிகள் சொன்னபடியே, சிவசிதம்பரம் பிள்ளையின் தாயார், பூவுலக வாழ்வை நீத்தார்.

பள்ளிக்குச் சென்றது மூன்றே மாதங்கள்!

தம்பி நமசிவாயத்துடன் ஸ்ரீஸ்வாமிகளைப் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். பள்ளியிலும் ஸ்ரீஸ்வாமிகளின் தனித்தன்மையும் ஞானமும் வெளிப்பட்டன. 

திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)

ஒருநாள், ஆசிரியரின் குழந்தை, வீட்டுத் திண்ணையிலிருந்து தவறி விழுந்து கையை ஒடித்துக்கொண்டது. ஆசிரியர் அப்போது பள்ளியில் இருந்தார். ஸ்ரீஸ்வாமிகள் ஆசிரியரிடம் சென்று, ``ஐயா! உங்கள் குழந்தைக்குக் கை ஒடிந்துவிட்டது. உடனே போய்ப் பார்த்து வாருங்கள்!’’ என்றார். ஸ்ரீஸ்வாமிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்த ஆசிரியர், அவசர அவசர மாகப் புறப்பட்டு வெளியே வரவும், ஸ்வாமிகள் சொன்னது உண்மை என்ற தகவலும் வந்து சேர்ந்தது. வீட்டுக்குச் சென்று குழந்தைக்குச் செய்ய வேண்டிய  சிகிச்சைகளைச் செய்துவிட்டு பள்ளிக்குத் திரும்பினார்.

அதன்பிறகு ஆசிரியருக்கு, ஸ்ரீஸ்வாமிகளின்  மீதான மதிப்பும் பக்தியும் அதிகரித்தன. ஸ்ரீஸ்வாமிகள் பள்ளிக்குள் நுழையும்போதே எழுந்து நிற்கத் தொடங்கினார். ஸ்ரீஸ்வாமிகளின் அனுமதியின்பேரிலேயே அமரும் வழக்கத்தை மேற்கொண்டார். அதைப் பார்த்த ஸ்ரீஸ்வாமிகள், பள்ளிக்குச் செல்வதையே நிறுத்திவிட்டார். ஸ்ரீஸ்வாமிகள் பள்ளிக்குப் போனது மூன்று மாதங்கள் மட்டுமே!

பார்வையால் நீங்கின பிணிகள்

பற்பல திருத்தலங்களுக்குச் சென்று, பலருக்கும் அருள் புரிந்த ஸ்ரீஸ்வாமிகள், சென்னை திருவொற்றியூருக்கும் வந்தார். அவர்,  திருவொற்றி யூர் கடற்கரையிலும் பட்டினத்தார் சமாதிக்கு அருகிலும் வசித்த காலத்தில், திருவொற்றியூரில் இருந்த அந்தணப் பெண் ஒருத்தி, துஷ்ட தேவதை களால் பீடிக்கப்பட்டு, பைத்தியம் பிடித்தவளாக இருந்தாள். உடை நழுவுவதுகூடத் தெரியாமல் தெருவில் ஓடுவதும், எதிர்ப்படுபவர்களைத் திட்டு வதும் அடிப்பதுமாகத் திரிந்துகொண்டிருந்த அந்தப் பெண்ண, வீட்டில் அடைத்து வைத்தாலும், வெளியில் ஓடிவந்துவிடுவாள்.

திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)

மனம் நொந்துபோன அவளுடைய தகப்பனார், சிகிச்சைகள் பலவும் செய்து, கடைசி முயற்சியாக மாந்திரீக நிபுணர்களையும் வரவழைத்துப் பார்த்தார். விபரீதமான பலன்களே விளைந்தன. வந்து பார்த்தவர்கள் அனைவருக்கும் காய்ச்சல், தலைநோய் முதலியன உண்டாயிற்று. அதன் பிறகு அவளைப் பார்க்க யார் வருவார்கள்?

இதனால் மனம் உடைந்துபோன தந்தை திருவொற்றியூர் சிவன் சந்நிதிக்குப் போனார்; “ஒற்றியூரா! இரங்கி அருள்செய்! என் மகளுக்குண்டான நோய்-பேய் முதலியவற்றை மூன்று நாள்களுக்குள் நீ சரிசெய்து அருளவேண்டும். இல்லையேல், அவளுக்கு விஷம் கொடுத்துக்  கொன்றுவிடுவேன். அந்தக் கொலை மூலம் வரும் பாவத்தை, உனக்கே சமர்ப்பணம் செய்து விடுவேன். இது சத்தியம்!” என்றார்.

வீடு திரும்பி அவர் தூங்கும்போது, அவர் கனவில் திருவொற்றியூர் சிவபெருமான், ஒரு தவசி வடிவில் எழுந்தருளி, “ஞான சித்தன் ஒருவன் பட்டினத்தார் சமாதியருகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். நாளை காலை அவன் நிஷ்டையில் இருப்பான். அவன் பார்வை படும்படியாக, உன் மகளை அழைத்துக்கொண்டு போய் நிறுத்து! அவளுடைய நோய் - பேய் முதலான அனைத்தும் தீர்வதோடு, பிறவிப் பிணி யும் தீரும்” என்றார். கனவு கலைந்த பெண்ணின் தந்தை, மறுநாள் அதன்படியே செய்ய, ஸ்ரீஸ்வாமி களின் பார்வை பட்டு நோயும் பேயும் விலகின. அந்தணப் பெண் நலம்பெற்றாள்; எட்டாவது நாளில் முக்தியும் பெற்றாள்.

தேங்காய் தின்ற பாவம் நீங்கிட...

மகான்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு வேண்டியவர்கள் - வேண்டாதவர்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஸ்ரீஸ்வாமிகளின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி அதை விளக்கும். 

திருவருள் செல்வர்கள்! - (தொடர்ச்சி)

தந்தை செய்யும் சிவபூஜைக்கு வேண்டிய உபகரணங்களையெல்லாம் தயாராக வைத்திருப் பார் ஸ்ரீஸ்வாமிகள். ஒருநாள், தம்பியான நமசிவாயத்திடம், ‘`நீ பிள்ளையார் கோயில் நந்த வனத்துக்குப் போகும்போது, அங்கே ஏதாவது தேங்காய் - மாங்காய் கீழே விழுந்திருந்தால், அதை எடுக்காதே. எடுத்தால், சிவ அபராதம் வந்து சேரும்’’ என்றார். தம்பி சிறுவன்தானே. எனவே, ஒருநாள் பிள்ளையார் கோயில் நந்தவனத்துக்குப் பூப்பறிக்கச் சென்றவர், அங்கே விழுந்து கிடந்த தேங்காய் ஒன்றை எடுத்து, உரித்து உடைத்துத் தின்றுவிட்டு, பூக்களைப் பறித்துக் கொண்டு வீடு திரும்பினார்.

ஸ்ரீஸ்வாமிகள் தம்பியைக் கூப்பிட்டார்; ‘‘பிள்ளையார் கோயில் நந்தவனத்தில் என்ன செய்தாய்? செய்த பாவம் கங்கையில் நீராடி, விசுவநாதரைத் தரிசித்தாலன்றி தீராது”என்றார். கூடவே, ``இனி,  பூஜைக்கான பூக்களை நீ பறிக்க வேண்டாம். ஐயாவே எடுத்துக் கொள்வார்” என்றார். சிறு வயதாக இருந்தும், ஸ்ரீஸ்வாமிகளின் வாக்கை ஏற்ற நமசிவாயம், செய்த தவறை எண்ணி மனம் வருந்தினார். சில நாள்கள் ஆனதும், பாவத்தைத் தீர்க்கக் காசியாத்திரை புறப்பட்டு விட்டார்.  யாராக இருந்தாலும் சரி, மகான்களின் துலாக்கோல் சாயாது; நேர் வழியில்தான்  நிற்கும் என்பதற்குச் சான்றான நிகழ்வு இது.

உடற் பிணி, மனப் பிணி ஆகியவற்றோடு பிறவிப் பிணியையும் தீர்த்துவைக்கும் ஸ்ரீஸ்வாமி கள், திருவாரூரில் மன்மத வருடம், ஆவணி மாதம், உத்திர நட்சத்திரத்தன்று ஸித்தியடைந்தார். மகான்களின் உடல் மறையலாம். அவர்களது அருள் வெள்ளம் மறையாது; ஓயாது. திருவாரூர் மடப்புரம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளின் மடத்தி்ல் இன்றும் இதை அனுபவிக்கலாம்!

படங்கள்: க.சதீஷ்குமார்